விபச்சாரத்தில் நாலு நடிகைகள்? அன்று பகீரை தந்த பூனைக்கண் புவனேஸ்வரி.. வலி மிகுந்த வாழ்க்கை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூனைக்கண் புவனேஸ்வரி 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆன்மீகத்துக்கு நான் வந்து 8 வருடங்களாகிவிட்டது. தாராபுரம் காளி தேவி கோயிலில் நான் இருப்பதற்கு காரணம் காளிதேவிதான்.. என்னுடைய கனவில் தோன்றி, இந்த இடத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த இடத்தை 8 ஆண்டுகளாக அலைந்து தேடி, இப்போதுதான் வந்தேன். ஆன்மீக பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்" என்றார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கருத்து கூறியிருக்கிறார்.

Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "1994ல் நடிகை புவனேஸ்வரியிடம் நான் பேட்டி எடுத்திருக்கிறேன். சினிமா துறையில் தான் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார். ஆனால், அதையெல்லாம் பதிவு செய்யாதீங்க பிரதர் என்று கேட்டுக் கொண்டார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு கவர்ச்சி நடிகையாக நடிக்கும்போது, பல்வேறு பின்னடைவுகள் ஏற்படும்.

Television actress Bhuvaneswari Poonaikkan bhuvaneswari

உலுக்கி எடுத்த கட்டுரை

புவனேஸ்வரி குறித்த செய்தி அன்று தமிழ்நாட்டையே உலுக்கியது.. ஒரு பிரபல நாளிதழையே ஆடவைத்த சம்பவமும் உள்ளது. ஒருமுறை விபச்சார வழக்கில் புவனேஸ்வரியை கைது செய்தபோது, "நான் விபச்சாரி என்றால், இந்த 4 நடிகைகள் யாரு' என்று பகிரங்கமாகவே அந்த நடிகைகளின் பெயர்களை சொல்லி கேள்வி கேட்டார்.
ஒரு பிரபல நாளிதழ், அந்த நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, புவனேஸ்வரியின் பேட்டியை அரை பக்கத்துக்கு வெளியிட்டிருந்தது. அந்த பேட்டி மிகவும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது. அப்போதிருந்த நடிகர் சங்கம் ஒன்று திரண்டு கண்டித்தது. வெளிநாட்டிலிருந்த ரஜினியை வரவழைத்து, வலுக்கட்டாயமாக கண்டித்து பேச வைத்தார்கள்.

பத்திரிகை எடிட்டர்

கலைஞர் கருணாநிதி அப்போது முதல்வராக இருந்தார்.. அவருடைய வீட்டுக்கே எல்லாருமே சென்று முறையிட்டனர்.. அந்த பத்திரிகையின் எடிட்டரை கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்து, அவரை கைது செய்து, அந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வைத்து.. இப்படியெல்லாம் சர்ச்சை அன்று வெடித்தது. புவனேஸ்வரி அன்று தந்த அரைபக்க கட்டுரை, தீயாய் பரவி பரபரப்பை உண்டுபண்ணியிருந்தது.

அதற்கு பிறகு புவனேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை,. இப்போது இந்த ஆன்மீக செய்தியை பார்க்கும்போதுதான், எந்த அளவுக்கு மன உளைச்சல், மன அழுத்தம் இருந்திருக்கும்?

காளி புவனேஸ்வரியை கூப்பிட்டாரா?

கனவில் வந்து புவனேஸ்வரியை காளி கூப்பிட்டாங்களோ? இல்லையோ தெரியாது.. ஆனால், அதைத்தாண்டி, அனைவருக்குமே ஒரு வடிகால் தேவைப்படுகிறது. அதிலும் நடிகர்களை தாண்டி, நடிகைகளுக்கு மிகப்பெரிய மனஅழுத்தம் இருக்கும்.. அதற்கு மிக முக்கிய காரணம், நடிகைகளின் திரைவாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலகட்டம்தான்.. சம்பளமும் மிகவும் குறைவு.

இப்போதுகூட, ஹீரோயின்களுக்கு சம்பள பாகுபாடு உள்ளது.. தனிப்பட்ட சிக்கல்களிலிருந்தும் இவர்களால் எளிதில் மீள முடியாது.. இதெல்லாம் பார்த்துததான், வெறுத்துப்போய் சினிமாவை விட்டே நடிகைகள் ஓடிவிடுகிறார்கள். குணா படத்தில் நடித்த ஹீரோயின் அந்த படத்தோடு ஓடிவிட்டார்கள்.. "பார்க்கிறவன் கண்ணு பூராவும் பயமா இருக்கு" என்று அவர் ஒரு பேட்டியே தந்திருந்தார்.

வலி மிகுந்த வாழ்க்கை

எனவே, எல்லாருமே, எல்லாவற்றையுமே சகித்துக் கொண்டு சினிமா துறையில் இருக்க முடியாது. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, முன்னணியில் வைராக்கியத்தில் வந்தவர்களும் உண்டு.. அதனால் நடிகைகள் எல்லாரையுமே தவறாக பேசிவிட முடியாது.

புவனேஸ்வரி சாமியாரா போயிட்டாங்களாம் என்று இன்று அவரை கேலியாக பேசினாலும், அதற்கு பின்னால் உள்ள வலி, மிகவும் கொடுமையானது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+