அது பெரிய விஷயம்.. எனக்காக அவர் செய்தது! கணவர் பற்றி தேவயானி உடைத்த ரகசியம்.. இதுதான் உண்மை காதலா?
சென்னை: நடிகை தேவயானி பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தனக்காக தன்னுடைய கணவர் மாற்றிக் கொண்ட விஷயம் குறித்து தேவயானி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியல் ஆக இருந்தாலும் சரி ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது கொள்வது ஒன்று புதிதல்ல. ஆனால் ஒரு சில பிரபலங்கள் தான் தங்களுடைய காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் தம்பதிகளாக நடிகை தேவயானி மற்றும் இயக்குனர் ராஜகுமாரன் தம்பதி இருக்கின்றனர்.

தேவயானி புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். வீட்டில் எதிர்ப்பையும் மீறி தேவயானி அந்த நேரத்தில் ராஜகுமாரனை திருமணம் செய்தது அதிகமாக பேசப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய கணவரோடு வாழ்க்கையை தொடங்கிய தேவயானிக்கு அந்த நேரத்தில் பணக்கஷ்டத்தோடு உதவிக்கு யாரும் இல்லாமலும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.
ஆனாலும் தங்களுடைய காதல் என்றும் மாறாது என்று இன்று வரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தேவயானி சமீபத்தில் பேட்டி ஒன்று தன்னுடைய கணவர் குறித்து பேசி இருக்கிறார். அதில் தேவயானி பேசுகையில் என்னுடைய கணவர் நான் எதுவுமே சொல்லாமல் எனக்காக அவர் புகை பிடிப்பதை விட்டு விட்டார். பல வருடங்களாக தொடர்ந்து புகை பிடித்து வந்த அவர் எனக்காக உடனே விட்டது எனக்கு பெரிய அதிசயமாக இருந்தது.
அதுவும் நானும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு பிடிக்கவில்லை என்பது தெரிந்ததும் அவரே விட்டுவிட்டார். அதுபோல குழந்தைகள் வளர்ப்பதிலும் அவர் எனக்கு அதிகமாக உதவி செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் ஆரம்பத்தில் எப்படி இருந்தோமோ அப்படித்தான் இன்று வரைக்கும் இருக்கிறோம். எனக்கு பல இடங்களில் நல்ல நண்பராகவும் அறிவுரை சொல்லி என்னுடைய கணவர் தான் என்னுடைய குடும்பத்தை முழுமையாக பார்த்துக் கொள்கிறார்.
நான் எப்போதுமே 5 மணிக்கே எழுந்து விடுவேன். மற்ற பெண்களைப் போலத்தான் நானும் வீட்டு வேலைகளை செய்வேன். என்னுடைய குழந்தைகள் இருவருக்கும் பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கு சாப்பாடு சமைப்பதில் இருந்து அவர்களை கிளப்பி விடுவது வரை எல்லா வேலைகளையும் நான் தானே செய்ய வேண்டும்.
நடிகைகள் என்றால் சினிமாவில் வருவது போன்ற வீட்டிலும் இருப்பார்கள் என்று இல்லை. வீட்டில் நாங்களும் மற்ற பெண்கள் போலத்தான் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது பலருக்கு தெரியாது. அது போல எனக்கு அதிகமாக மேக்கப் போடுவது பிடிக்காது. செலவும் அதிகமாக பண்ண மாட்டேன். எந்த பொருள் வாங்கினாலும் அதில் விலை குறைந்த பொருட்களையே வாங்கிக் கொள்வேன்.
ஆடம்பரமாக அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட மாட்டேன். அதனாலேயே என்னுடைய மகள்கள் என்னோடு ஷாப்பிங் வர மாட்டார்கள் என்று சிரித்தபடியே தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தைப் குறித்து அந்த பேட்டியில் நடிகை தேவயானி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications