CSK: சேப்பாக்கத்தில் “தர்ஷனா” கொடுத்த ரியாக்ஷன்.. இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலையே! நடிகை ஓப்பன் அப்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடித்து பிரபலம் அடைந்த நடிகை தர்ஷனா நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் ஐபிஎல் போட்டியை பார்க்க போன இடத்தில் இவர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில்
அதிகமாக பரவி வருகிறது. இது குறித்து அவர் சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகை தர்ஷனா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாக்காத வகையில் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். பிறகு சில மாதங்கள் கழித்து சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
ஆனால் எல்லோரும் இவரை வசு என்றுதான் அழைத்து வருகின்றனர். இப்படியான நிலையில் இவர் நேற்று சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் ஐபிஎல் போட்டியை பார்க்க போன இடத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போது அதிர்ச்சி, சந்தோஷம் கலந்த ரியாக்சன் கொடுத்திருக்கிறார். அதை சரியாக கிளிக்கிய புகைப்படக்காரர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து தர்ஷனா பேசுகையில், சத்தியமா இந்த அளவுக்கு அந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகும் என்று எதிர்பார்க்கல. காலையில் எழுந்திருக்கும் போது என்னுடைய புகைப்படங்கள் பதிவிட்டு நிறைய மென்ஷன் இருந்தது. எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சிஎஸ்கே என்னுடைய பேவரைட்.
கடந்த சிஎஸ்கே Vs லக்னோ மேட்ச் பார்ப்பதற்காக நான் போயிருந்தேன். ஆனால் அப்போ நாம மேட்சில் தோத்துட்டோம். அதனால நேற்று எப்படியாவது மேட்ச் ஜெயிக்க வேண்டும் என்று நம்பிக்கையில் போனேன். அதனால் என்னால் சீட்டில் உட்காரவே முடியவில்லை. சிஎஸ்கே விளையாடும் போது தொடர்ந்து என்கரேஜ் பண்ணிட்டு இருந்தேன். ஆனாலும் ரொம்ப அப்செட்டில் தான் இருந்தேன்.

பொதுவா டிவியில் மேட்ச் பார்க்குறதுக்கும் லைவில் மேட்ச் பார்க்குறதுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு. தொடர்ந்து டைம் கிடைச்சா நான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க போவேன் என்று கூறியிருக்கிறார். அதோடு தனக்கு தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கவில்லை.
ஏற்கனவே தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டர் ரீச் ஆனப்போ இப்படித்தான் ட்ரெண்டானேன். அதே மாதிரி இப்போ மீண்டும் ட்ரெண்டாகி இருக்கிறேன். அதுபோல சீரியலில் இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் திரைப்படங்களிலும் நடிப்பேன் என்றும் தர்ஷனா பேசியிருக்கிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications