தனுஷ் மீண்டும் அப்படி வரணும்.. அந்த விஷயத்தை என்னால் மறக்க முடியாது! 20 வருடம் கழித்து சாயா சிங் ஓபன்
சென்னை: நடிகை சாயா சிங் தனுஷுக்கு ஜோடியாக திருடா திருடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த திரைப்படம் வெளியாகி 20 வருடம் கழித்து அந்த திரைப்பட சூட்டிங் போது என்ன
நடந்தது என்பது பற்றி சாயா சிங் பேசியிருக்கிறார்.
ஒரு சில திரைப்படங்கள் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் மக்கள் மனதில் தனி வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் சில திரைப்படங்களில் காட்சிகள் மக்களுடைய இயல்பு வாழ்க்கையில ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோலத்தான்
சில வருடங்களுக்கு முன்பு வெளியான திருடா திருடி திரைப்படம் இருந்தது.

இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சாயா சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் சாயா சிங்குக்கு தமிழில் பெரிய பிரபலத்தை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் ஊதாரித்தனமாக
சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் எதார்த்தமாக ஒரு இளம் பெண்ணை சந்திக்கிறார். பிறகு அவர்கள் இருவருக்கும் ஏற்படும் மோதல் மற்றும் காதலை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் நகரும்.
இவர்கள் இருவருக்குள் காதல் எட்டிப் பார்க்கும் ஆனாலும் இருவருக்குள் இருக்கும் ஈகோவால் இருவரும் காதலை வெளியே காட்டாமல் இருப்பார்கள். ஆனால் கடைசியில் காதல்தான் இவர்களின் ஈகோவை தாண்டி வெற்றி பெற்றுவிடும். அதுபோல
இந்த திரைப்படம் 90ஸ் காலகட்டத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதிலும் இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அதிலும் மன்மத ராசா பாடலுக்கு பல பேர் அடிமை என்று சொல்லலாம். அந்த நேரத்தில் திருமண விழாக்களாக இருந்தாலும் சரி எந்த பங்க்ஷன் ஆக இருந்தாலும்
சரி இந்த பாடலுக்கு பல குழந்தைகள் டான்ஸ் ஆடுவதை பார்க்க முடியும்.
அதுபோல இந்த திரைப்படத்தில் கதாநாயகிக்கு கால் விரலில் பெருவிரலை தாண்டி அதற்கு அடுத்த விரல் வளர்ந்து இருக்கும். அதை பார்த்து தனுஷ் இந்த மாதிரி கால் விரல் இருக்கும் பெண்களிடம் பார்த்து நடந்துக்கணும் என்று ஒரு பஞ்ச்
டயலாக் பேசியிருந்தார். இதற்குப் பிறகு அதிகமான இளைஞர்கள் பெண்களின் கால் விரல்களை நோட்டம் விட தொடங்கி விட்டார்கள்.
திருடா திருடி திரைப்படத்தில் சுள்ளானாக நடித்து வந்த தனுஷ் இப்போது மிரட்டும் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்த சாயா சிங் இப்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டுமேளம் சீரியலில் அவர்தான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது திருடா திருடி திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசி இருந்தார்.

அதில் மன்மத ராசா பாடலுக்கு சூட்டிங் நடக்கும்போது எனக்கு ஹை ஃபீவர் இருந்தது. ஆனால் நான் முடியாது என்று சொன்னால் அன்றைய சூட்டிங் கேன்சல் ஆகுவதால் பலருக்கு கஷ்டத்தை கொடுக்கும் என்று அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருந்தேன். ஆனால் அந்த பாட்டு இப்படி வந்திருக்கும் என்று எனக்கு தெரியாது.
படம் வெளியாகும் போது நான் தமிழகத்தில் இல்லை வெளியூரில் இருந்தேன். அதனால் படம் வெளியானதும் இயக்குனர் எனக்கு போன் செய்து பேசினார். அப்போது மன்மத ராசா பாட்டை பார்த்து பலர் தியேட்டரை கிழிச்சிட்டாங்கன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. ஏன் பாட்டு அவ்வளவு கேவலமா வந்து இருக்கா? என்று கேட்டேன்.
இல்ல அந்த பாட்டை ரிப்பீட்டு போட சொல்லி தியேட்டரை கிழிச்சிட்டாங்க என்று சொன்னாங்க. எனக்கு அப்ப கூட அது பெருசா புரியல அதற்கு பிறகு தான் எனக்கு ரசிகர்கள் இவ்வளவு ஆதரவு கொடுத்து இருக்காங்க என்று தெரிந்தது. அதுபோல அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தொடங்கினால் நடிப்பீங்களா என்று சாயா சிங்கிடம் கேட்டதற்கு கண்டிப்பாக நடிப்பேன் நான் முடியாது என்று சொல்லவே மாட்டேன்.
அதுவும் எனக்கு பெரிய புகழ் கொடுத்தது திருடா திருடி திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்த போது இருந்தது வேறு. இப்போது அவர் அதிகமாக வளர்ந்து இருக்கிறார். ஆனாலும் அவர் மீண்டும் அதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று அந்த பேட்டியில் சாயா சிங் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications