வரலட்சுமி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சொன்னாங்களே.. அவங்க அப்பா ஏன் இதை செய்யல? நடிகை குஷ்பூ கேள்வி
சென்னை: மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் பங்கேற்று இருக்கிறார். அப்போது வரலட்சுமி சில வருடங்களுக்கு முன்பு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சொன்னது பற்றி கேட்ட கேள்விக்கு தன்னுடைய ஆதங்கத்தை குஷ்பு வெளிபடுத்தி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பல நடிகைகள் தாங்களும் இந்த பிரச்சனையை சந்தித்ததாக ஏற்கனவே பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்கள். ஆனால் இப்போது மலையாள சினிமா உலகில் நடக்கும் அவலங்கள் ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலமாக அம்பலமாகி இருக்கிறது. இதை தொடர்ந்து தமிழ் நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள், தங்கள் கண் முன்பு சில நடிகைகளுக்கு நடந்த அநியாயங்கள் என பலவற்றையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இது பற்றி நடிகை ராதிகா, குஷ்பூ, லட்சுமி ராமகிருஷ்ணன், விசித்திரா போன்ற பலர் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ராதிகா பேட்டி ஒன்றில் தான் மலையாள சினிமாவில் நடிக்கும் போது அந்த செட்டில் ஒரு சிலர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அது நடிகைகள் உடைமாற்றும் கேரவனிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்று தெரிந்ததும் தான் அங்கு சண்டை போட்டதாகவும் பிறகு அந்த வீடியோக்களை அங்கிருந்தவர்கள் டெலிட் செய்ததால் அது பற்றி நான் நடிகைகளிடம் கேரவனில் டிரஸ் மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் பேசி இருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு சினிமா துறையில் இந்த மாதிரி அட்ஜஸ்டமென்ட் பிரச்சனை சின்ன கதாநாயகிகளுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களின் வாரிசுகளுக்கும் நடந்திருக்கிறது. ஏன் நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு கூட இந்த பிரச்சனை நடந்திருக்கிறது என்று ராதிகா பேசியிருந்தார். ஏற்கனவே இதுபற்றி சில வருடங்களுக்கு முன்பே வரலட்சுமியும் பேட்டியில் பேசியிருந்தார்.

இது பற்றி நடிகை குஷ்புவிடம் சமீபத்தில் ஒரு தனியார் செய்தி சேனலில் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதில் செய்தியாளர் குஷ்புவிடம் சில நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் பற்றி வெளியே சொன்னால் அதைப்பற்றி ஏன் நீங்கள் சக நடிகையாக கண்டுகொள்ளவில்லை. குற்றம் சொல்பவர்களுக்கு ஏன் பிறகு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக பாடகி சின்மயியை சொல்லலாம் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மேல் பாலியல் புகார் ஒன்று கொடுத்திருந்தார். அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் அதற்கு பதிலாக அவருக்கு வேலை பறிபோய்விட்டது, டப்பிங் பேச முடியவில்லை, பாட முடியவில்லை. அதுபோல நடிகை வரலட்சுமிக்கும் இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடந்ததாக அவர் வெளியே சொன்ன பிறகு அவருக்கு தமிழில் பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று செய்தியாளர் குஷ்புவிடம் கேட்கிறார்.
அதற்கு குஷ்பூ பேசுகையில் அப்போ பாலியல் குற்றச்சாட்டு யார் மீது கொடுக்கிறார்களோ அவர்களால் தான் வேலை வாய்ப்பு போனது என்று சொல்ல வரீங்களா? என்று கேட்டிருக்கிறார். இப்பலாம் சினிமாவில் பாடுவதற்கு பலர் புதியதாக வந்து கொண்டிருக்கிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதால் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் கூட இருக்கலாம். அதே போல வரலட்சுமி என்னையும் ஒருமுறை அட்ஜஸ்ட்மென்ட்டுக்காக அப்ரோச் பண்ணுனாங்க என்று பேசிய போது அவருக்காக நீங்க ஏன் குரல் கொடுக்கவில்லை என்று குஷ்புவிடம் கேட்கிறார்.

அதற்கு குஷ்பு முதலில் அவருடைய அப்பா தட்டி கேட்டாரா? அவங்க அப்பா எவ்வளவு பெரிய நடிகர்? அவங்க நடிகர் சங்கத்தில் இருந்திருக்காங்க ஆனாலும் அவங்க இதை தட்டி கேட்டாங்களா? பேட்டியில் சொன்னால் மட்டும் போதாது. எந்த ஒரு பிரச்சனை என்றாலும் சங்கத்திடம் வந்து சொல்ல வேண்டும். அதுக்குன்னு ஒரு கமிட்டி இருக்கு அங்க வந்து சொன்னால் தானே பிரச்சனை என்னவென்று கேட்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று அந்த பேட்டியில் நடிகை குஷ்பூ பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications