சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து.. நொடியில் உயிர் தப்பிய சன் டிவி சீரியல் நடிகை
சென்னை: சன் டிவியில் திருமகள், அருவி, மருமகள் என பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஜீவிதாவின் கார் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் அதிகமாக சேதமடைந்து இருக்கிறது. ஆனால் தான் உயிர் தப்பி விட்டேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர்தான் ஜீவிதா. அதிலும் குறிப்பாக 'மனதில் உறுதி வேண்டும்’ என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் வில்லியாக நடித்த சீரியல் மூலமாகத்தான் இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு சில சீரியல்களில் வெளியாகவே நடித்துக் கொண்டிருந்தார் அதிலும் தேவதை, பாசமலர், நிலா என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஜீ தமிழில் எங்க வீட்டுப் பெண் என்று சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து மீண்டும் சன் டிவியில் திருமகள், அருவி என சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது கூட மருமகள் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் முதலில் சென்னைக்கு வந்தது டான்ஸ் கிளாஸ் தொடங்க வேண்டும் என்று தான்.
ஆனால் வந்த இடத்தில் டான்ஸ் கிளாஸ் தொடங்க சரியான வாய்ப்பு கிடைக்காததால் நடிகையாக மாறிவிட்டார். அதே நேரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் நேற்று இவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது இவருடைய கார் விபத்தில் சிக்கி இருக்கிறது.
அதாவது ஒரு திருமண மண்டபத்தில் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அப்போது வெளியே இவருடைய கார் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்த ஒரு பெரிய மரம் இவருடைய காரில் விழுந்திருக்கிறது. அதில் காரின் முன் பகுதி மற்றும் சைடு பகுதியில் இருக்கும் கண்ணாடி போன்ற பாகங்கள் அதிகமாக சேதம் அடைந்திருக்கிறது.
இது பற்றி ஜீவிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நல்ல வேளையாக நான் காரில் இல்லை, அந்த நேரத்தில் வெளியே இருந்ததால் நான் உயிர் பிழைத்து விட்டேன். காரில் அதிகமாக அடிபட்டு இருக்கிறது. இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுவதற்காக கொடுத்திருக்கிறேன். சிஎஸ்ஆர் காப்பி இன்னும் வரல.
இந்த விபத்து தெரிந்து பலர் என்னிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்க எல்லாருக்கும் ரொம்பவே நன்றி. இது எனக்கு நடந்த முதல் விபத்து நான் கார் வாங்கி நான்கு வருஷம் ஆகிறது. கார் வாங்கி வெறும் பத்தாயிரம் கிலோ மீட்டர் தான் ஓட்டி இருக்கிறேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டது.
நல்ல வேளையாக அந்த நேரத்தில் யாருமே ரோட்டில் இல்லை. ஆனால் ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது அதாவது என்னுடைய அப்பாவிற்காக நான் வாங்கிய கார் இப்படி ஆகிவிட்டது என்று சோகமாக வீடியோ பகிர்ந்து இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications