குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கினேன்! தன்னுடைய வாழ்க்கையையே புரட்டி போட்ட சம்பவத்தை பகிர்ந்த புவனேஸ்வரி
அப்பா எங்க கூடவே இருந்திருந்தால் நான் நடிகையாக மாறி இருக்க மாட்டேன் என்று நடிகை புவனேஸ்வரி கூறியிருக்கிறார்
சென்னை: நடிகை புவனேஸ்வரி தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு நடந்த சோகங்கள் மற்றும் வாழ்க்கை திருப்பத்திற்கான காரணங்களை பற்றி பேசியிருக்கிறார்.
தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதனால் சினிமா வாழ்க்கையில் தான் அடி எடுத்து வைத்தேன் என்பதை பற்றி நடிகை புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.
தனக்கு வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் போதும் தன்னுடைய மகன் மற்றும் மருமகள் தனக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள் என்று உருக்கமாக நடிகை புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.

ஒரு சிலருக்கு தான் இந்த வாய்ப்பு
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஜொலித்த நடிகர் நடிகைகள் அதிகமானோர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை புவனேஸ்வரி. இவர் ஆரம்பத்தில் விளம்பர மாடலாக இருந்து பின்பு சீரியலில் நடிக்க தொடங்கி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. சீரியலில் இவருக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லாமல் வாய்ப்பு கிடைத்து விட்டாலும் திரைப்படத்தில் இவருடைய திறமையை நிரூபிப்பதற்கு ஒரு சில வாய்ப்புகள் தான் கிடைத்திருக்கிறது.

பாய்ஸ் திரைப்பட அனுபவம்
நடிகை புவனேஸ்வரி முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு பாசமலர் என்கிற சீரியலில் சன் டிவியில் நடித்து வந்திருக்கிறார். அதற்கு பிறகு சந்திரலேகா, ஒரு கை ஓசை, ராஜராஜேஸ்வரி, தெக்கத்தி பொண்ணு, சித்தி போன்ற பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாய்ஸ் திரைப்படத்தில் ஒரு விபச்சார பெண்ணாக இவர் நடித்திருப்பார். அந்த கேரக்டரில் இவர் நடிக்கும் போது முதலில் ரொம்பவே யோசித்தாராம். இது முதல் முதலாக நடிக்கும் திரைப்படமே நமக்கு இந்த மாதிரி கேரக்டராக இருக்கிறதே என்று இவர் நினைத்தாராம். அப்போது இயக்குனர் சங்கர் தான். இந்த திரைப்படத்தில் நீ நம்பி நடிக்கலாம் நான்கு ஆண்களோடு நீ நடிச்சாலும் உன்னுடைய உடம்பில் அவர்களுடைய விரல் நுனி கூட படாது என்று கூறியிருக்கிறார்.

நடிக்க வந்த காரணம்
இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் தன்னுடைய தந்தை ஏழு வயதில் இருக்கும் போது எங்களை பிரிந்து விட்டு சென்று விட்டார். வேறு திருமணம் செய்து விட்டார். அவர் செல்லாமல் இருந்திருந்தால் நான் நடிகையாக மாறி இருக்க மாட்டேன். நான் நடிக்க வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. என்னுடைய அம்மாவிற்கு தான் நான் நடிக்க வேண்டும் என்று ஆசை, அப்பா இருந்திருந்தால் அது நிறைவேறி இருக்காது. நடிக்க வராமல் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகளும், வதந்திகளும் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

உறுதுணையாக இருந்தவர்கள்
குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கு அது சரியாக நடக்கவில்லை. என்னுடைய மகன் மற்றும் அம்மா மட்டும்தான் எனக்கு துணையாக இருந்தார்கள். வேறு எந்த உறவும் எனக்கு என்று இல்லாமல் போய்விட்டது. என்னைப்பற்றி பல்வேறு சர்ச்சைகள் வந்த போதும் ஒரு ஆண் மகனாக இருந்தாலும், அவனுக்கு தன்னுடைய அம்மாவை பற்றி பலர் பலவிதமாக பேசினாலும் அவன் என்னை முழுமையாக நம்பினான். எனக்கு எப்போதும் துணையாக இப்போதும் இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகனுக்கு கொரோனா காலகட்டத்தில் தான் திருமணம் நடந்தது என்றும், அதற்கு பிறகு அவருடைய மருமகளும் தன்னை நன்றாக புரிந்து தன் மீது பாசமாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

சர்ச்சைக்கு காரணம்
நடிகை புவனேஸ்வரிக்கும் சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் பற்றி ஆரம்பத்தில் அதிகமான சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், அதற்கெல்லாம் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரி 2009இல் விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக தகவல்கள் அந்த நேரத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தான் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டதால் சிலருடைய சூழ்ச்சிகளால் தான் தன்னைப் பற்றி அதிகமான சர்ச்சைகள் வந்தது என்று அப்போது நடிகை புவனேஸ்வரி விளக்கமும் கொடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications