நடிகை சினேகாவுக்கு போட்டியாக “கயல்” சைத்ரா தொடங்கிய பிசினஸ்.. ஆரம்பமே அமோகம்.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி தான் புதியதாக புடவை கடை தொடங்கப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சில நடிகைகளுக்கு தான் சீரியலில் நடித்தாலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு போன்று ரசிகர்கள் இருக்கின்றார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. சைத்ரா தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு பதிலாக நடிக்க தொடங்கி இருந்தாலும் முதல் சீரியலிலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர்.

பொதுவாக நடிகைகள் ஒரு சீரியலில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிட்டால் தொடர்ந்து அது போன்றே கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். ஆனால் சைத்ரா மட்டும்தான் முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்துவிட்டு அதைத் தொடர்ந்து வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாகவும் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகர் அஜித்துடன் வலிமை படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த படத்திலும் நடித்திருந்தார்.
அதுபோல அந்த நேரத்திலேயே கயல் சீரியலிலும் பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்களை உருவாக்கி விட்டது. இப்போது இந்த சீரியலில் கயலுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு மக்கள் இருக்கின்றனர். இந்த நேரத்தில் சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அது அதிகமான லைக்களை பெற்று வருகிறது.

அதில் சைத்ரா பெங்களூரில் புடவை கடை ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நிலவரசி என்ற பெயரில் இவர் புடவை கடையை ஆரம்பிக்க இருப்பதாகவும் இவர் கடையில் விற்பனைக்கு இருக்கும் புடவைகள் எல்லாமே பிரத்யேகமாக நெய்தது என்றும் கூறியிருக்கிறார் அதோடு இவரே ஆர்டர் கொடுத்து நெய்து வந்த புடவைகளை மட்டுமே இவர் தன்னுடைய கடையில் விற்கப் போவதாகவும் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
அதோட ஆகஸ்டு ஒன்பதாம் தேதி சைத்ரா தன்னுடைய கடையை திறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் நண்பர்கள் சக நடிகர்கள், ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். வெள்ளி திரையில் சினேகா உட்பட பல நடிகைகள் புடவை கடை திறந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் இப்போது நடிகை சைத்ராவும் இடம் பிடித்திருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications