பாண்டியன் ஸ்டோர் முடியப்போகிறதா? அந்த மாதிரி காட்சிகளில் கஷ்டம்! விளக்கம் கொடுத்த முல்லை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடிகை லாவண்யா நடித்து வருகிறார்.
ஒரு பேட்டியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பற்றி பல்வேறு தகவல்களை கூறி இருக்கிறார்.
சீரியல் எப்போது முடிய போகிறது என்பது பற்றியும் இந்த சீரியலில் தனக்கு எந்த மாதிரி கஷ்டங்கள் வந்தது என்பது பற்றியும் பல தகவல்களை கூறி இருக்கிறார்.

புது முல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போதைய புது முல்லையாக நடிகை லாவண்யா நடித்து வருகிறார். இந்த சீரியலில் தற்போதைய முல்லை கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். ஆனாலும் ஒரு சில நேரங்களில் இவரை பற்றியும் பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சிரித்த மீம்ஸ்
உலகில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகையாக லாவண்யா சில தகவல்களை கூறியிருக்கிறார். அதில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பற்றி சில நாட்களுக்கு முன்பு எனக்கு வந்த மீம்ஸ் பார்த்து நானே ரொம்பவே சிரித்திருக்கிறேன். அதுவும் இது பாண்டியன் ஸ்டோரா அல்லது கர்ப்பம் ஸ்டோரா என்று பலர் கூறி வந்தனர். ஏற்கனவே இந்த சீரியலில் நான் நடிக்கும்போது என்னிடம் பாசிட்டிவ்வான கேரக்டர் என்று சொல்லியிருந்தார்கள். சீரியலில் அறிமுகமான உடனே எனக்கு கர்ப்பமாக இருப்பது போன்று சீன் வந்தது. அப்போது எனக்கு கொஞ்சம் ஆரம்பத்தில் ஒரு தயக்கமும் குழப்பமும் இருந்தது. இந்த சீரியலில் நான் நடிக்கும்போது என்னிடம் பாசிட்டிவ்வான கேரக்டர் என்று சொல்லியிருந்தார்கள்.

முடிவிற்கு இப்போது வாய்ப்பில்லை
ஏற்கனவே சிப்பிக்குள் முத்து சீரியலில் ஆரம்பமாகும் போது துரு துரு என கேரக்டரில் அறிமுகமாகி பிறகு கல்யாணம் குழந்தை என அடுத்தடுத்து அந்த சீரியலில் நடித்தது எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்த நிலையில் மீண்டும் அடுத்த சீரியலிலும் அதே போலவே நடிக்க வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கதை கேட்ட பிறகு சரி ஓகே என்று மனம் மாறிவிட்டது. இந்த நிலையில் அனைவரும் அடுத்தடுத்து குழந்தைகள் கர்ப்பமாவார்கள் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஆனால் அதை குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான மீம்ஸ்கள் வலம் வந்தது. அந்த நேரத்தில் இந்த சீரியல் டிஆர்பி குறைந்ததால் சீக்கிரத்தில் முடிய போகிறது என்றெல்லாம் கூறி வந்தார்கள். ஆனால் அப்படி ஒரு ஏற்பாடு அங்கே நடைபெறவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

கஷ்டமான நடிப்பு
மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எனக்கு முல்லையாக நடிக்கும் போது சில இடங்களில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதுவும் முதலில் ஆரம்பம் ஆகும் போது அம்மாவை நீ, வா, போ என்று பேசுவது எனக்கு தயக்கம் மிகவும் கஷ்டமாகவும் இருந்தது. நான் நிஜத்தில் எங்க அம்மாவை வாங்க போ போங்க என்று கூப்பிடுவேன். ஆனால் இந்த சீரியலில் அம்மாவை வா போ என்று பேசும்போது எனக்கு முடியவில்லை. பல நேரங்களில் திணறியிருக்கிறேன். ஆனால் எனக்கு டப்பிங் பேசுபவர்கள் அப்படி அழகாக நான் பேசுவதை மேனேஜ் செய்து கொண்டு போய் விடுகிறார்கள். ஆனால் நான் ஷூட்டிங்கில் இப்போதும் அம்மாவை வாங்க என்று தான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்
என்று கூறி இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications