எனக்கு ரொம்ப சங்கடமாக இருந்துச்சு.. கவின் பற்றி வெளிப்படையாக பேசிய லாஸ்லியா.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை லாஸ்லியா தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஒன்றாக பழகிய கவின் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார். இதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இலங்கையில் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்த லாஸ்லியாவுக்கு தமிழில் அறிமுகம் கொடுத்தது பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தான். இந்த சீசன் தான் இதுவரைக்கும் நடைபெற்ற 8 சீசன் நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் கவர்ந்த சீசன் என்று பலரும் கூறுவார்கள். அதற்கு காரணம் அந்த சீசனில் வனிதா விஜயகுமார், சாண்டி மாஸ்டர், கவின், லாஸ்லியா, முகுந்தன், தர்ஷன் உட்பட பலர் கலந்துகொண்டு கலகலப்பாக விளையாடி இருந்தனர்.

அதுபோல லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். அப்போது கவினோடு ஆரம்பத்தில் நட்பாக பழகி பிறகு இருவரும் காதல் கண்டன்ட் கொடுக்க தொடங்கி இருந்தனர். அப்போது சோசியல் மீடியாவில் கவின் லாஸ்லியாவின் வீடியோக்கள் தான் இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருந்தது.
நான் செய்த தப்பு வினையா போச்சு..! அப்பாவை பிணமா தான் பார்த்தேன்.. கண்கலங்கிய லாஸ்லியா
ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டனர். அதற்கு பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசவே இல்லை. அதுபோல கவினுக்கு திருமணமும் நடைபெற்று விட்டது. தற்போது கவினும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
அதுபோல லாஸ்லியா கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற திரைப்படம் வெளியானது. அது மட்டும் அல்லாமல் ஆல்பம் சாங், மாடலிங், விளம்பரம் என்று பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் யோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் லாஸ்லியா நடித்துள்ள ஜென்டில்வுமன் திரைப்படம் விழா சமீபத்தில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். பல பேட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு பேட்டியில் பேசும்போது நடிகர் கவின் குறித்து பேசி இருக்கிறார். அதில், கவின் கல்யாணம் பண்ணும் போது என்னை சுற்றி ஒரு நெகட்டிவிட்டி கிரியேட் ஆச்சு. சோசியல் மீடியாவில் ஏதாவது போட்டோவா போடும்போதும் அதிகமான நெகட்டிவ் வந்தது. எனக்கு அது ரொம்ப சங்கடமா இருந்துச்சு.
இரவு 2 மணிக்கு போலீஸிடம் தனியா சண்டை போட்டேன்! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது- லாஸ்லியா
அதுபோல நான் ஒரு ஆல்பம் சாங் பண்ணும் போது சம்பந்தமே இல்லாமல் கவின் பற்றிய கேள்விகள் கேட்கும்போது எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அதைவிட நான் ஒரு விஷயத்தை யோசித்தேன், அதாவது அவங்க ஒரு பேமிலி குள்ள போய்ட்டாங்க அப்போ அந்த பொண்ணோட குடும்பத்தில் இருக்கிறவங்க நாம அவங்கள பற்றி பேசுவதை பார்க்கும்போது அது நல்லா இருக்காது.
நம்ம பேசுற இந்த டாபிக்கால் இன்னொருத்தரோட லைஃப்ல எந்த பிராப்ளமும் கிரியேட் பண்ண கூடாது என்பது என்னுடைய மைண்ட்ல எப்போதுமே இருந்தது என்று அதில் லாஸ்லியா விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications