எதிர்நீச்சல்: கடைசி நாளில் நடந்தது? “அவங்க” ரொம்ப அழுதாங்க! மெயிலில் வந்த விஷயம்! பட்டம்மாள் ஓப்பன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் முடிவு குறித்து அந்த சீரியலில் பட்டம்மாவாக நடித்த நடிகை பாம்பே ஞானம் சில தகவல்களை கூறியிருக்கிறார். எதிர்நீச்சல் சீரியல் எதனால் திடீரென்று முடிவுக்கு வந்தது. அந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் போது என்ன நடந்தது என்ற பல ரகசியங்களை பாம்பே ஞானம் பகிர்ந்திருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. சின்ன திரையில் இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்ததை தொடர்ந்து இணையத்திலும் அதிகமாக அந்த சீரியல் குறித்து பேசப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியலில் குறைய தொடங்கியதும் இந்த சீரியலுக்கு நெகட்டிவ் கருத்துகள் வர தொடங்கியது.

அந்த நேரத்தில் திடீரென்று கடந்த ஜூன் எட்டாம் தேதியோடு இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த சீரியலின் பல பிரச்சனைகள் முடிவுக்கு வராமலேயே சீரியல் முடிந்து விட்டது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் எதற்காக இவ்வளவு அவசரமாக சீரியல் முடிவுக்கு வந்தது என்பது குறித்து பாம்பே ஞானம் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் பாம்பே ஞானம் பேசுகையில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாகத்தான் பழகி இருந்தார்கள். எனக்கு அதிகமான காட்சிகள் ஆரம்பத்தில் இருந்தது. அப்போது நானும் அவர்களோடு பேசி பழகி இருக்கிறேன். ஆனால் நான் அவர்கள் போன்று ரொம்ப பழகியது கிடையாது. ஆனால் அந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் கேரக்டரில் நடித்தவர்களும் சரி மருமகள் கேரக்டரில் நடித்தவர்களும் சரி எல்லாருமே ரொம்பவும் டீப்பாக இருந்தார்கள்.

ஆனால் இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வருகிறது என்று சொன்னதும் அவர்களால் தாங்க முடியவில்லை. கடைசி நாள் ஷூட்டிங் அன்று எல்லோருமே அழுதுவிட்டார்கள். அதிலும் ஹரி பிரியா எல்லாம் ரொம்பவே அழுதுவிட்டார். அவர் அடுத்த நாள் வேலை இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று ரொம்பவே புலம்பி கொண்டிருந்தார். காரணம் இந்த சீரியல் 5 வருடங்களுக்குப் போகும் என்று எல்லா நடிகர்களும் ஒரு பெரிய கமிட்மெண்ட் வைத்திருப்பார்கள்.
திடீரென்று இந்த சீரியல் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வந்து விட்டதால் அவர்கள் இந்த சீரியலை நம்பி வாங்கி வைத்திருந்த கடன்கள் இஎம்ஐ போன்றவற்றை எப்படி கட்ட போகிறோம் என்ற ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதுதான் அங்கு பலரும் சொல்லிக் கொண்டிருந்தது. அதுபோல எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் அதிகமான விறுவிறுப்போடு இருந்தது.
ஆனாலும் மாரிமுத்து இறந்ததற்கு பிறகு சீரியலில் கதையில் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கதையை மாற்றி இருந்ததுதான் சீரியலுக்கு சறுக்கலாக அமைந்திருந்தது. தர்ஷினி கடத்தல் எபிசோடு கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு இழுத்தது. அது எல்லோருக்குமே பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்படி எடுத்ததற்கு காரணம் சீரியல் நிறைய நாட்கள் போக வேண்டும் என்ற காரணமாகவும் இருந்தது.
இன்னொன்று கேமரா மேன் அந்த சீரியலில் அழகாக காட்சிகளை படம் பிடித்து விடுவார். அதற்காக கூட நிறைய நாட்கள் கதையை இழுத்து இருக்கலாம். அதுதான் மக்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட வைத்தது. அதன் காரணமாக சீரியலின் டிஆர்பியும் குறைந்து விட்டது. ஒரு வாரம் டிஆர்பி குறைந்ததும் சேனல் தரப்பில் இருந்து வேறு நேரத்திற்கு சீரியலை மாற்ற சொல்லி இயக்குனருக்கு மெயில் வந்திருக்கிறது.
ஆனால் அப்படி வேறு ஒரு நேரத்திற்கு இந்த சீரியலை மாற்றவும் முடியாது அதற்கு காரணம் இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகுவதால் இதில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் எல்லோருக்குமே அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ப்ரைம் டைம் சீரியலுக்கு பட்ஜெட் அதிகமாக தான் இருக்கும்.
நான் ப்ரைன் டைமுக்கு மாற்றினால் பெரிய பிரச்சனை ஆகும். அதன் காரணமாக இயக்குனர் அப்படி மாற்ற முடியாது என்று நினைத்து இருக்கலாம். ஆனாலும் அவருக்கு அதை விளக்குவதற்கு நேரம் கொடுக்காததால் தான் சீரியல் வேறு வழியில்லாமல் திடீரென்று முடிக்கப்பட்டது என்று அந்த பேட்டியில் பாம்பே ஞானம் பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications