Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகுல் என் தம்பி என்பதற்காக சொல்லல.. அவனுக்கும் ஒரு நேரம் வரும்.. தேவயானி பேசிய வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தேவயானியின் தம்பியான நகுல் நடிப்பில் உருவாகியுள்ள "வாஸ்கோடகாமா" படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவயானி தன்னுடைய தம்பி குறித்து பல விஷயங்களை பேசி இருக்கிறார். அப்போது அதைக்கேட்டு கண் கலங்கிய நகுல் ஓடி வந்து அக்காவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

பொதுவாக அக்காக்களின் தம்பி மற்றும் தங்கைகள் தான் அவர்களுடைய முதல் குழந்தையாக இருப்பார்கள். அது பல வீட்டில் நடந்து கொண்டு இருந்தாலும் நடிகை தேவயானி வீட்டிலும் அது நிரூபணம் செய்து இருக்கிறார்கள். நடிகை தேவயானி பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொட்டால் சிணுங்கி திரைப்படத்தில் தொடங்கிய அவருடைய திரை பயணம் காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு வேறு விதமாக மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார்.

Television Devyani

அதற்கு பிறகு அப்போது இருந்து இப்ப வரைக்கும் சினிமா மற்றும் சீரியல்களில் முன்னணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய தம்பி நகுல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். ஆனால் தேவயானியின் தம்பியால் தேவயானி அளவிற்கு சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்பது தேவயானிக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் பாய்ஸ் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நகுல் அதைத் தொடர்ந்து காதலின் விழுந்தேன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். அந்த திரைப்படத்தில் சில பாடல்களையும் பாடி இருந்தார். அதற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 28இல் ஸ்ருதியை காதல் திருமணம் செய்தார். ஸ்ருதி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நடிகர் நகுல் எரியும் கண்ணாடி மற்றும் வாஸ்கோடகாமா என்ற இரண்டு படங்கள் நடித்திருந்த நிலையில் இது இரண்டும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கிறது.

இந்த நிலையில் வாஸ்கோடாமா திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பிரஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட தேவயானி தன்னுடைய தம்பி குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் என்னுடைய தம்பியின் தீவிரமான ஃபேன் அவனுக்கு அதிகமான திறமை இருக்கிறது. இதை நான் என்னுடைய தம்பி என்பதற்காக சொல்லவில்லை. உண்மையிலே நான் அவரை பார்த்து பிரமித்து போயிருக்கிறேன்.

அவன் அவனுடைய தன்னம்பிக்கை மற்றும் அழகான திறமையை வெளிக்காட்டுவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறார். அதற்கு சரியான இயக்குனர் மற்றும் கதைக்களத்திற்காக அவன் காத்திருக்கிறான். அவனுக்கும் ஒரு நேரம் வரும் அந்த நேரத்தில் எல்லாம் அவன் நினைத்தது மாதிரி நடக்கும். காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நான் நகுலின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன்.

என் தம்பி பாய்ஸ் திரைப்படத்திலிருந்து காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கும் எவ்வளவு வித்தியாசத்தை கொடுத்திருந்தார். அதற்கு பிறகும் அவர் நடித்த திரைப்படங்களில் அவர் தன்னுடைய பெஸ்ட் கொடுத்து இருந்தார். இப்படிப்பட்ட ஒரு தம்பியும் நானும் சினிமா துறையில் இருக்கிறோம் இந்த மாதிரி ஒரு அக்கா மற்றும் தம்பியின் காம்பினேஷன் எங்க இருக்குன்னு தெரியல.

Television Devyani

இதை பார்க்கும் போது என்னுடைய அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஆனா இப்போ அவங்க இல்ல.. என் தம்பியின் வளர்ச்சியை பார்க்கும் போது அம்மா, அப்பாவின் ஆத்மாவும் சந்தோஷம் அடையும். நான் என் தம்பிக்காக கூட இருக்கிறேன் என்று அவர்கள் பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நகுல் கண்கலங்கி அழுது கொண்டு இருக்கிறார்.

அப்போது தேவயானி நான் இந்த நேரத்தில் உனக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் சொல்வேன். நீ இன்னும் அதிகமாக வளர வேண்டும் என்று சொல்ல நகுல் தேவயாணியின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். அப்போது தேவயானி பேசுகையில் எல்லோருடைய வாழ்க்கையிலும் பார்ட் 2 கண்டிப்பாக வரும். அது முதல் பாகத்தை விட பெஸ்ட்டாக இருக்கும் என்று நீ நம்பு.

இதுவரைக்கும் நீ காத்திருந்ததற்கு இனி உனக்கு அதற்கான பலன் கிடைக்கும். இது என்னுடைய தம்பிக்கு மட்டுமல்ல எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். என்னுடைய தம்பிக்கு எல்லோரும் சப்போர்ட் செய்ங்க என்று அந்த பேட்டியின் இறுதியில் தேவயானி வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+