மகாநதி சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி.. அறிமுகமாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி.. திடீர் மாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்து வந்த நடிகை பிரதீபா திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
அதே நேரத்தில் இனி கங்காவாக பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை திவ்யா கணேஷ் இன்று எபிசோட்டில் இருந்து அறிமுகமாக இருக்கிறார்.
மகாநதி சீரியல் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று கங்கா கேரக்டரில் நடந்த மாற்றம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.
விஜய் டிவி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்றுதான் மகாநதி இந்த சீரியலின் கதை ஆரம்பத்தில் அப்பா மகள்களின் பாசத்தை மையமாகக் கொண்டு தொடங்கியது போன்று இருந்தது. பிறகு அப்பாவின் மரணத்திற்கு பிறகு மகள்கள் தங்களுடைய வாழ்க்கையில் படும் துன்பங்கள் பிறகு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது போன்ற பாச உணர்வோடு போராட்டம் கலந்ததாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் தற்போது யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களும் வந்திருக்கிறது. ஏற்கனவே காவிரி நிதினை காதலித்து இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் பிரிந்து இருந்தனர். அதைத்தொடர்ந்து காவேரி விஜய்யோடு ஒரு வருட காண்ட்ராக்ட் திருமணம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் இருவருடைய திருமணம் எளிமையாக நடைபெற்று விட்டதால் இவர்களுடைய வரவேற்பை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று விஜய்யின் வீட்டார் முடிவு செய்திருக்கின்றனர். இந்த திருமண வரவேற்பில் பசுபதி நிவினும் காவிரியும் காதலிக்கும் போது எடுத்த போட்டோவையும் வீடியோவையும் கொண்டு வந்து எல்லார் முன்னாடியும் போட்டு காட்டி விடுகிறார்.
3-வது பூகம்பம் டாஸ்க்.. ஜோவிகாவிற்க்கு வார்னிங் கொடுத்த பிக் பாஸ்.. உள்ளே வரும் முக்கிய போட்டியாளர்
இருந்தாலும் விஜய் தன்னுடைய காண்ட்ராக்ட் திருமணம் வீட்டிற்கு தெரிய வந்து விடக்கூடாது என்பதற்காக விஜய், காவேரி என் பொண்டாட்டி. அவ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தா என்பதெல்லாம் எனக்கு பிரச்சனையே இல்ல என்று பசுபதியை அடித்து அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார். இதனால் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதாவது இதுவரைக்கும் இந்த சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்து வந்த பிரதீபா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை திவ்யா கணேஷ் இந்த சீரியலில் கங்காவாக இணைந்து இருக்கிறார். தற்போது அவர் நடித்த காட்சிகள் இன்றைய எபிசோட்டில் இருந்து ஒளிபரப்பாகிறது.
2-வது பூகம்பம் டாஸ்க்கில் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. உள்ளே வரும் முக்கிய போட்டியாளர்.. செம சம்பவம்
இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியாக திவ்யா கணேஷ் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் கங்கா கேரக்டர் போல்டாக இருக்கும் நிலையில் இனி திவ்யா கணேஷ் உடைய நடிப்பை தொடர்ந்து பார்த்து வருவதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அதோடு பழைய கங்கா அதாவது பிரதீபா நடிப்பை அதிகமானோர் மிஸ் பண்ணுவதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications