விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்.. ரசிகர் போட்ட கமெண்டுக்கு ஜோதிகா கொடுத்த பதிலடி
சென்னை: நடிகை ஜோதிகா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அதிலும் சில நாட்களாக போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் போஸ்ட் ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த கமாண்ட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகள் தான் காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையை தொடர்ந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா தம்பதியும் ஒன்று. இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, காக்க காக்க, பேரழகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.

அதிலும் இவர்களுடைய நடிப்பில் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அப்போது இருந்து இவர்கள் காதலிக்க தொடங்கினர். அதைத் தொடர்ந்து ஏழு வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி இருவரும் ரெண்டு குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களுடைய திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா மற்றும் சூர்யா தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு அதிக நாட்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலமாக தான் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படம் பெண்களை மையமாக எடுக்கப்பட்ட கதைக்களம் நிறைந்ததாக இருந்தது. அதற்கு பிறகு அது போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரிலேயே ஜோதிகா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் ஹீரோ மற்றும் ஹீரோயின் கதைகளில் நடித்து தனக்கு போர் அடித்து விட்டது இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசி இருந்தார். குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகி இருக்கும் ஜோதிகா தற்போது Dabba Cartel என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.

இந்த வெப் சீரிஸ் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களாகவே போட்டோ சூட்டில் ஜோதிகா கலக்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தான் சமூக வலைதள பக்கங்களில் ஜோதிகா பகிர்ந்து வருகிறார் அதற்கு ரசிகர் ஒருவர் வெளியிட்ட கமெண்டுக்கு ஜோதிகா அதிரடியான பதில் கொடுத்து இருக்கிறார்.

அதில் ரசிகர் "விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்" என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜோதிகா பதிலடி கொடுக்கும் விதமாக சிரிக்கும் எமோஜியை மட்டும் கமாண்டாக கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் அதிகமான லைக் கொடுத்து வருகிறார்கள்.

-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications