ஜோதிகா வாயில் சிகரெட்.. சூர்யாவுக்கு பறந்த போன்.. இதெல்லாம் தேவையா? கண்டித்தாரா சிவக்குமார்: பிரபலம்
சென்னை: நடிகை ஜோதிகா வெப் சீரிஸ் ஒன்றில் புகைப்பிடிக்கிற மாதிரி ஒரு காட்சியில் நடித்திருப்பதாக தெரிகிறது. இது சம்பந்தமான பரபரப்பும், சர்ச்சைகளும் இன்னமும் அடங்கவில்லை. வெப்சீரிஸ் குறித்த விமர்சனங்கள் சுமாராக வந்தபோதிலும், ஜோதிகா புகை பிடிக்கிற காட்சிதான் அதிகம் சலசலப்பை உண்டுபண்ணியிருக்கிறதாம். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "ஜோதிகா ஒன்றும் ஆத்திகர் இல்லை.. அரசு மருத்துவமனைகளை மக்கள் நினைத்தால் சுத்தமாக வைத்து கொள்ளலாம்.. செங்கல், சிமெண்ட்டுகளை வாங்கி தரலாம்.. நம்மால் முடிந்த உதவிகளை அரசு மருத்துவமனைகளுக்கு தர வேண்டும் என்றார்..

ஆனால், ஜோதிகா பேசியதை சங்கிகள் திரித்து வேறு மாதிரியாக சொல்லிவிட்டார்கள்.. ஆனால் கோயில்களை பற்றி ஜோதிகா ஒன்றும் தப்பாக பேசவில்லை.
சர்ச்சைகளில் ஜோதிகா
இப்போது வேறுவிதமான சர்ச்சை ஜோதிகா மீது கிளம்பியிருக்கிறது.. தமிழர்களுக்கு தமிழ்உணர்வு அதிகமாக இருப்பதுபோல, வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கும் ஹிந்தி வெறி அதிகமாக உள்ளது. வடமாநிலங்களில் நடிகர், நடிகைகளை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அங்குள்ளவர்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதற்காகவே ஜோதிகா மும்பையில் சென்று தங்கினார்..
மும்பையில்தான் ஜோதிகாவின், சகோதரர் என குடும்பமே இருக்கிறது. அதனால்தான், அங்கே செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவெடுத்தார். வாடிவாசல், உள்பட பல படங்கள் முடிக்க வேண்டியிருப்பதால், சூர்யா மும்பைக்கு போகவில்லை.
பணத்துக்காக இப்படி நடிக்கலாமா
கோலமாவு கோகிலா என்ற படத்தைதான் இந்தியில் வெப்சீரிஸ் போல எடுத்துள்ளனர்.. கேரியர்களில் சாப்பாடு எடுத்துச்சென்று தரக்கூடிய கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார்.
அந்த சாப்பாட்டு கூடையில் ஒரு டப்பாவில், பிரவுன் சுகர், போன்றவற்றை எடுத்து செல்லும் கேரக்டரில் நடித்துள்ளார்.. அதற்காக சிகரெட் பிடித்துக் கொண்டே, லோக்கல் பாஷை, கெட்ட வார்த்தைகள் பேசியிருக்கிறாராம் ஜோதிகா. மும்பை வெப்சீரிஸ்கள் எல்லாமே இதைவிட இன்னும் மோசமாக இருக்கும்..
பிரவுன் சுகர் சப்ளை செய்பவர்கள், அப்படித்தான் லோக்கல் பாஷை பேசுவார்கள்.. நேட்டிவிட்டியுடன் வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி நடித்திருக்கிறார். டைரக்டர் சொல்வதைதான் நடிகர், நடிகைகள் நடிக்க முடியும்.. ஆனால், அந்த சீனை பார்த்துவிட்டு சிவக்குமார் டென்ஷன் ஆனதாக தெரிகிறது. இதுவரை சிவக்குமார் கண்ணியத்துடன் தன்னுடைய படங்களில் நடித்துள்ளார். அதேபோல 2 பிள்ளைகளும், பெண்களுக்கு மரியாதை தரக்கூடிய படங்களில்தான் நடித்து வருகிறார்கள்.
கண்டித்த சிவக்குமார்
"தனியாக குடித்தனம் போனால் இப்படி மானத்தை வாங்குவீங்களா? பணத்துக்காக இப்படியெல்லாம நடிக்கணுமா?" என்று சூர்யாவுக்கே போன் செய்து சிவக்குமார் திட்டியதாக தெரிகிறது..
ஏற்கனவே ஜோதிகா-சூர்யா திருமணத்துக்கு சிவக்குமார் ஒப்புக்கொள்ளவில்லை. விஜயகாந்திடம்கூட இந்த விவகாரத்தை கொண்டு போனார்.. "மகனை கூப்பிட்டு கண்டிங்க.. எங்க சாதி சனத்தை வைத்து திருமணம் செய்து வைக்க நினைத்தேன், சூர்யாவை கூப்பிட்டு கண்டிங்க" என்றார் சிவக்குமார். அதற்கு விஜயகாந்த், 2 பேரும் லவ் பண்றாங்க, விட்ருங்க, சந்தோஷமா இருக்கட்டும்" என்றார்.
வாயில் சிகரெட்டுடன் ஜோதிகா
36 வயதினிலே படத்தில் நடிக்கும்போதுகூட எந்த பிரச்சனையுமில்லை.. மும்பையில் ஒரு விழாவில் சமீபத்தில் பங்கேற்ற ஜோதிகாவின் உடைதான் சர்ச்சையை கிளப்பியது..
வாயில் சிகரெட் வைத்து நடிப்பது, சினிமாதான் என்பதும், அது வெறும் நடிப்புதான் என்பதும் சிவக்குமாருக்கும நன்றாகவே தெரியும்.. ஆனால், சிவக்குமாருக்கு சிலர் போன் செய்து, உன் மருமகள் இப்படி நடிக்கிறாராமே? என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். சுற்றியிருப்பவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்ற பயம்தான் .
பாரம்பரியமான குடும்பம்.. சூர்யாவின் 2 பிள்ளைகளும் பெரிதாக வளர்ந்துவிட்டார்கள், சூர்யாவும் உயரத்துக்கு சென்றுவிட்டார்.. அப்படியிருக்கும்போது, இப்படியெல்லாம் நடிக்கலாமா? என்பதுதான் சிவக்குமாரின் மன உணர்வு.. இதுபோன்ற காட்சிகளில் விமர்சனங்கள் அதிகமாகவே வரும்.. அதற்கு பதில்களை சொல்ல வேண்டியிருக்குமே என்ற தர்மசங்கடம்தான்.
நல்ல மருமகள் ஜோதிகா
ஜோதிகா மீது சிவக்குமாருக்கு அன்பு இருக்கவே உள்ளது.. "நான் தேடினாலும் இப்படியொரு மருமகள் எனக்கு கிடைத்திருக்க மாட்டார்" என்று என்னிடமே ஒருமுறை சிவக்குமார் சார் சொல்லி உள்ளார்.. நல்ல மருமகள்தான்..
நடிக்கக்கூடிய கேரக்டர்களில்தான் இப்படி சர்ச்சை வந்துவிடுகிறது.. இதுபோன்ற சர்ச்சைகள் வராமல் இருக்க வேண்டுமானால், கேரக்டர்களை தேர்ந்தெடுத்து செய்யணும். அதில் இனி ஜோதிகா கவனமாக இருப்பார் என்றே தெரிகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications