நளினி இல்லன்னா என் நிலைமை அவ்வளவுதான்! இந்த குணம் யாருக்கும் கிடையாது! நெகிழ்ந்த மதுமிதா
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மதுமிதா நடிகை நளினி பற்றி பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். தனக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நளினி சொன்ன அட்வைஸால் தன்னுடைய வாழ்க்கை மாறி இருக்கிறது என்றும் தன்னுடைய பிரசவ காலத்தில் நளினி தனக்கு சொன்ன அட்வைஸ் என பல விஷயங்களையும் அதில் மதுமிதா பகிர்ந்து இருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான சின்ன பாப்பா பெரிய பாப்பா, மடிப்பாக்கம் மாதவன் என்ற காமெடி சீரியல் மூலமாக பிரபலமடைந்த மதுமிதா வெள்ளித்திரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் மூலமாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அந்த திரைப்படத்தில் ஜாங்கிரி என்ற பெயரில் மதுமிதா நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஞ்சனா 2, ராஜா ராணி, விசுவாசம் உட்பட பல படங்களில் காமெடியான கேரக்டரில் நடித்திருந்தார். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார். தற்போது கூட யோகி பாபு நடிப்பில் வெளியான போட் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனியார் youtube சேனல் ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் நடிகை நளினி பற்றியும் பேசி இருக்கிறார். நடிகை நளினி ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து இப்போது சீரியல் மற்றும் திரைப்படங்களில் காமெடி கேரக்டரிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நளினி பற்றி மதுமிதா பேசுகையில், நளினி அம்மாவோட நான் சீரியலில் நடித்திருக்கிறேன் அப்போது இருந்தே எனக்கு அவரோடு நல்ல ஒரு உறவு ஏற்பட்டு விட்டது. டெலிவரி டைமில் எனக்கு பல அறிவுரைகளையும் சொன்னது அவங்கதான். நான் எப்பவெல்லாம் ஐயோ முடியலையே என்று சோர்ந்து போறேனோ அந்த நேரத்தில் அவங்களுக்கு போன் பண்ணினால் அவர்கள் எனக்கு அத்தனை விஷயங்களை சொல்லித் தருவாங்க.

டெலிவரி நேரத்தில் வேலை பார்க்கணும் நாளைக்கு டெலிவரி என்றால் கூட அதற்கு முந்தைய நாள் வரைக்கும் நம்ம வேலை பார்க்கணும், ஒரு பெண் தன்னை இரும்பு மாதிரி வச்சுக்கணும்னு சொல்லுவாங்க. அதுபோல வாய்ப்பு வந்தா அதை விட கூடாது. வீட்டுல இருந்தா நமக்கு யாரும் ஒரு ரூபாய் கூட தர மாட்டாங்க என்று எனக்கு பல அட்வைஸ் சொல்லுவாங்க.
பிரக்னன்சி டைமில் நான் கால் வலியா இருக்கு அம்மா என்று சொன்னா கால் வலி வரத்தான் செய்யும். கால் வீங்கும் சுடு தண்ணியில கால் வை சரியா போயிடும் என்று சொல்லுவாங்க. அப்புறம் நான் குழந்தை பிறந்தது நடிக்க வந்து விட்டேன் மூன்று மாத குழந்தையை கூட்டிட்டு போறோமா என்று சொன்னா, கூட்டிட்டு போ.. இப்போ நீ என்ன நினைக்கணும் தெரியுமா? பார்த்தியா நம்ம குழந்தை 3 மாசத்திலேயே பிளைட்ல பறக்கிறான் என்று ஒரு விஷயத்தில் இருக்கும் பாசிட்டிவிட்டி மட்டும்தான் நாம நினைக்கணும் என்று சொல்லுவாங்க.
நான் கலைமாமணி விருது வாங்கின போது கூட முதல்ல நளினி அம்மா கிட்ட தான் சொன்னேன். அப்போ இதுக்கு நான் தகுதியான ஆளா என்று கேட்டேன். அதற்கு அவங்க ஏய் என்ன நெனச்சிட்டு இருக்குற, உன் திறமை முழுசா பார்த்தது நான் ஒருத்தர் மட்டும்தான். எனக்கு மட்டும்தான் உன் திறமை தெரியும். இனி இன்னும் நிறைய பேருக்கு தெரியனும்னு சொல்லுவாங்க. நாங்க சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது அவங்களுக்கு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் கால் பண்ணி பேசும்போது அவங்க கிட்ட என்னை பத்தி பெருமையா சொல்லுவாங்க.

அவங்க என்ன சொல்றாங்களோ அதை என்னிடம் சொல்லி சந்தோஷப்பட்டு என்னை என்கரேஜ் படுத்திட்டே இருப்பாங்க. உண்மையை சொல்லனும்னா நளினி அம்மா என் வாழ்க்கையில் இல்லன்னா நான் எப்படி இருப்பேன் என்று எனக்கே தெரியாது. நான் இந்த வார்த்தையை அவங்களிடம் நேரடியாக சொன்னால் அதற்கு அவங்க ஒரு வார்த்தை சொல்லுவாங்க, பாப்பா நான் சொன்னதை கேட்டு நீ அப்படியே செஞ்ச அதனாலதான் நீ நல்லா இருக்க.
நான் எத்தனை பேருக்கும் அட்வைஸ் செய்து இருக்கேன். அவங்க எல்லாம் அதை கேட்டாங்களான்னு பார்த்தா இல்ல. ஆனா நீ கேட்டா நீ நல்லா இருக்க. இது உன்னுடைய முடிவு நீ எடுத்து செய்த செயலால்தான் நீ இன்று நல்லா இருக்கா. நான் சொன்னதால் இல்லை என்று அவங்க அந்த கிரெடிட்டை கூட எடுத்துக்க மாட்டாங்க. நான் டெலிவரி ஆக இருந்த நேரத்தில் எனக்கு அவங்க கொடுத்த அட்வைஸ் மற்றும் தைரியத்தால்தான் எனக்கு நார்மல் டெலிவரி ஆனது.
அந்த நேரத்தில் பலர் எனக்கு போன் பண்ணி நார்மல் டெலிவரியா? ஓ அப்படியா சூப்பர் என்று சொல்லுவாங்க. முந்தைய காலத்தில் எல்லாம் ஆப்ரேஷன் அய்யய்யோ அப்படியா என்று கேட்பார்கள். ஆனால் இப்போ நார்மல் டெலிவரி பெரிய விஷயமா இருக்கிறது என்று அந்த பேட்டியில் மதுமிதா நளினி பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications