பூர்ணிமா சொன்ன வார்த்தை.. பாக்யராஜ் இறப்பிற்கு வராத காரணம் இதுதான்! நடிகை குஷ்பூ எமோஷனல்
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் சில வாரங்களுக்கு முன்பு திடீரென காலமானது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு ஏராளமான திறை பிரபலங்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆனால் பாக்யராஜ் உடன் பல படங்களில் நடித்தும் அவரது குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த நடிகை குஷ்பூ அப்போது நேரில் வராதது சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக மாறியது. இவ்வளவு நெருக்கமாக இருந்த குஷ்பு ஏன் வரவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு பல வாரங்களுக்கு பிறகு குஷ்பு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகை குஷ்பு பேட்டி
குஷ்பூ சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, என்னுடைய மகள் திருமணத்திற்கு பாக்யராஜ் சார் சந்தோஷமக வந்து கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் உயிரிழந்தது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் ஏன் அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்று நிறைய பேர் கேட்கிறாங்க. அதற்கு ஒரே ஒரு காரணம் பூர்ணிமா தான்.

பாக்யராஜ் இறப்பு
எங்கள் வீட்டில் என் மகள் கல்யாணத்திற்காக பந்தக்கால் நடப்பட்டிருந்தது. திருமணம் முடிந்து மகளே கோவாவில் இருந்து வீட்டிற்கு திரும்பவில்லை. அந்த நேரத்தில் துக்க வீட்டிற்கு போகக்கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொன்னார்கள். பூர்ணிமாவும் எனக்கு போன் செய்து நீ இப்போ வர வேண்டாம் என்று சொன்னார். அதனால் தான் நான் உடனடியாக வரவில்லை என்று குஷ்பு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இறுதி அஞ்சலி சர்ச்சை
தொடர்ந்து பேசிய குஷ்பு, எங்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் என்ன உறவு? என்ன புரிதல் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். வெளியே இருப்பவர்களுக்கு அது தெரியாது. அதனால் தான் பலரும் பலவிதமாக பேசினார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். தமிழ் திரை உலகினர் பலரும் அவருடைய வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சுந்தர் சி மகள் கல்யாணத்தில் விஜய் கலந்து கொள்ளாத காரணம் இதுதான்! அப்பவே நேரடியாக சொல்லிட்டாரு! குஷ்பூ ஓபன்
அப்போது ஏற்பட்ட கூட்டத்தில் நடிகை ராதிகா, சுஹாசினி கோபமாக கத்திய விஷயங்களும் கவனம் பெற்றது. அதையெல்லாம் தாண்டி குஷ்பு வரவில்லையே என்ற கேள்வியும் இழந்தது. அதுபோல பாக்யராஜ் மறைந்ததும் அவரை பற்றி வருத்தமாக குஷ்பூ பதிவு வெளியிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய மகள் திருமண புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அப்போது அதுவும் சர்ச்சையாக பேசப்பட்டது அதற்கு குஷ்பூ பதிலடியும் கொடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications
