நடிகை சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்ததாக செய்தி! பதறிய கனிமொழி! நெகிழ்ந்த நாட்டுப்புற பாடகி!
சென்னை: தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்த நடிகை சின்னப்பொண்ணு, அந்த பணிகளை முடித்துக் கொண்டு தஞ்சை திரும்பிய போது பெரிய விபத்தில் சிக்கிய நிலையில் அவருக்கு தேவையான உதவிகளை கனிமொழி செய்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, வெங்கல குரலில் பாடி அசத்துவார். அவர் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடலை பாடியிருந்தார். அதை வைத்து கவிஞர் அறிவுமதி படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பை சின்னபொண்ணுக்கு கொடுத்தாராம்.
ஆனால் அந்த படம் ரிலீஸாவதில் ஏதோ சிக்கல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அறிவுமதிதான் சந்திரமுகி படத்தில் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடல் பாடுவதற்கான வாய்ப்பை வாங்கிக் கொடுத்தாராம்.
சந்திரமுகி
இது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியதை பார்க்கலாம். அவர் கூறியிருப்பதாவது: சந்திரமுகி படத்தில்தான் எனக்கு முதலில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
வாழ்த்துறேன் பாடல்
வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முதலில் நான் கவிஞர் அறிவுமதி சார் எழுதிய ஒரு படத்தில்தான் புக்கானேன். ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை. இது அறிவுமதி சாருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கும் போல!
நாட்டுப்புற பாடகி
அதனால் சந்திரமுகி படத்தில் நாட்டுப்புற பாடகி போன்ற வாய்ஸ் வேண்டும் என கேட்டதுமே என் பெயரை அவர் பரிந்துரைத்தார். அதுமட்டுமல்லாமல் வெறும் பாட்டு பாடினால் சின்னபொண்ணு யாரென முகம் தெரியாது. எனவே அந்த படத்தில் நடித்துக் கொண்டே பாடுவது போல் சீன் அமைக்க வேண்டும் என்றும் அறிவுமதி சார் கேட்டுக் கொண்டதாக இயக்குநர் வாசு சார் சொன்னார்.
இசை நிகழ்ச்சி
இதைத் தொடர்ந்து நிறைய பாடல்களை பாடினேன். இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். ஹிப் ஆப் ஆதி சாரின் இசை நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லண்டன், கத்தார் உள்ளிட்ட நிறைய நாடுகளுக்குச் சென்றுள்ளேன். கனடா மட்டும் போகாத குறை இருக்கிறது.
கலைமாமணி விருது
கலைமாமணி விருது கிடைக்க உதவியவர் கனிமொழி. அவர்தான் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சொல்லி எனக்கு கிடைக்கப் பெற செய்தார். அது போல் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தையும் அமைக்க கனிமொழி உதவினார். அது போல் அந்த நல வாரியத்தில் என்னை உறுப்பினராக சேர்த்தார்.
சங்கமத்தில் பாட்டு
சென்னை சங்கமத்தில் எங்களுக்கு பாடும் வாய்ப்பையும் கொடுத்தார். ஒரு முறை சென்னையில் நல வாரிய பணிகளை முடித்துக் கொண்டு நானும் என் கணவரும் பேருந்தில் சொந்த ஊருக்குச் சென்றுக் கொண்டிருந்தோம். அப்போது காரும் எங்கள் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்து
அந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். எனக்கும் என் கணவருக்கும் நெற்றியில் ஒரு ராடு கிழித்து பயங்கர காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் நாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தோம். நாங்கள் இருவருமே செத்து பிழைத்தோம் என சொல்லலாம்.
உயிரிழந்ததாக செய்தி
நாங்கள் இந்த விபத்தில் இறந்துவிட்டதாகவே சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. ஏனென்றால் அந்த அளவுக்கு பெரிய விபத்து! இது கனிமொழியின் கவனத்திற்கு சென்றது. உடனே ஆட்களை அனுப்பி சின்னபொண்ணுக்கு என்ன ஆயிற்று என பார்க்கச் சொன்னார். அவர்கள் விஷயம் தெரிந்து மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது எங்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்து கனிமொழியிடம் அந்த நபர் கூறியிருந்தார்.
உதவிய கனிமொழி
உடனே சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் டீனிடம் கனிமொழி பேசி, சின்னபொண்ணுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னைக்கு கூட அனுப்பி வையுங்கள் என கூறினாராம். உடனே நான் இருக்கும் வார்டு நோக்கி டீன் ஓடி வந்தார். என்னிடம் விஷயத்தை சொன்னார். அப்போது அவர், கனிமொழி மேடம் உங்கள் மீது எத்தனை மரியாதை வைத்திருந்தால் நேரடியாக எனக்கு போன் செய்து உங்களை கவனித்துக் கொள்ள சொல்வார்கள் என்றார்.
சென்னைக்கு வந்தேன்
பிறகு நெற்றியை இழுத்து வைத்து தைத்ததால் அது ஒரு மாதிரி அசிங்கமாக இருந்தது. அந்த நேரத்தில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு எல்லாரும் போனார்கள். என்னை வீட்டில் இருக்குமாறு சொன்னார்கள். ஆனால் நான் அடம்பிடித்து சென்றேன்.
கனிமொழி சொன்ன அட்வைஸ்
என்னை நிகழ்ச்சியில் பார்த்த கனிமொழி, சின்னப்பொண்ணு நல்லாயிட்டீங்களா? என்றார். நானோ, ஆமாம் மேடம், ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என சொல்லி என் நெற்றியை காட்டினேன். அதற்கு அவர் அதெல்லாம் வேண்டாம், அப்படியே விடுங்கள். இதுதான் உங்கள் உழைப்பின் அடையாளம் என்றார். அதனால் நானும் சர்ஜரி செய்யாமல் அப்படியே விட்டுவிட்டேன். இவ்வாறு சின்னபொண்ணு நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications