நெப்போலியனுக்கு அப்பவே 400 கோடி நஷ்டம் வந்தது.. மகனுக்காக அவர் செய்த தியாகம்.. குஷ்பூ ஓபன்
சென்னை: நடிகர் நெப்போலியன் பற்றி நடிகை குஷ்பூ பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது நெப்போலியன் சென்னையில் ஐடி பிசினஸ் தொடங்கும்போது 400 கோடி நஷ்டம் வந்தது என்றும் அதற்கு பிறகு அவர் எப்படி அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார் என்றும் அந்த பேட்டியில் குஷ்பூ பகிர்ந்து இருக்கிறார்.
நேற்று நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நெப்போலியனின் மூத்த மகனுக்கு நான்கு வயது இருக்கும்போது தசை சிதைவு என்ற அரிய வகை நோய் பாதிக்கப்பட்டதால் 10 வயதிற்கு பிறகு அவரை அவரால் நடக்க முடியவில்லை.

அவர் வீல் சேர் உதவியோடு தான் தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு திருமணம் செய்து வைப்பது அந்த பெண்ணின் வாழ்க்கையை அழிப்பதற்கு சமம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் நெப்போலியன் தன்னுடைய மகனின் வாழ்க்கைக்காக நல்ல முடிவு எடுத்திருக்கிறார் என்று பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நெப்போலியனின் தோழியான குஷ்பு இந்த திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது கலாட்டா youtube சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை இணையத்தில் அதிகமான ரசிகர்கள் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். அதில் குஷ்பு பேசுகையில், நெப்போலியன் என்னோடு பல படங்களில் நடித்திருக்கிறார்.
அவரோடு நான் படங்களில் நடிக்கும் போது எனக்கு நட்பு ஏற்பட்டது. ஆனால் அதை விடவும் அவர் ஒரு ஆளுமை மிக்க நபராக நடிகர் சங்கத்தில் இருந்து இருக்கிறார். ஒரு நடிகைக்கு எந்த பிரச்சனை என்றாலும் நாம் கம்ப்ளைன்ட் செய்யவில்லை என்றால் கூட அவரே போன் செய்து விசாரிப்பார். அதுபோல நெப்போலியன் பலருக்கும் நடிகராக தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த தந்தை.

நடிகர் சங்கத்தில் அவ்வளவு பெரிய ஆளுமையோடு இருக்கும் அவர் குடும்பம் என்று வந்தால் நடுங்கி போய்விடுவார். குடும்பத்தின் மீது ரொம்பவும் பாசமுள்ள நபர். அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது சென்னையில் ஒரு ஐடி பிசினஸ் தொடங்கியிருந்தார். அதில் அவருக்கு 400 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் அது பற்றி பலர் விமர்சித்து வந்தார்கள்.
நடிகன் என்றால் நடித்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே எதற்காக ஐடி பிசினஸ் வந்தார் என்றெல்லாம் சிலர் கிண்டல் செய்தார்கள். அந்த நேரத்தில் தான் அவர் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து செட்டில் ஆகி இருக்கிறார். அமெரிக்காவிற்கு அவர் பிசினஸுக்காக மட்டும் செல்லவில்லை தன்னுடைய மகனுக்காகத்தான் அந்த முடிவை எடுத்தார்.
அமெரிக்காவில் உள்ள கிளைமேட் தன்னுடைய மகனின் உடல் நிலைக்கு சரியாக இருக்கும் என்றுதான் அவர் அமெரிக்காவிற்கு வந்தார். அங்கிருந்த சில வருடம் எங்களோடு பெரியதாக பேசவில்லை. ஆனால் அதற்கு பிறகு இரண்டு வருடம் கழித்து அவருடைய மனைவி எனக்கு போன் செய்து நெப்போலியனின் 60-வது பிறந்தநாளில் நீங்க எல்லோரும் கலந்துக்கணும் என்று சொன்னார்.

நாங்கள் அவருடைய பிறந்தநாள் பங்க்ஷனில் கலந்து கொண்ட போது எங்களை பார்த்ததும் நெப்போலியன் அழுதுவிட்டார். அது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. வெளியே கம்பீரமாக இருக்கும் அவருடைய மனது குழந்தை போன்றது. யாருக்கு உதவி என்றாலும் ஓடி சென்று உதவி விடுவார்.
இப்போது அவருடைய மகனின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவருடைய பெரிய கனவு லட்சியம் நிறைவேறிவிட்டது என்று அவர் சொல்லி இருக்கிறார். எங்களுக்கு அவருடைய திருப்தியான முகத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் குஷ்பூ பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications