"வா வா என் தேவதையே.. " இனியா பாடியபோது கண்ணீர் விட்டது ஏன்? தேவயானி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் 'சரிகமப' நிகழ்ச்சியில் இனியா, "வா வா என் தேவதையே" என்ற பாடலைப் பாடியபோது தான் கண்ணீர் சிந்தியது ஏன் என்பது குறித்து நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் வித்யாசாகர் பாடல்களைப் பாடும் சுற்று நடந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

ஜீ தமிழில் 'சரிகமப' எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஜூனியர்களுக்கு 4 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தற்போது 5ஆவது சீசன் நடந்து வருகிறது.

television devayani iniya

இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். இதில் பாடகி ஸ்வேதா, சீனிவாஸ் உள்ளிட்டோர் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தேவயானியின் மகள் இனியாவும் பங்கேற்றுள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசைப் பள்ளியில் இசை பயின்றவர்.

திறமை

இந்த நிகழ்ச்சியில் தனது திறமையை அருமையாக நிரூபித்து வருகிறார். இதுவரை "மயில் போல பொண்ணு ஒண்ணு", "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்", "காதோரம் லோலாக்கு" உள்ளிட்ட பாடல்களைப் பாடி நடுவர்களிடமிருந்து நல்லதொரு பாராட்டைப் பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர்

தேவயானி நினைத்தால் ஏதாவது ஒரு இசையமைப்பாளரிடம் சொல்லி தனது மகளுக்கு வாய்ப்புகளைப் பெற முடியும். ஆனால், தனது மகளாக இருந்தாலும் சொந்த உழைப்பில் முன்னுக்கு வர வேண்டும் என தேவயானி கருதுகிறார். இதற்காகவே அவரைப் பலர் பாராட்டி வருகிறார்கள்.

தனித்துவமான குரல்

இனியாவுக்கென தனித்துவமான ஒரு குரல் இருக்கிறது. அதிலும் ஹைபிச்சில் பாடும்போது அந்தக் குரல் அழகாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பாவாடை சட்டை, தாவணி என பாரம்பரிய உடையிலேயே இனியா வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒரு முறை இனியாவின் தாய் மாமா நகுல் வந்திருந்தார்.

சிறப்பான நிகழ்ச்சி

அவர் முன்புதான் "காதோரம் லோலாக்கு" பாடலை இனியா பாடினார். அப்போது இனியா கிதார் வாசிக்க, நகுல் பாட... அன்றைய நிகழ்ச்சி சிறப்பாகக் களைகட்டியது. இந்த நிலையில், இந்த வாரம் வித்யாசாகர் சுற்று நடைபெறுகிறது.

வித்யாசாகர்

வித்யாசாகரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது மற்ற போட்டியாளர்கள் வித்யாசாகர் இசையமைத்த பாடல்களைப் பாடினர். அதுபோல் இனியாவும், "அபியும் நானும்" படத்தில் இடம்பெற்ற "வா வா என் தேவதையே" எனும் பாடலைப் பாடியிருந்தார். அப்போது தேவயானி கண் கலங்கினார். பிறகு இனியா பாடி முடித்ததும் அனைவரும் கைதட்டினர். வித்யாசாகரும் "ரொம்ப நன்றாக இருக்கிறது" என்றார். அப்போது அர்ச்சனா, "தேவயானி மேம் ஏன் அழுதீங்க?" எனக் கேட்டார்.

தேவயானி கண்ணீர்

அப்போது தேவயானி மேடைக்கு வந்து, "இந்தக் பாடலில் பெண் குரல் இல்லை, ஆண் பாடுவதுதான். இதை இனியா எப்படிப் பாடப் போகிறார் எனப் பயந்துகொண்டிருந்தேன். அவளும் பயந்தாள். நான் சொன்னேன், 'நீ தைரியமாகப் பாடு, ஒரு female versionஐ நீ உருவாக்குகிறாய்' எனச் சொன்னேன். சங்கதிகள், சரணம் எல்லாம் எப்படி கொண்டு வருவார் எனக் கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தேன். பல்லவி எல்லாம் முடிந்ததும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது," என தேவயானி விளக்கினார்.

இனியா கூறியது

மேலும் இனியா கூறுகையில், "அப்பா, இந்தப் பாட்டை நான் நன்றாகப் பாடிவிட்டேன். நீங்கள் டிவியில் ஒளிபரப்பும் போது பாருங்கள்," என்றார். இந்தப் பர்ஃபார்மன்ஸ் 'கோல்டன்' என நடுவர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+