விஷாலை எத்தனையோ பேர் வீட்டுக்கு கூப்பிடுவாங்க! ஆனால் சுசித்ரா சொன்னது நியாயம் இல்லை! சார்மிளா ஆதங்கம்
சென்னை: நடிகர் விஷால் தன்னுடைய வீட்டிற்கு மதுபாட்டிலோடு வந்தார் என்று சில தினங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதற்கு நடிகை சார்மிளா தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே விஷால் பற்றிய பேச்சு இணையத்தில் அதிகமாக இருக்கிறது. விஷால் 12 வருடங்களுக்கு முன்பு நடித்து முடித்த மதகஜராஜா திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி வந்திருந்தார். அவருடைய கைகள் எல்லாம் நடுங்கி கொண்டு இருந்தது, அதோடு முகமும் வீக்கமாகி கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

இதனால் ரசிகர்கள் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று பதறிப் போய் இருந்தனர். சமூக வலைதளத்திலும் விஷாலுடைய நிலையை தெரிந்து கொள்வதற்காக அதிகமான ரசிகர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் விஷாலுடைய தற்போதைய நிலை குறித்து பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.
ஒரு சிலர் விஷால் உடைய தவறான நடவடிக்கைகளால் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது, அவருடைய நிலைமை இனி அவ்வளவு தான் என்றெல்லாம் கூட கூறி வருகிறார்கள். ஆனால் விஷாலுக்கு நெருங்கியவர்கள் விஷால் மீண்டும் இதிலிருந்து மீண்டு வருவார் அவர் இப்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் அதிலிருந்து விரைவில் நலம் பெற்று விடுவார் என்று கூறி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் என்னுடன் வீட்டில் இருக்கும்போது விஷால் ஒருநாள் இரவு நன்றாக குடித்துவிட்டு கையில் மது பாட்டிலோடு வீட்டு கதவை தட்டினார்.
அப்போது வீட்டில் கார்த்திக்கில்லை என்று நான் சொன்னேன். அதற்கு விஷால் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார். நான் கார்த்திகை பார்க்க வேண்டும் என்றால் அவர் இருக்கும் இடத்திற்கு போங்க என்று சொல்லிவிட்டு வேகமாக கதவை பூட்டி கொண்டேன். அன்னைக்கு கையில் மது பாட்டிலோடு நின்ற விஷால் இன்று கையில் மைக்கை கூட பிடிக்க முடியாமல் நிற்கிறார்.
இது பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார். இதனால் சமூக வலைத்தளத்தில் விஷாலுடைய ரசிகர்கள் சுசித்ராவிற்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சர்மிளா சுசித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதில் சுசித்ரா எந்த நடிகர் டிரெண்டிங்கில் இருக்கிறார்களோ அவர்களை பற்றி ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறார். இதற்கு முன்பு பல நடிகர்கள் பற்றி பேசி இருக்கிறார் இப்போது விஷாலை பற்றி பேசி இருக்கிறார். விஷால் என்னுடைய வீட்டிற்கு வந்தார் என்று சொல்கிறாரே விஷாலை எத்தனையோ பிரபலங்கள் தங்களுடைய வீட்டிற்கு கூப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய வீட்டிற்கு கூட போவதற்கு விஷாலுக்கு நேரமில்லை.
அவ்வளவு பிஸியாக இருக்கிறார். ஆனால் அவர் சுசித்ரா வீட்டுக்கு போனார் என்று சொல்வது சரியா! அதுபோல எனக்கு கூட ஒரு உதவியாளர் இருக்கிறார் அதுபோல விஷாலுக்கும் உதவியாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் விஷாலுக்கு எல்லா வேலையும் செய்வார்கள் விஷால் குடித்தால் கூட அவருடைய பாட்டிலை அவர்கள்தான் தூக்குவார்கள்.
இப்படி இருக்கும்போது விஷால் கையில் மது பாட்டிலோடு இன்னொருத்தங்க வீட்டுக்கு போவாங்களா? அதுவும் அவருடைய நண்பர் கார்த்திக் என்றால் கூட அவரிடம் போன் பண்ணி நீ வீட்டில் இருக்கிறாயா என்று கேட்காமல் விஷால் போவாரா? நாம பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்ன வேணாலும் பேசலாமா?
விஷால் முன்னனி நடிகராக இருக்கிறார், அதுபோல சினிமா சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு யாரேனும் பிடித்திருந்தால் கூட அந்த நடிகைகளிடம் சொன்னால் அவர்களே விஷாலை தேடி வருவார்கள். ஆனால் அவர் இவரோட வீட்டுக்கு போய் கதவு தட்டினார் என்பது நம்ப முடியவில்லை என்று அந்த பேட்டியில் சார்மிளா பேசி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications