கப்பலில் கேஆர் விஜயா.. கோடிகளில் புரண்ட டாப் நடிகை.. விரட்டி காலி பண்ண அரசியல் கட்சி அதுவா?: பிரபலம்
சென்னை: தன்னுடைய 2 மனைவிகளிடம் அனுமதி கேட்டுவிட்டுதான் 3வதாக கேஆர் விஜயாவை வேலாயுதம் திருமணம் செய்தார்.. கேஆர் விஜயாவையே நம்பியிருந்த அவரது தங்கைகளுக்கு, வேலாயுதம்தான் திருமணம் செய்து வைத்தார்.. அன்று இந்திரா காங்கிரசுக்கு சக்தியாக இருந்தார் வேலாயுதம் என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார்.
The Whistle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், "அன்றைய இளைஞர்களுக்கு, தன்னுடைய மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு கற்பகம் படத்தில் லட்சியப்பெண்ணாக நடித்திருப்பார் கேஆர் விஜயா.. சாவித்ரியையே அந்த படத்தில் காலி செய்துவிட்டார் கேஆர் விஜயா..

எங்கே கேஆர் விஜயா
அதற்கு பிறகு கேஆர் விஜயா என்ன படம் நடிக்க போகிறார் என்று வெளியே தெரியவில்லை.. உடனே ஒரு பிரபல வாரப்பத்திரிகை "எங்கே கேஆர் விஜயா?" என்று தலையங்கமே எழுதியது.. கை கொடுத்த தெய்வம் படத்தில், குறும்புக்கார பெண்ணாக நடித்திருப்பார் கேஆர் விஜயா..
இரு மலர்கள் என்ற படத்தில் பத்மினியோடு இணைந்து நடித்திருந்தார் கேஆர் விஜயா.. இந்த படத்தில் கேஆர் விஜயா நடிப்பில் ஒரு புத்தகமாக இருக்கிறார்.. அதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அப்போதைய பத்திரிகைகள் விமர்சனம் எழுதின..
நல்ல நேரம் - முன்னணி
உடம்பு பெரிதானாலும், கேஆர் விஜயாவால் நடிப்பில் நிற்க முடிந்தது.. சிவாஜி, ஜெமினியுடன் இணைந்து நடித்த அளவுக்கு எம்ஜிஆருடன் கேஆர் விஜயா நடிக்கவில்லை.. அப்படியே நடித்தாலும் 2வது கதாநாயகியாகவே கேஆர் விஜயா நடித்தார்.. நான் ஏன் பிறந்தேன், நல்ல நேரம் போன்றவற்றில்தான் முன்னிலை ஹீரோயினாக நடித்தார்..
ஆனால் சிவாஜியுடன் நடித்தபோதுதான் அதிக புகழ் பெற்றார். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியையே நடிப்பில் பீட் செய்திருப்பார்.. பட்டணத்தில் பூதம் படத்தில் நீச்சல் உடையில் நடித்தார்.. அதற்கு பிறகு பல நீச்சல் உடை அணிந்து நடித்தார் கேஆர் விஜயா..
சொந்தமாக 3 கப்பல்கள்
வேலாயுதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார்.. கேஆர் விஜயாவை வைத்து பல படங்கள் தயாரித்தார் வேலாயுதம்.. ஜஸ்டிஸ் விஸ்வநாத், பைலட் பிரேம்நாத், மேயர் மீனாட்சி, ஆளப்பிறந்தவள், வாயாடி போன்ற படங்களை அவரது கணவர்தான் எடுத்தார்.. ஏற்கனவே 2 திருமணம் செய்தவர் வேலாயுதம்.. 3வதாக கேஆர் விஜயாவை திருமணம் செய்து கொண்டார்..
ராமன் தெருவில்தான் கேஆர் விஜயாவுடன் வாழ்ந்து வந்தார்.. அடிக்கடி வீட்டில் விருந்து நடத்துவார்.. சுதர்சன் ஷிப்பிங் ஏஜென்சிஸ் வைத்திருந்தார்.. 3 கப்பல்களை சொந்தமாக வைத்திருந்தார்.. சொந்தமாக விமானம் வைத்திருந்தார்.. சுதர்சன் சிட்பண்ட் என்று இண்டர்நேஷனல் கம்பெனி வைத்திருந்தார்.. ஓடுகள் தயார் செய்யும் தொழிற்சாலை வைத்திருந்தார்.. கேரளாவின் மிகப்பெரிய தொழிலதிபராக விளங்கியவர் வேலாயுதம்..
மும்பையில் திருமணம்
அண்ணாவின் ஆசை என்ற படத்தை நடிகர் பாலாஜி எடுத்தார்.. அந்த படத்துக்கு வேலாயுதம் பைனான்ஸ் செய்ய போகும்போதுதான், கேஆர் விஜயாவுடன் நெருக்கம் ஏற்பட்டு, மும்பையில் திருமணம் நடந்தது..
தன்னுடைய 2 மனைவிகளிடம் அனுமதி கேட்டுவிட்டுதான் 3வதாக இந்த திருமணம் செய்தார்.. கேஆர் விஜயாவையே நம்பியிருந்த தங்கைகளுக்கு, வேலாயுதம்தான் திருமணம் செய்து வைத்தார்.. அன்று இந்திரா காங்கிரசுக்கு சக்தியாக இருந்தார் வேலாயுதம்..
அரசியல் செய்த சதி
காங்கிரஸ் ஆட்சி விழுந்து, மாற்று கட்சியான ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, வேலாயுதத்துக்கு நிறைய தொந்தரவுகள் வந்தன.. பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொண்டார்.. பல தொழில்களை மூடவேண்டியிருந்தது.,. இதனால் பல கோடிகளை இழக்க நேரிட்டது.. அன்று மலையாள பட உலகமே வேலாயுதத்தை நம்பியிருந்த நிலையில், அரசியல் நெருக்கடி தனக்கு வந்ததுமே, சினிமா எடுப்பதையும் நிறுத்திவிட்டார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications