லீக்கான ஹனிரோஸ் போட்டோ.. பூனைக்கு மணி கட்டிய தில்லு நடிகை.. விஐபி பாபி செம்மணூருக்கு காப்பு: பிரபலம்
சென்னை: "பாபி செம்மணூர் செல்வாக்கு மிக்கவர்.. நகை கடைகளை பல கிளைகளில் வைத்துள்ளார்.. அவர் நினைத்தால் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய நபர்.. ஆனால் ஹனிரோஸ் குறித்து வெறும் கமெணட் பதிவிட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்க முடியாது.. இதில் வேறு ஏதோ விஷயம் இருப்பதாக கேரள ஊடகங்கள் கருதுகின்றன" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்... 2 நாட்களுக்கு முன்பு, தொடர்ந்து சோசியல் மீடியாவில் தான் சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாகவும், அப்படி செய்பவர்களை லிஸ்ட் எடுத்து அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஹனிரோஸ் எச்சரித்திருந்தார்.

பிறகு அவர் சொன்னபடியே, எர்ணாகுளம் சென்ட்ரல் போலீசில் 30 நபர்கள் மீது புகார் அளித்தார். இந்த 30 பேர் ஹனி ரோஸ் குறித்து ஆபாசமான போட்டோக்களை சித்தரித்து வெளியிட்டு, மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனராம். அத்துடன், வசதி படைத்த ஒரு நபர் தன்னை சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருவதாகவும் கூறி அவர் மீதும் புகார் அளித்திருந்தார் ஹனிரோஸ்.. ஆனால், அந்த நபரின் பெயரை ஹனிரோஸ் வெளியிடவில்லை.
போலீஸ் புகார்: இதன்பிறகுதான், அந்த வசதி படைத்த நபர், கேரளாவில் புகழ்பெற்ற செம்மனூர் ஜுவல்லரி நகை கடைக்கு சொந்தக்காரரான பாபி செம்மனூர் என்பது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்நபரை ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது செய்துள்ளது..
நடிகை ஹனிரோஸை மகாபாரதத்தின் குந்தி தேவியுடன் ஒப்பிட்டு, பாபி செம்மனூர் கமெண்ட் பதிவு செய்ததால்தான், கேரள முதல்வர் வரை பாபி செம்மணூர் மீது புகார் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஹனிரோஸ் குறித்து இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்தி வந்ததால்தான், அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு சாரார் கூறுகிறார்கள்.
பாபி செம்மணூர்: இதற்கு நடுவில், Cheyaaru Balu யூடியூப் சேனலில் பேசியபோது, "மால்கள் திறப்பது, நகைக்கடைகள் திறப்பது என ஹனிரோஸ் பிஸியாக இருந்து வருகிறார்.. பாபி செம்மனூர் என்ற தொழிலதிபர் மீது புகார் தந்துள்ளார்.. பாபி செம்மனூர் மிகப்பெரிய செல்வந்தர்.. முண்டா பனியன்தான் போட்டிருப்பார்.. கால் பந்தாட்ட ரசிகர்.. வயநாடு நிலச்சரிவு சமயத்தில், தன்னுடைய ஒரு குறிப்பிட்ட ஏக்கர் நிலத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்து, வீடு கட்டி கொள்ள சொன்னார்.. அப்படிப்பட்டவர் மீது புகாரா? என்று ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநில முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாநில டிஜிபி-க்கு இந்த புகாரை ஹனிரோஸ் தந்திருக்கிறார்.. ஆனால், என்ன நடந்தது என்பதை ஹனிரோஸ் சொல்லவில்லை.. காவல்துறையும் சொல்லவில்லை. "செல்வாக்கு மிக்க வசதி படைத்த ஒருவர் தன்னை தொடர்ந்து தேவையில்லாமல் பொது வெளியில் களங்கப்படுத்தி வருகிறார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று போலீசாரிடம் புகார் தந்துள்ளார்..
நகை கடை திறப்பு: இது குறித்து நடிகை ஹனிரோஸ் சொல்லும்போது, " என்னுடைய நகை கடை திறப்புக்கு தொடர்ச்சியாக , மோசமான கமெண்ட்களை போட்டு கொண்டே வந்தார் பாபி செம்மணூர்.. அது எனக்கு மன உளைச்சலாகிவிட்டது.. நான் வெகுண்டு, "உங்க நகைக்கடைக்கு வரமாட்டேன் என்பதற்காக, இப்படியெல்லாம் பதிவிட வேண்டாம் " என்றேன்
ஆனால், ஃபேஸ்புக்கில் நான் பதிவிட்டதற்கு கீழேயே, கிட்டத்தட்ட 30 பேர், என்னை மிக கேவலமாக விமர்சித்து கமெண்ட் போட்டார்கள்.. இதனால் நான் 3 நாளாகவே தூங்கவேயில்லை.. அதனால்தான் அந்த பதிவுகளுடன் எர்ணாகுளம் போலீசில் புகார் தந்தேன். என்னுடைய புகாரை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்..
காவல்துறை: கேரள முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன்.. உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அங்கிருந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்தது.. இறுதியில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவில் சிஸ்டம் சரியாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். முதல்வருக்கும் காவல்துறைக்கும் என்னுடைய தலைவணங்கின நன்றி.
இன்று எனக்கு மார்க்கெட் இல்லை என்பதற்காக, என்ன வேணும்னாலும் என்னை பற்றி இவர்கள் பதிவு செய்வார்களா? பாலியல் சீண்டல் செய்வீர்களா? இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கை எடுத்துள்ளேன்" என்கிறார்.
ஹனிரோஸ்: அதேபோல, போபி செம்மனுார் சொல்லும்போது, என்னுடைய நகைக்கடையை ஹனிரோஸ் ஏற்கனவே திறந்து வைத்திருக்கிறார்கள்.. ஒருமுறை கடை திறந்துவைக்கும்போது, என் கடையிலுள்ள நகைகளை அணிந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் தந்தார்.. உடனே நான் ஜாலியாக அதுகுறிது கருத்து பதிவிட்டிருந்தேன்..
அதுபோலவே நிறைய பேர் என்னுடைய நகை கடை திறப்புக்கு வந்து, நகையை அணிந்து போட்டோ ஷூட் நடத்துவார்கள். அந்த போட்டோவுக்கும் நானும் கமெண்ட் செய்திருக்கிறேன். இது ஒரு பிசினிஸ் டெக்னிக்.. ஆனால், இதைப்போய் சீரியஸாக எடுத்துக் கொண்டு, ஹனிரோஸ் புகார் தந்திருக்கிறார்.. உண்மையிலேயே இதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை" என்கிறார்.
ஜாமீன்: எனினும், பாபி செம்மணூர் செல்வாக்கு மிக்கவர்.. நகை கடைகளை பல கிளைகளில் வைத்துள்ளார்.. அவர் நினைத்தால் பல வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்.. ஆனால் ஹனிரோஸ் குறித்து வெறும் கமெணட் பதிவிட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்க முடியாது.. அதுவும் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு சட்டம் பாய்ந்துள்ளது என்றால், இதில் வேற விஷயம் என்னவோ இருப்பதாக, கேரளாவிலிருந்து வரும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன..
அதேபோல, ஹனிரோஸ் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு கேரள நடிகைகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.. காரணம், இதே கேரளாவில் கொச்சினில் மால் திறப்பு விழாவில், 3 நடிகைகள் போனபோது, கிட்டத்தட்ட 300 பேர் திரண்டு வந்து, தொடக்கூடாத இடத்தில் தொட்டு கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.
3 நடிகைகள்: இதுகுறித்து அந்த நடிகைகள் சொல்லும்போது, "எங்களை அந்த கும்பல் எங்களை அசிங்கப்படுத்தினார்கள். சிலர் அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டு பலர் ரசித்தார்கள்.. இதை யாருமே தட்டிக் கேட்க மாட்டீர்களா என்று நாங்கள் கேட்டபோது, ஒருத்தரும் எங்களுக்காக பரிந்து பேசவில்லை. ஆனால், ஹனிரோஸ் அந்த பூனைக்கெல்லாம் மணி கட்டியிருக்கிறார்.. இது வரவேற்க கூடிய விஷயம்" என்று பாராட்டி கொண்டிருக்கிறார்கள்" என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications