முதல் கணவருடன் இருக்கிறேன்.. பிரிந்த 2ஆவது கணவருக்கு பிடிக்கவில்லை.. மனம் திறந்த பிரபல நடிகை
சென்னை: தனது இரண்டாவது கணவரை பிரிந்த பிறகு முதல் கணவரை தான் அழைத்தது அவருக்கு பிடிக்கவில்லை என நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குட்டி பத்மினி. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் , ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

தமிழகத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்ற முதல் பெண் இவர்தான். இந்த விருதை களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசனுடன் நடித்ததற்காக விருது கிடைத்தது. இவர் 3 வயது முதல் நடித்து வருகிறார்.
பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குட்டி பத்மினி நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் கலாஷேத்ராவில் பாலியல் குற்றங்களை நடக்கவில்லை என பிக்பாஸ் அபிராமி தெரிவித்திருந்தார். இதற்கு குட்டி பத்மினி கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் பதிலுக்கு அபிராமியும் வயதில் பெரியவர் என்றும் பாராமல் அவருடைய கேரக்டரையே தவறாக விமர்சிக்கும் அளவுக்கு பேசியிருந்தார்.
இந்த நிலையில் குட்டி பத்மினி அண்மையில ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது முதல் கணவர் குடிபோதைக்கு அடிமை ஆகி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். யாருக்கோ உதவும் எண்ணம் இருந்த எனக்கு என்னுடைய முதல் கணவர் நோய் பாதிப்பில் இருக்கும்போது அவரை எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்? என்னதான் இருந்தாலும் அவர் என் முதல் கணவர்.
அவரோடு நான் வாழ்ந்திருக்கிறேன். என் குழந்தைக்கு அவர் அப்பா. பிரிவு ஒருவரால் வருவதில்லை. இருவரால் வருவது என்கிற பக்குவம் எனக்கு வந்தது. என் மகள் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். "அப்பாவிற்கு அடிப்பட்டு இருக்கிறது ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்" என கூறினாள். அப்போது அவரை மருத்துவமனையில் சேர்த்தேன். மேலும் அவரை வீட்டில் தங்க வைத்து என் அலுவலகத்தில் வேலை போட்டு கொடுத்தேன்.
செலவுக்கு வேண்டுமே என்பதற்காக ரூ 30 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன், அட்மின் வேலை செய்து வந்தார். தினமும் என் அலுவலகத்திற்கு வருவார். தனி கேபின் கொடுத்திருக்கிறேன். ஒரு நாய் குட்டிக்கு ரூ 10 ஆயிரம் செலவு செய்கிறோம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதருக்கு செலவு செய்ய என்ன இருக்கிறது? என்னுடைய இரண்டாவது கணவர் ஒரு நாள் போன் செய்தார்.
உன் முதல் கணவர் உன்னிடமே வந்துவிட்டார். உனக்கு என்ன சந்தோஷமா என கேட்டார். ஆமாம் உங்களுக்கு அதில் என்ன வயிற்றெரிச்சல் என பதிலடி தந்தேன். உடனே அருகில் இருந்த என் மகள் எப்படி என் அம்மாவிடம் இப்படி கேட்கலாம் என அவரிடம் சண்டை போட்டாள். இவ்வாறு குட்டி பத்மினி அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications