Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் சினிமாவை விட்டு 16 வருஷமாக விலக காரணமே இதுதான்! ஓபனாக போட்டு உடைத்த பாவனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பாவனா பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். இந்த நிலையில் இப்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் தான் எதற்காக 16 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக ஒரு சில நடிகைகளை பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் பாவனா. பாவனா 90's கிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகிகளில் ஒருவர். சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது.

Bhavana Sun TV

அட்டைப்படம்

அது மட்டுமில்லாமல் 90 கிட்ஸ்களின் காலகட்டத்தில் உள்ளவர்களின் கல்லூரி பருவத்தில் கிங் சைஸ் நோட்டு புத்தகத்தில் பாவனாவின் புகைப்படம் அதிகமாக இடம் பிடித்திருக்கும். அதிலும் தீபாவளி திரைப்படத்தில் பாவனாவின் க்யூட்டான போஸ்ட்கள் தான் அந்த புத்தகத்தின் அட்டையில் இருக்கும். பாவனாவிற்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகைகளும் அதிகம்.

Bhavana Sun TV

மறக்க முடியாத கேரக்டர்

தீபாவளி திரைப்படத்தில் சுச்சி கேரக்டரில் இவருடைய இரண்டு விதமான நடிப்பு இப்போதும் பலராலும் பாராட்டப்படுகிறது. அந்த திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் கொண்டான், அசல் போன்ற திரைப்படங்களில் பாவனா நடித்திருந்தார். கடைசியாக அசல் திரைப்படத்திற்கு பிறகு பாவனா தமிழில் எந்த படத்தில் நடிக்கவில்லை. ஆனால் மற்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Bhavana Sun TV

புதிய படம்

அதுபோல கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே கடந்த 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் பாவனா தற்போது தி டோர் (the door) என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

Bhavana Sun TV

மீண்டும் ரீ என்ட்ரி

16 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் இவர் தற்போது பேட்டிகளில் தான் எதற்காக இத்தனை வருடங்களாக சினிமாவில் தலைகாட்டவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் எனக்கு ஒரு சில தமிழ் படங்கள் வாய்ப்பு வந்தது. ஆனால் பட குழுவினருக்கும் இவருக்கும் சரியான தொடர்புகள் அமையாததால் பல படத்திற்காக வாய்ப்புகள் கைநழுவி விட்டது என்று கூறியிருக்கிறார்.

Bhavana Sun TV

நடிக்காத காரணம்

ஆனாலும் இப்போதும் அதிகமான ரசிகர்கள் என்னுடைய இன்ஸ்டாகிராமில் எனக்கு கமெண்ட் செய்யும்பொழுது சுச்சி என்று பேசுகிறார்கள். இது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி படத்தில் 200 டயலாக் இருந்தால் அதில் 50 டயலாக் மட்டும்தான் வேற வார்த்தைகள் இருக்கும். மீதம் உள்ள 150 வார்த்தைகளும் சுச்சி என்ற ஒரே பெயரில் மட்டும்தான் இருக்கும். அதை இப்போதும் ரசிகர்கள் நினைவில் வைத்து என்னை கூப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இருந்து எனக்கு சரியான வாய்ப்புகள் வராததால் தான் என்னால் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்று பாவனா கூறி இருக்கிறார்.

Bhavana Sun TV
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+