நடிகை தேவயானியின் பண்ணை வீட்டை பார்த்து இருக்கீங்களா? இத்தனை சிறப்பா? ஆனாலும் அதை கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை தேவயானி இன்று தன்னுடைய 49 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய குடும்பம் மற்றும் சொந்த வீடு பற்றி பார்க்கலாம்.
நடிகை தேவயானி சென்னையில் செட்டில் ஆகி இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் அவருடைய பண்ணை வீடு பிரமாண்டமாக கட்டி வைத்திருக்கிறார்.
90 கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகி, ஒரு இயற்கையை விரும்பும் இல்லத்தரசி என்பது பலருக்கும் தெரியாது. ஒரு ஆசிரியையாக வாழ்க்கையை தொடங்கிய நடிகை தேவயானி இப்போது நடிகையாக மாறினாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையை எளிமையாக தான் வாழ்ந்து வருகிறார். .

நடிகை தேவயானியின் சொந்த பெயர் சுஷ்மா ஜெயதேவ் தானாம். இவர் கர்நாடக குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவருடைய அம்மா ஒரு மலையாளியாக இருந்திருக்கிறார். வீட்டுக்கு மூத்த பெண்ணாக தேவயானி பிறந்திருக்கிறார். அவரை தொடர்ந்து இரண்டு தம்பிகள் இருக்கின்றனர். அதில் ஒரு தம்பி திரைப்பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது தம்பி தான் நகுல்.
நடிகை தேவயானியை பார்த்ததுமே எந்த ஆடிஷனும் வைக்காமல் இயக்குனர் பிரியதர்ஷன் அவரின் வீட்டிற்கே சென்று நடிப்பதற்காக கேட்டிருந்தாராம். அப்படி தேவயானி நடித்த முதல் திரைப்படம் தான் "கின்னரிபுழையோரம்" என்ற மலையாள படம். அதைத்தொடர்ந்து தமிழில் "தொட்டா சிணுங்கி" என்றும் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் இயக்குனர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட்டு வீட்டை எதிர்த்து எளிமையான முறையில் கோவிலில் வைத்து தேவயானி திருமணமும் செய்திருந்தார். இந்த நிலையில் இப்ப வரைக்கும் ராஜகுமாரனை தேவயானியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
ஆனாலும் நடிகை தேவயானி ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5:30 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வரும் தேவயானி மற்றும் ராஜகுமார் தம்பதி அங்கேயே ஒரு பண்ணை வீட்டை கட்டி இருக்கிறார்களாம்.
தேவயானி வீடு இருக்கும் "எண்ணமங்கலம்" என்ற கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் சந்தியம்பாளையம் தான் ராஜகுமாரனின் சொந்த ஊராம். அந்த ஊரில் ராஜகுமாரனுக்கு பூர்வீக சொத்துகளோ, வீடோ எதுவும் இல்லாததால் இங்கே இடம் வாங்கி வீடு கட்டி இருக்கிறார்கள். தங்களுக்கு வாங்கிய சொந்த இடத்தில் போர் போட்டு, கிணறு வெட்டி, மா, பலா, வாழை போன்ற பல மரச் செடிகளையும் பூஞ்செடிகளையும் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

கூடவே காய்கறிகளும், பழங்களும் வைத்து அதை விற்பனை செய்தும் வருகிறார்களாம். நிலத்தில் வேலை பார்க்க ஆட்கள் இருந்தாலும் அடிக்கடி ராஜகுமாரனும் தேவயானியும் அவர்களோடு சேர்ந்து விவசாயம் சேர்ந்து வருகிறார்கள். தேவயானி சென்னையில் குடும்பத்தோடு வசித்து வந்தாலும் சூட்டிங் இல்லாத நாட்களில் தன்னுடைய பண்ணை வீட்டிற்கு சென்று விடுவது தான் வழக்கமாம்.
அது மட்டுமில்லாமல் இவர்களுடைய விவசாய நிலத்தில் விளைவிக்கப்படும் பொருள்களிற்கு எந்த ரசாயன பொருள்களும் பயன்படுத்தப்படுவது கிடையாதாம். இயற்கையான உரங்களை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் விவசாயத்தில் செய்யும் செயல்களில் 5 சதவீதம் கூட லாபம் பார்க்க முடியவில்லை என்று பேட்டி ஒன்றில் ராஜகுமாரன் கூறியிருந்தார்.
பல நடிகைகள் நடித்து பிரபலமாகி சொத்து சேர்த்த பிறகு நடிப்பை விட்டு விலகி இருந்தாலும், நடிகை தேவயானி தொடர்ந்து வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கிடைக்கும் நேரத்தில் விவசாயத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாளுக்கு அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications