Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோண்ட தோண்ட ஷாக்.. ரிதன்யா அப்பா பண்ணது ஆணவ கொலைக்கு நிகர்! பழைய பஞ்சாங்கம்.. வயிறு எரியுது: கஸ்தூரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருத்தனுக்கு ஒருத்தியாக தன்னுடைய மகள் பேசியிருந்ததை பெருமையாக அப்பா சொல்கிறார்.. இது கொலைப்பாதகமாகும்.. இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு? ரிதன்யாவின் அப்பா அண்ணாதுரைக்கு சரியான புரிதலே இல்லை.. ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது தமிழ்க்கலாச்சாரத்துக்குரியது.. இந்த கவின்குமார் தமிழ் கலாச்சாரப்படித்தான் இருந்திருக்கிறாரா? கவின்குமாரின் வக்கிரங்கள் தமிழ்க்கலாச்சாரத்தில் சொல்லி தரப்பட்டதா? அப்படின்னா, ஒருத்திக்கேற்றபடி ஒருத்தன் இருந்திருக்கணும் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

Nakkheeran tv யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள நடிகை கஸ்தூரி, "ரிதன்யாவே இங்கு கடைசியாக இருக்கட்டும்.. இன்னொரு ரிதன்யா வேண்டாம்.. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கல்வியறிவு இல்லாதவர்களுக்கு மட்டுமே இப்படியான வரதட்சணை கொடுமைகள் இருப்பதாக நினைக்கிறோம்..

Television actress kashuri rithanya

ஆனால், படித்த பெண், திறமையான பெண், கோடீஸ்வர வீட்டு பெண் இப்படி முடிவெடுக்க முடியுமா? என்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது.. வயிறு எரியுதுங்க.. அந்த பெண்ணின் ஆடியோ குரல் கேட்கும்போதே, வயிறு எரியுது..

78 நாளில் உடைந்த மனசு

அந்த பெண்ணுக்கு இருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தெறிந்துள்ளார்கள்.. இதில், பையனை பெற்றவர்கள், பெண்ணை பெற்றவர்கள் இவர்கள் இரு தரப்பிலுமே பொறுப்புள்ளது..

78 நாளில் நடைபிணமாக மாற்றியிருக்கிறார்கள்.. கணவர் கவின்குமார், அருவெறுப்பான மனித உருவத்திலுள்ள மிருகம்.. ரிதன்யா பேசுவதிலிருந்தே புரிகிறது, அசாதாரணமானவர் கவின்குமார்.. நார்மல் கிடையாது.. தம்பதி இருவரும் சண்டை போட்டால், அதனை மாமியார் ரசித்தபடி வீடியோ எடுப்பாராம்.. எதுக்காக இந்த வீடியோ எடுக்கணும்?

வெட்டி ஆபீசர் கவின்குமார்

கவின்குமார் பிசினஸ் செய்றதுக்கு 100 கோடி வேண்டும் என்று ரிதன்யா வீட்டினரிடம் கேட்டிருக்காங்க.. நானும் அவிநாசியில் என்னுடைய நண்பர்களிடம் கவின்குமார் குடும்பத்தை விசாரித்தேன்.. இந்த கவின்குமார் வெட்டி ஆபீசராக இருந்துள்ளார்... ஈஸ்வரமூர்த்தி எந்த வேலைக்கும் சென்று சம்பாதித்ததில்லை.. அவங்க தாத்தா சொத்து, நிலத்திலிருந்து வரும் வருமானம், இதெல்லாம்தான் கவின்குமார் குடும்பத்துக்கு வருமானமாக இருந்துள்ளது..

உலகத்தில் தாய்மார்கள் மகனுக்கு புத்தி சொல்வார்கள்.. தன்னுடைய பிரச்சனைகளை அப்பா அண்ணாதுரையிடம் வந்து ரிதன்யா சொல்லியிருக்கிறார்.. ஆனால், இங்குதான் அண்ணாதுரையும் தவறு செய்துள்ளார்.. செல்லம் கொடுத்து பெண்ணை வளர்த்தால் மட்டும் போதாது.. ஐயையோ, இதெல்லாம் வெளியில் தெரிந்தால் என்னாவது? என்று நினைத்துள்ளார்..

பார்க்கப்பட்ட பஞ்சாங்கம்

நாலு பேரிடம் விசாரித்து பார்த்தபோது, ஒழுக்கமான பையன், நல்ல குடும்பத்து பையன் என்று சொன்னார்களாம்.. உடனே பெண்ணை கொடுக்க முடிவு செய்துட்டாராம்..

சாதாரண குடும்பங்களிலேயே திருமணத்துக்கு முன்பு, ஆணும், பெண்ணும், பேசி பழகி பார்த்து கொள்கிறார்கள்.. இந்த பெண் அப்படி எதுவுமே கவின்குமாரிடம் பேசவில்லை.. பழைய பஞ்சாங்கமா பெண்ணின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். ரிதன்யாவை அப்படித்தான் வளர்த்துள்ளனர் என்பது, அந்த ஆடியோவிலேயே தெரியவருகிறது.

மகள் பிரச்சனை என்று வந்து சொன்னதுமே, கோயிலில் பஞ்சாங்கம் பார்த்துள்ளனர்.. பிறகு மறுபடியும் அதே வீட்டில் கொண்டுபோய் பெண்ணை ஒப்படைத்துவிட்டு வந்துள்ளார்கள்..

சரியான புரிதல் இல்லை

ஒருத்தனுக்கு ஒருத்தியாக தன்னுடைய மகள் பேசியிருந்ததை பெருமையாக அப்பா சொல்கிறார்.. இது கொலைப்பாதகமாகும்.. இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு?

அண்ணாதுரைக்கு சரியான புரிதலே இல்லை.. ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது தமிழ்க் கலாச் சாரத்துக்குரியது.. இந்த கவின்குமார் தமிழ் கலாச்சாரப்படித்தான் இருந்திருக்கிறாரா? கவின்குமாரின் வக்கிரங்கள் தமிழ்க்கலாச்சாரத்தில் சொல்லி தரப்பட்டதா? அப்படின்னா, ஒருத்திக்கேற்றபடி ஒருத்தன் இருந்திருக்கணும்.

"இந்த முறை என் தப்பு எதுவுமே இல்லைப்பா" என்று ரிதன்யா ஆடியோவில் சொல்கிறார்.. அப்படியானால் ஒவ்வொரு முறையும் பிரச்சனைகளை சொல்ல வரும்போது, அது மகளின் தப்பு என்று பெற்றோர் ரிதன்யாவை நம்ப வைத்தார்களா?கவின் என்பதற்கு பதிலாக கயவன் என்று பெயர் வைத்திருக்கலாம்.. ரிதன்யாவை தற்கொலைக்கு தூண்டியது, நிர்பயாவுக்கு நிகரான கொடுங்கோல் குற்றம்.

அப்பா செய்தது

அங்கங்கே கள்ளக்காதலனுக்காக, புருஷனை போட்டு தள்ளிட்டு இருக்காங்க.. இந்த பெண் அப்பாவியாக இருந்துள்ளார்.. அந்த கவினை படுக்கையறையிலேயே வைத்து, தலையை அறுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருந்தால்கூட, தற்காப்புக்காக கொலை செய்ததாக, குறைந்த பட்ச தண்டனையே கிடைத்திருக்கும்.

நிர்பயா விவகாரத்தை ஒப்பிடும் அளவுக்கு கவின் ஒரு வக்கிரம் பிடித்தவர் என்றால், ரிதன்யாவின் அப்பா செய்தது, ஆணவ கொலைக்கு நிகரான குற்றமாகும். குடும்ப கவுரவம் என்று சொல்லியே பெண்ணை மேல் உலகத்துக்கு அனுப்பி விட்டதில் அவருக்கும் பொறுப்பு உள்ளது" என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+