எங்க வீட்டில் அந்த சிலை வைத்து வணங்குகிறேன்.. முதல் முறை பல ரகசியங்களை உடைத்த நடிகை கௌசல்யா
சென்னை: நடிகை கௌசல்யா நடிகர் விஜய், முரளி போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பிறகு சில சீரியல்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
சில நாட்களாக பல youtube சேனல்களுக்கு தொடர்ச்சியாக கௌசல்யா பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய வாழ்க்கை குறித்தும் பல தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை கௌசல்யா தன்னுடைய அம்மா மற்றும் தன்னுடைய கடவுள் நம்பிக்கை குறித்தும் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கௌசல்யா. இவர் கார்த்தி, பிரபுதேவா, முரளி, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்திருந்தார். கௌசல்யாவின் முதல் திரைப்படம் மலையாளமாக இருந்தாலும் இவரை வளர்த்து விட்டது தமிழ் சினிமா தான்.
அதுபோல காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமாகி இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னுடைய கவிதா என்ற பெயரை மாற்றி கௌசல்யா என வைத்துக்கொண்டார். இப்போது வரைக்கும் இவர் கௌசல்யாவாகத்தான் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார்.
அத்தோடு இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவருக்கு 39 வயதை தாண்டிய பிறகும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார். அதில் திருமணம் செய்து கொண்டு கணவன் குழந்தை என குறுகிய வட்டாரத்திற்குள் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் தற்போதும் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறேன் என்றும் கூறியிருந்தார்.
இதுபோல தனக்கு தன்னுடைய அம்மா அப்பா மீது அதிகமாக பாசம் இருக்கிறது. அவர்களை பிரிந்து என்னால் இருக்க முடியாது. அதுபோல நான் இல்லாமல் அவர்களாலும் இருக்க முடியாது. அதனால் கூட நான் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை என்றும் கௌசல்யா கூறியிருந்தார். அதுபோல சில வருடங்களுக்கு முன்பு கௌசல்யா சில உடல் நல பிரச்சனைகள் காரணமாக அதிக அளவில் உடல் எடை கூடியிருந்தார்.

அதனாலே சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் பிறகு கடுமையான உடற்பயிற்சி மற்றும் சாப்பாடு கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு வந்து இப்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய பேட்டி ஒன்றில் அவர் வீட்டில் ஒரு சிவன் சிலை வைக்கப்பட்டு இருப்பது குறித்து பேசி இருக்கிறார்.
அதாவது எங்க அம்மா ஸ்ரீலங்காவில் இருந்து வந்தவங்க. அப்போ அவங்களுக்கு கலாச்சாரம் எல்லாம் தெரியும். அவங்க சொல்லிக் கொடுத்ததை தான் நான் கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கு. வீட்டில் எல்லோரும் சேர்ந்து தான் பூஜை பண்ணுவோம். இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போயிடனும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று அந்த பேட்டியில் கௌசல்யா பேசியிருக்கிறார்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications