சொத்துக்களில் சிக்கிய "கன்னித்தாய்".. நடிகைக்கு கல்யாணம் ஆகாமல் குழந்தைகள்.. சபாஷ் ஹன்சிகா: பிரபலம்
சென்னை: தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடிகை ஹன்சிகா, அவரது அம்மா ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக கடந்த ஜனவரியில் காவல் நிலையத்தில் ஹன்சிகாவின் நாத்தனார் முஸ்கான் நான்சி புகார் தந்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து கிட்டத்தட்ட 4 பிரிவுகளில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நான்சியின் புகாரை ஹன்சிகா மறுத்து, மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
"சின்ன குஷ்பு என்று சொல்லும் அளவுக்கு உடல்வாகு ஹன்சிகாவுக்கு அன்று இருந்தது.. அதனாலேயே நிறைய படவாய்ப்புகள் குவிந்தன.. அதேசமயம் கிசுகிசுக்களும் அதிகமாக வந்தன. எங்கேயும் காதல் படத்தில் டைரக்டர் பிரபுதேவாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. பிறகு சிம்புவிடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்த காதல் பெரிதாக வளர்ந்தது, பிறகு டமார் என வெடித்துவிட்டது.

நக்மா, குஷ்பு, சிம்ரன்
நிறைய படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார் என்றாலும், தமிழ் கற்றுக்கொள்ள சிறிதும் முயற்சிக்கவில்லை.. இதுதான் ஹன்சிகாவின் மைனஸாகிவிட்டது. வடமாநிலத்திலிருந்து வந்த நக்மா, ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில்தான் அறிமுகமானார். இன்றும் தெலுங்கு அவர் நன்றாக பேசுவார்.. தமிழையும் கற்றக் கொண்டார், குஷ்பு, சிம்ரன் போன்றோர் சரளமாக பேச கற்றுக் கொண்டார்கள்.
ஆனால், ஹன்சிகா அந்த முயற்சியை எடுக்கவேயில்லை. தமிழ்நாட்டில் தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கவுமில்லை. மும்பையிலிருந்து வரும் நடிகைகள் என்றாலே, ஸ்டார் ஓட்டலில் தங்க வைப்பது, கேரவன் ஏற்பாடு உள்ளிட்ட செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனாலதான் ஹன்சிகாவுக்கும் மார்க்கெட் ஆட்டம் கண்டது.
நாத்தனார் தந்த வரதட்சணை புகார்
பிறகு ஒரு தொழிலதிபருடன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.. இப்போது நாத்தனார் பிரச்சனை கிளம்பியிருக்கிறது. ஹன்சிகாவின் தம்பி மனைவி, போலீசில் வரதட்சணை புகார் வரை கொண்டு சென்றுள்ளார். ஆனால், ஹன்சிகா இதற்கு மறுப்பு கூறி, நாத்தனார் நான்சி வேண்டுமென்றே தன் மீது பழி சுமத்துவதாக கூறுகிறார்.
அதாவது தன்னுடைய தம்பிக்கு திருமணத்திற்காக 27 லட்சம் ரூபாய் கடனாக தந்துள்ளார் ஹன்சிகா.. அந்த பணத்தை தம்பியிடம் திருப்பி கேட்டதுமே, வரதட்சணை புகார் என்று நான்சி கிளப்பிவிட்டிருக்கிறார். இதற்கு காரணம், ஹன்சிகா ஏழை குழந்தைகள், மாற்று திறனாளிகள் குழந்தைகளை பள்ளியில் வைத்து பராமரித்து வருகிறார். அன்றே 34 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்து வந்தார்.. கல்யாணத்துக்கு முன்னாடியே கன்னித்தாய்? என்று பத்திரிகையாளர்கள் அவரை உயர்வாக சொன்னார்கள்..
சொத்துக்கள் விவகாரம்
நன்றாக ஓவியம் வரையக்கூடியவர்.. ஓவியக் கண்காட்சியை வைத்து, அதில் ஓவியங்களை விற்று அந்த குழந்தைகளுக்காக செல்வு செய்தவர்.. இப்போதைக்கு ஹன்சிகாவுக்கு படங்களும் இல்லை.. அதனால் இருக்கும் பணத்தை, செலவு செய்துவிடுவாரோ என்ற எண்ணத்தில் நாத்தனார் ஹன்சிகா மீது வீண்பழியை சொல்லியிருக்கலாம்.
ஹன்சிகாவும் சரி, ஹன்சிகா அம்மாவும் சரி, இருவருமே மிகவும் மென்மையானவர்கள்.. நன்றாக அனைவரிடமும் பேசக்கூடியவரகள்.. அம்மாவை பார்த்தால், பேராசை உள்ளவர் போலவும் தெரியவில்லை. சொத்துக்கள் வெளியே போய்விடுமோ? என்பதே தம்பி மனைவியின் ஆதங்கமாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications