திருக்கார்த்திகை எஃபெக்ட்.. ஜாக்கெட்டில் கோயில் டிசைன், லைட் செட்டப்! சர்ச்சையில் சிக்கிய நடிகை ஃபரீனா ஆசாத்
சென்னை: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வில்லி வேடத்தில் பிரபலமானவர் நடிகை ஃபரீனா ஆசாத். சமீபத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அவர் போட்டிருந்த ஒரு ஜாக்கெட் சமூக வலைதளத்தில் மிகப் பெரிய பேச்சுப் பொருளாக மாறியிருக்கு.
ஜாக்கெட்டில் கோயில் கோபுரம்
நடிகை ஃபரீனா ஆசாத் கார்த்திகை தீபத் தினம் அன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு புதுவிதமான ஜாக்கெட் போட்ட வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இந்த ஜாக்கெட்டின் முதுகுப் பக்கத்திலும், இரண்டு கை பகுதிகளிலும் கோயிலின் முகப்புக் கோபுரம்ஸவடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கோபுரம் வடிவமைப்புக்குள்ள சிறிய அளவில் சீரியல் விளக்குகள் எரிவது மாதிரி அமைப்பு செய்து அவர் போட்டிருந்ததை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். நடிகைகள் சேலைகள்ல கோயில் கோபுரங்கள் முதல் புராணக் கதைகள் வரை வடிவமைப்பு செய்து உடுத்தும் போக்கு ஏற்கனவே இருந்து வரும் நிலையில் இப்போ ஜாக்கெட்டில் மின் விளக்குகள் வைக்க தொடங்கி விட்டார்கள் என்று சிலர் கலாய்த்து வருகின்றனர்
ஃபரீனா ஆசாத்தின் இந்த புதுமையான ஆடை அணிந்த விதம் சமூக வலைதளத்துல நிறைய கேள்விகளும், கலாய்க்கும் விதமான கருத்துகளும் குவிகிறது. அதிலும் சிலர் இவருடைய பிளவுஸ்சை பார்த்து, அம்மாடி பார்த்து பத்திரம்.. ஷாக் அடிக்காம இருந்தா சரி, படுக்கும் போது பல்பு உடைஞ்சிடாதா என்று ரசிகர்கள் ஏகப்பட்ட கேலிச் செய்திகளைப் பதிவிட்டனர்.
சமூக விமர்சனம்
"கோயில்களுக்குச் செல்லும் போது இதுபோன்ற ஜாக்கெட் அணிந்து சென்றால் நல்லா இருக்கும்" என்றும், அதே சமயம் "எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது" என்றும் கூறினர். "கோயில் கோபுரங்களை கேலி பொருளாகப் பயன்படுத்துவதைப் பிரபலங்கள் தவிர்க்க வேண்டும்" என்று சில விமர்சனக் கருத்துகளும் பதிவாகியிருக்கு.
ஃபரீனா ஆசாத் இந்தக் கோயில் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்தது ஏற்கனவே தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெரிய சர்ச்சையை நினைவூட்டுகிறது. சமீபத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது பிரபலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 'தீபத் தூணில் தீபம் ஏற்றுவது' தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.
தீபத் தூண் என்பது வழிபாடுக்குரியதா அல்லது விளக்கேற்றும் தூணா என்ற சமூக மற்றும் சமயச் சர்ச்சை வழக்குகள் வரை சென்றிருக்கு. ஒருபுறம் உண்மைக் கோயில்களில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சமயக் கருத்துகள் மோத, இன்னொருப் புறம் பிரபலங்கள் தங்கள் உடைகள்ல கோயில் வடிவமைப்புகளை வைத்து விளையாடுவது போல இருப்பது அந்தச் சர்ச்சையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கு.
ஃபரீனா ஆசாத்தின் இந்த செயல் ஆடையில் உள்ள சுதந்திரமா? இல்லை மத சின்னங்களைக் கேலி செய்கிறதா? என்ற விவாதத்தையும் தூண்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications