வனிதா பற்றி வெளிப்படையாக பேசிய மதுமிதா.. கமலை பார்த்தால் அதை பற்றி கேட்காமல் விடமாட்டேன் என ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி நடிகையாக பிரபலமடைந்த மதுமிதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தால் என்ன கேட்பேன் என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னோடு போட்டியாளராக இருந்த வனிதாவை தான் இப்போது நேரில் பார்த்தால் இதைதான் சொல்வேன் என்றும் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி அங்கு கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் மதுமிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்து அதற்கு பிறகு சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி ஏற்று பல சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் களை கட்டியவர்.

Television Madhumitha Bigg Boss

அதிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர்களில் இவரும் ஒருவர். பொதுவாக வெளியே சிரித்து கலகலவென பேசுபவர்கள் விரைவில் எமோஷனல் ஆகி விடுவார்கள். அவர்களால் சின்ன ஏமாற்றத்தையோ தாங்கிக் கொள்ள முடியாது. இதைத்தான் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரூபித்திருந்தார். அவர் எப்போதும் கலகலவென பேசியபடி பக்கத்தில் இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு உளவியல் சார்ந்த நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் வெளியே இருப்பதற்கும் அந்த நிகழ்ச்சியில் இருப்பதற்கும் அதிகமான வித்தியாசத்தை காட்டிவிடுகிறார்கள். அது போல் தான் மதுமிதாவும் அந்த நிகழ்ச்சியின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரோடு சக போட்டியாளராக இருந்த வனிதா போன்ற போட்டியாவர்கள் தன்னை அவமானப்படுத்துகிறார்கள், தன் மனம் நோகும்படி பேசுகிறார்கள் என்று எமோஷனல் ஆகி மதுமிதா தன்னுடைய கைகளை வெட்டியது பெரிய அளவில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மதுமிதா அந்த சீசனின் அவரோடு இருந்த போட்டியாளர்கள் பலரோடு சரியாக பேசிக் கொள்வது இல்லை. ஆனால் சினிமாக்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான போட் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னோடு இருந்தவர்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் நான் இப்போதும் வனிதாவை பார்த்தால் அவராக ஏதாவது என்னிடம் கேட்டால் அவரிடம் பதில் சொல்வேன். நானாக எதுவும் பேச மாட்டேன். ஆனால் கமல்ஹாசனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் சதிலீலாவதி 2 படம் எடுத்தால் என்னை கூப்பிடுவீர்களா? என்று கேட்பேன். அந்த திரைப்படத்தில் எனக்கு என்ன கேரக்டர் கொடுத்தாலும் எனக்கு ஓகே ஆனால் நான் அந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கமலிடம் ஸ்ட்ரிட்டாக சொல்லிவிடுவேன்.

அதுபோல நம் வீட்டில் ஒருவரோடு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருந்தால் சில நாட்கள் கழித்து அவர்களை பார்க்கும்போது நாம் அதே பிரச்சனையை பற்றி பேசிக் கொண்டிருக்க மாட்டோம். என்ன எப்படி இருக்கீங்க என்று வேறு விதமாக பேசுவோம் அதுபோல்தான் நான் என்னை கஷ்டப் படுத்தியவர்கள் இப்போது நேரில் வந்தாலும் அவர்களிடம் பேசுவேன் என்று அந்த பேட்டியில் மதுமிதா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+