சோதனை எலியாக என் பொண்ணை அனுப்பி வச்சேன்.. நானே என் கையால் அந்த ஊசி போட்டேன்! கதறி அழுத நடிகை கஸ்தூரி
சென்னை: நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய மகள் புற்றுநோய் பாதிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்று கண் கலங்க பேசி இருந்தார். தன்னுடைய மகள் உயிர் பிழைத்து வருவாளா? இல்லையா? என்ற கேள்விகளோடு தான் மருத்துவமனையில் பட்ட கஷ்டங்கள் குறித்து கஸ்தூரி பேசி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
நடிகை கஸ்தூரி 90ஸ் காலகட்டத்தில் ஒரு சில சினிமாவில் நடித்திருந்தார். இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக கஸ்தூரி நடித்திருந்தார். அதுபோல பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக கஸ்தூரி நடித்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதுபோல சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் டப்பிங் சீரியலில் இவர்தான் பாக்கியலட்சுமி ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலிலும் போலீஸ் ஆபிஸராக நடித்து வருகிறார். அதுபோல நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய மகளுடன் கஸ்தூரி கலந்து கொண்டார்.
புற்றுநோய் பாதிப்பு
அப்போது தன்னுடைய மகளுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு ஏழு வருடங்களாக தான் பட்ட வலி, வேதனை குறித்து பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய மகளுக்கு சாப்பிட்டதும் வாந்தி வந்து விடும், அப்போது அவருக்கு மேலும் பல பிரச்சனைகளும் உடலில் இருந்தது அதனால் நாங்கள் அதற்காக ஹாஸ்பிடலுக்கு போன போதுதான் என்னுடைய மகளுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னார்கள். அப்போது எனக்கு ரொம்பவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.
மருத்துவமனை கஷ்டம்
என்னுடைய மகளை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஏழரை வருடமாக என்னுடைய மகளுடன் நானும் ஹாஸ்பிட்டலில் தான் இருந்தேன். கடந்த ஏழரை வருடங்களாக நான் நிம்மதியாக தூங்கியது கிடையாது. குறைந்தபட்சம் 5 மணி நேரம் மட்டும் தூங்கி இருப்பேன். புற்று நோயோடு போராடி என்னுடைய மகள் மீண்டு வருவாளா? இல்லையா? என்ற கேள்வியுடனே ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருந்தது. இப்போதுதான் நான் நிம்மதியாக தூங்குகிறேன்.
கஸ்தூரி மகளின் நிலை
என்னுடைய மகள் தலைமுடியில் கை வைக்கும் போதெல்லாம் முடி கொத்து கொத்தாக வந்தது. அவளை ஹாஸ்பிடலுக்குள் நாங்கள் அனுப்பும் போது ஒரு சோதனை எலியாக தான் அனுப்புனோம். அவளுக்கு ஊசி நான் தான் போட்டுக் கொண்டிருந்தேன். தினமும் ஸ்டீராய்டு ஊசி போட்டதால் அவளுடைய எலும்புகள் எல்லாம் பலன் இல்லாமல் போய்விட்டது. பர்கர் சாப்பிடும் போது அவருடைய பல் அந்த பர்கரில் வந்து விட்டது. அவ்வளவு பலன் இல்லாமல் அவள் மாறி இருந்தாள்.
ஆனால் இன்று அவள் புற்றுநோயை எதிர்த்து போராடி ஜெயித்து வந்திருக்கிறாள். இந்த நோய் பாதிப்பில் இருக்கும் குழந்தைகள் மீண்டு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று பேசும்போதே கஸ்தூரி கண்கலங்கி அழுது இருக்கிறார்.












Click it and Unblock the Notifications