குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைத்த நடிகை திவ்யா..கலந்து கொண்ட அந்த பிரபலம்..அர்ணவ் வெளியிட்ட பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகி ஆக நடிக்கும் திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய இரண்டாவது குழந்தையின் பெயர் சூட்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.
அந்த பங்க்ஷனில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தி புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.

அதே நேரத்தில் திவ்யா ஸ்ரீதரின் கணவர் அர்ணவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சின்னத்திரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. பல நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் தொடர்ச்சியாக திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலருக்கு காதலிக்கும் போது இருந்த காதல் ஒற்றுமை எல்லாம் திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விடுகிறது.

அந்த வகையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்ணவ். இவர்கள் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்களுக்குள் இவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு வந்துவிட்டது.
திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் குடும்பப் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் போதே அர்னாவை பிரிந்து தான் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது திவ்யாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். அதற்கு அவரோடு சீரியலில் நடிக்கும் பல பிரபலங்கள் நடிகைகள் கலந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் சன் டிவியில் நடிக்கும் சில சீரியல் நடிகைகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் பாண்டியன் பாண்டவர் இல்லம் சீரியலில் நடிக்கும் நடிகை பாப்ரி மற்றும் சீரியல் நடிகை சுருதிஹா போன்றோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் அர்ணவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு "வெற்றி மகிழ்ச்சிக்கு முக்கியமல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கு முக்கியமாகும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதில் உறுதியாக இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.." என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த பதிவிற்கு கமெண்ட் செக்சன் ஆப் செய்து வைத்திருக்கிறார். தற்போது இது குறித்து இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.













Click it and Unblock the Notifications