என் கணவருக்கு விருப்பமில்லை.. என்னால் அவருக்கு சங்கடம்! திருமண உறவு குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு வருத்தமாக பதில் அளித்து இருக்கிறார். அதில் தன்னுடைய கணவருக்கு தன்னால் சங்கடம் ஏற்படுவதாக கீர்த்தி சுரேஷ் கூறி இருப்பது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள் சில மாதங்களாகவே இணையத்தில் அதிகமாக அடிபடுகிறது. 15 வருடங்களாக அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து வந்த நிலையில் தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் மாதத்தில் தான் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய காதலரை சமூக வலைதள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். தன்னுடைய காதலரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஆமாம் நாங்கள் திருமணம் செய்யப் போகிறோம். நாங்கள் காதலிக்க தொடங்கி 15 வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. திரைத்துறையில் மிகவும் குறைவானவர்கள் மட்டுமே கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையுடன் மஞ்சள் தாலியுடன் பேபி ஜான் திரைப்பட பிரமோஷனுக்கு சென்று பலருடைய கவனத்தையும் ஈர்த்தார்.
அதற்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது என்னை திருமணம் செய்து கொண்டதுதான் ஆண்டனிக்கு சங்கடமாக உள்ளது என்று பேசி இருக்கிறார். அதுதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய கணவரின் பெருந்தன்மையான செயல்பாடுகள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசி இருக்கிறார்.
அதில், திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை மாறியதாக தெரியவில்லை. எல்லாமே முன்னாடி எப்படி இருந்தது அது போல தான் இப்போதும் இருக்கிறது. ஆனால் எங்கே சென்றாலும் புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.
நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. அது மட்டும் இன்றி இது எனக்கு பழகிவிட்டது. ஆனால் என் கணவருக்கு இது பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் இது குறித்து எதுவும் சொல்வதில்லை. எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார்.
எனது கணவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவேட்டாக வைத்திருக்கிறார். தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் அவருக்கு விருப்பம் கிடையாது. எனக்காக போஸ் கொடுக்கிறார். மீடியா முன்பு வர கூச்ச பட்டாலும் என்னுடைய கேரியருக்கு அது மிகவும் முக்கியமானது என்று அவர் புரிந்து நடக்கிறார் என கீர்த்தி சுரேஷ் சொல்லி இருக்கிறார்.
அதோடு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சில வருடங்களாகவே பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அவருடைய கணவரும் முக்கிய சப்போர்ட்டாக இருந்து வருகிறார்.
காதலித்துக் கொண்டிருக்கும் போது உன்னுடைய கனவு ஆசையை நீ எப்போதும் தொடரலாம் என்று அந்தோணி மிகவும் சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். அதோடு கீர்த்தி சுரேஷ் பற்றி பல வதந்திகள் வந்தபோது கூட கீர்த்தி சுரேஷ்க்கு சப்போர்ட்டாகத்தான் இருந்தாராம். அதனால் தான் எனக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் கடக்க முடிகிறது என்று கீர்த்தி சுரேஷ் பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications