வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. ஆனால் அதற்கு பிறகு வாழ்க்கை மாறிடுச்சு! தேவயானி எமோஷனல்
சென்னை: நடிகை தேவயானி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகள் குறித்து பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் தேவயானி தன்னுடைய கணவர் ராஜகுமாரன் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி ஒன்றாக நடித்தவர்கள் பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும்தான் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்தாலும் எதிர்த்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வெள்ளி திரையில் பலரையும் வியக்க வைத்த ஜோடிகளில் ஒன்றாக தேவயானி மற்றும் அவருடைய கணவர் ராஜகுமாரன் இருந்து வருகின்றனர்.

தேவயானி காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பராக வெற்றி அடைந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. தேவயானியின் திருமணத்தில் இரண்டு வீட்டிலும் சம்மதம் இல்லாமல் இருந்த நிலையில் வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ராஜகுமாரன் வீட்டில் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் தேவயானியின் வீட்டில் சில வருடங்கள் கழித்து தான் சம்மதம் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் தேவயானியின் குடும்ப பங்க்ஷனில் அதிகமாக ராஜகுமாரன் கலந்து கொண்ட மாதிரி எந்த புகைப்படங்களும் செய்திகளும் வெளியே வந்தது கிடையாது. ஆனாலும் தேவயானிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய மகள்கள் மற்றும் கணவர் ராஜகுமாரனுடன் சேர்ந்து தேவயானி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் தேவயானி பேசுகையில் நான் கல்யாணம் பண்ணுனா ராஜகுமாரனை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி காதலிச்சு கல்யாணம் பண்ணினேன். ஆனால் கல்யாணம் பண்ணின பிறகு வாழ்க்கை அவரை சுத்தி எனக்கு வேறு விதமான ஒரு உணர்வை தந்தது.
கல்யாணத்திற்கு முன்பு அம்மா அப்பாவோடு அரவணைப்பில் இருந்தேன். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு ஒரு மனைவியா நடந்துக்கணும், குடும்பத்தை பார்த்துக்கணும் என்ற ஒரு பெரிய பொறுப்பு வந்தது. மனைவி என்ற உணர்வு எனக்கு வித்தியாசமாக இருந்தது. அதற்கு பிறகு வாழ்க்கை மாறி இருந்தது. இப்ப வரைக்கும் எங்களுடைய திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.கல்யாணம் முடிந்து 22 வருடம் ஆகிறது. ஆனாலும் அவர் என்னை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார் என்று அந்த பேட்டியில் தேவயானி பேசி இருக்கிறார்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications