கைவிட்ட காதல்.. கை குழந்தையோடு திவ்யா ஸ்ரீதர்..மேடையில் செய்த செயல்..நெகிழ்ச்சியான தருணம்
சென்னை: நடிகை திவ்யா ஸ்ரீதர் கை குழந்தையோடு சன் குடும்ப விருது விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தன்மானத்திற்கு முன்னாடி எந்த தடைகளும் பெரிதல்ல என்று திவ்யா ஸ்ரீதர் தற்போது நிரூபித்து இருக்கிறார்.

குழந்தை பிறந்த சில மாதங்களே ஆன நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நடிப்பதற்கும் குழந்தையோடு சென்று கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஏற்கனவே கேளடி கண்மணி என்ற சீரியல் நடித்திருக்கிறார். இந்த சீரியலில் நடிக்கும் போது தான் நடிகர் அர்னாவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்திருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்சனை சமூக வலைத்தளத்தில் தெரிந்ததுதான். ஆனால் அர்னாவ் தற்போது செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இனி இருவரும் சேர்ந்து வாழ வழியே இல்லை என்று மாறி மாறி கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திவ்யா ஸ்ரீதருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு நடிப்பிற்கு சிறிது பிரேக் விட்டிருந்த திவ்யா ஸ்ரீதர் மீண்டும் சில மாதங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தன்னுடைய குழந்தையை சூட்டிங் ஸ்பாட்க்கு தூக்கிக்கொண்டு சென்று நடிக்க தொடங்கி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சன் குடும்ப விருதுகள் 2023 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திவ்யா ஸ்ரீதர் அவருடைய கைக்குழந்தையோடு வந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிகமானோர் திவ்யாவிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். காதல் கைவிட்டு போனாலும் நம்முடைய உழைப்பை விட்டு விடக்கூடாது நம்முடைய திறமையால் நாம் நிமிர்ந்து நிற்க வேண்டுமே தவிர அழுதுகொண்டு அடங்கிப் போக கூடாது என்று திவ்யாவை பார்த்து ரசிகர்கள் பலரும் கற்றுக் கொண்டதாக கமெண்ட்களில் தெரிவிக்கிறார்கள்.
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications