நான் செய்த தப்பு வினையா போச்சு..! அப்பாவை பிணமா தான் பார்த்தேன்.. கண்கலங்கிய லாஸ்லியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய தந்தை குறித்தும் தான் செய்த தவறு குறித்தும் பேட்டி ஒன்றில் கண்கலங்க பேசி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சர்ச்சையையும் பிரித்து பார்க்கவே முடியாது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி விடுகிறார்கள். அது இயல்பாக உருவாகுகிறார்களா அல்லது கண்டன்டுக்காக இப்படி பழகுகிறார்களா? என்பது பலருடைய சந்தேகமாகத்தான் இருக்கிறது.

அதுபோல பிக்பாஸ் வீட்டிற்குள் காதலிப்பவர்கள் வெளியே வந்து காதலை தொடர்கிறார்களா என்பது சந்தேகம் தான். ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததுமே தங்களுடைய காதலுக்கும் நட்புக்கும் டாட்டா காட்டிவிட்டு அதை அப்படியே மறந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி போகிறார்கள். அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் பழகியது, காதலித்ததெல்லாம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் வெவ்வேறு திசையில் பயணத்தை தொடங்கினார்கள். கவின் இப்போது திருமணம் செய்து திரைப்படங்களில் கதாநாயகனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுபோல லாஸ்லியாவும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்த லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்தார். அதுவும் இளைஞர்கள் பலர் லாஸ்லியாவிற்காக பேன்ஸ் பேஜ் தொடங்கி ஆதரவு கொடுத்து வந்தனர். அந்த நேரத்தில் லாஸ்லியாவும் கவினும் காதலித்து வந்தனர்.
கெட்டிமேளம்: கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன அஞ்சலி.. கண்ணீரில் கவின், துளசிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அப்போது 10 வருடங்களுக்குப் பிறகு அவருடைய அப்பா மகளை பார்ப்பதற்காக கனடாவில் இருந்து வந்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் லாஸ்லியாவிடம் இங்கு காதலிக்க தான் வந்தியா? என்று கடுமையாக திட்டி இருந்தார். அதற்கு பிறகு லாஸ்லியா கவினிடம் பேசாமல் இருந்தார்.
இதனால் அந்த சீசனில் கவின் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு சில நாட்களிலேயே வெளியே வந்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் லாஸ்லியா தன்னுடைய தந்தை குறித்து பேசி இருந்தார். அதில் எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டானவர் கிடையாது. ஆனால் நான் பிக் பாஸில் கலந்து கொள்ள போகிறேன் என்ற போது அவருக்கு பிக்பாஸ் பற்றி எதுவும் தெரியாது.

அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தது கூட கிடையாது. நான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு போறேன் என்ற போது கூட அவர் தொகுப்பாளினியாக போக போறியா என்று தான் கேட்டார். அதற்கு பிறகு நான் எல்லா விஷயத்தையும் அவர் கிட்ட சொன்னேன். நிகழ்ச்சிக்கு போனதுக்கு பிறகு தான் நான் நூறு நாட்கள் வெளியே வர முடியாது என்ற விஷயம் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சிருக்கு.
கனடாவில் இருந்து அப்பா அப்போ ஊருக்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் பிக் பாஸ் ஷோவுக்கு கால் பண்ணி நான் மூணு நாள் தான் இருப்பேன் மறுபடியும் கனடாவுக்கு போயிடுவேன். அதுக்குள்ள என் மகளை பார்க்கணும் வெளிய அனுப்ப முடியுமா என்று கேட்டார். ஆனால் சேனல் அதற்கு ஒத்துக்கவே இல்ல. அப்போதான் அப்பா உள்ளே வந்து பார்த்தாரு.
நான் அப்பாவை கடைசியா பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து தான் பார்த்தேன். நான் வெளியே வரதுக்குள்ள அப்பா மீண்டும் கனடா போயிட்டார். அதற்குப் பிறகு அவரை நான் பிணமாகத்தான் பார்த்தேன். அப்பா இருக்கும்போது நான் அதிகமான சேட்டைகள் செய்திருக்கிறேன்.
அடிக்கடி அவரிடம் ஏதாவது வம்பு பண்ணுவேன் அவர் இல்லை என்ற பிறகு எனக்கு பெரிய ஏமாற்றமும் அதிர்ச்சியும் இருந்தது. இப்போ கூட நானும் லூசுத்தனமா ஏதாவது செய்வேன். அப்பாவுடைய பழைய நம்பருக்கு போன் செய்து கொண்டே இருப்பேன். அதை எடுக்க இப்பொழுது அப்பா இல்லை என்று தெரியும் ஆனாலும் போன் செய்கிறேன் என்று கண்கலங்கி அழுதபடி லாஸ்லியா பேசியிருக்கிறார்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications