சீக்கிரமா இந்த உலகத்தை விட்டு போயிடனும்.. கேமரா வச்சு பார்க்கிறாங்க.. பகீர் கிளப்பிய குட்டி பத்மினி
சென்னை: நடிகை குட்டி பத்மினி தான் சீக்கிரமாக இந்த உலகத்தை விட்டு போய்விட வேண்டும் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
தான் தினமும் எனக்கு சீக்கிரமாக இறப்பு வந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
யாராவது என்னிடம் நூறு வருடம் வாழ வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்தால் நான் பதறி விடுவேன் என்றும் அதற்கு விளக்கமும் குட்டி பத்மினி கொடுத்திருக்கிறார்..
நடிகைகள் பலர் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சில வருடங்கள் மட்டுமே ஜொலித்து விட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் இப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வருகையில் குட்டி பத்மினியும் ஒருவராக இருந்து வருகிறார்.

குட்டி பத்மினி 'ஆம்பள அஞ்சுலம்' என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி இருக்கிறார். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பழமொழிகளிலும் இவர் தன்னுடைய மூன்று வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ,ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களோடு இவர் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் குழந்தையும் தெய்வமும் என்ற திரைப்படத்திற்காக சிறந்த தேசிய விருதையும் இவர் பெற்றிருக்கிறார். பிறகு இவர் பெண்மணி, அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்பந்தி போன்ற சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது இவர் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பெண் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வரும் இவர் குழந்தையும் தெய்வமும், கிருஷ்ண தாசி, ராமானுஜர், ரோமாபுரி பாண்டியன் போன்ற பல நிகழ்ச்சிகளையும் தயாரித்திருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் குட்டி பத்மினி தன்னுடைய வாழ்க்கையை குறித்து பல தகவல்களை கூறி இருக்கிறார். அதில் தான் ரொம்ப நாட்கள் வாழ வேண்டும் என்று விருப்பமில்லை. எனக்கு யாரையும் நம்பிக் கொண்டு வாழ்வது பிடிக்காது. என்னையும் யாரையும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது என்று தான் என்னுடைய மகள்களை நான் நன்றாக படித்து வைத்திருக்கிறேன். அவர்கள் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள். ஒரு மகள் மட்டும் படித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய படிப்பு முடிந்ததும் நான் இறந்து போய்விட்டால் நன்றாக இருக்கும்.
எல்லோரும் கடவுளிடம் நீண்ட ஆயுளைக் கொடு என்று கேட்பார்கள். நான்தான் என்னுடைய மகள் படித்து முடிப்பது வரைக்கும் எனக்கு ஆயுள் இருந்தால் போதும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன் இன்னும் 7 வருடத்திற்குள் என்னுடைய மகள் படிப்பு முடிந்துவிடும். அதற்குப் பிறகு நான் நிம்மதியாக போய் சேர வேண்டும். நான் ஒரு சுயசரித புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த புத்தகத்தில் பல பிரபலங்கள் பற்றியும் எழுதி இருக்கிறேன். அதனால் நான் இறந்த பிறகு அந்த புத்தகத்தை அவர்கள் பப்ளிஷ் செய்ய சொல்லி கூறி இருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல் என்னுடைய மகள்கள் இருப்பதுதான் அமெரிக்காவில் ஆனால் வீடு முழுக்க கேமரா வச்சிருக்காங்க. அதனால இங்க சின்னதா ஒரு சத்தம் கேட்டாலும் என்ன ஆச்சு என்று போன் பண்ணி என்ன கேள்வி கேட்கிறாங்க. கையில் எப்போதும் ஒரு வாட்ச் மாட்டி விட்டிருக்காங்க. அதில் நீங்க இன்னைக்கு டார்கெட் முடிக்கல இன்னும் நடக்க வேண்டியது இருக்கு என்று என்னை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறார்கள். வீட்டில் கதவு வேகமா சாத்துனா கூட சத்தத்துக்கும் போன் பண்ணி என்ன ஆச்சு கீழே ஏதோ விழுந்துட்டீங்களா ன்னு கேக்குறாங்க.
என் மகள்கள் என் மீது பாசமாக இருக்கிறார்கள். ஆனால் எனக்கு யாரும் எப்போதும் நிரந்தரம் என்று நம்பிக்கை கிடையாது. யாரையும் நம்பிக் கொண்டு இருக்கவும் கூடாது. இவர்கள் இருந்தால்தான் நம்மால் முடியும் என்று எப்போதும் நினைக்கக் கூடாது. யாராவது நான் வெளியே செல்லும்போதும் ஆசீர்வாதம் வாங்கும்போதும் உங்களுக்கு நூறு வயசு என்று சொன்னால் எனக்கு கடுப்பாக இருக்கும். அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க என்று நான் கெஞ்சி கொண்டிருப்பேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications