என்னைவிட உங்களை "ஒருத்தர்" நேசிக்கிறார்! வீட்டுக்கு வந்ததும் ரவீந்திரனுக்கு ஷாக் கொடுத்த மகாலட்சுமி
சென்னை: மோசடி வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த தனது கணவர் ரவீந்திரன் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள தவறியதே இல்லை என நடிகை மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானார். இவர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அதில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறி தன்னை திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், செப்டம்பர் 7ம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ரவீந்தர் தரப்பில் புகாதாரருக்கு இரண்டு கோடி ரூபாய் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புகார்தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ரவீந்தர் இரண்டு கோடி தந்துவிட்டதாக கூறுவது தவறு எனவும், தற்போது வரை 16கோடி ரூபாயை தரவில்லை என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, இரண்டு கோடி ரூபாய் வழங்கியதாக கூறப்படும் ஆவணங்களை காவல்துறை சரிபார்த்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவீந்திரன் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் இவை அனைத்தும் இந்த வழக்கு தொடர்புடையதா? என தெரியவில்லை என கூறினார்.
இதனையடுத்து, பண பரிவர்த்தனை தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே அது குறித்து தெரியவரும் என குறிப்பிட்ட நீதிபதி இரண்டு வாரங்களில் ஐந்து கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த ரவீந்தர்க்கு உத்தரவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து முதலாம் திருமண நாளை கொண்டாடிய 6 நாட்கள் கழித்து கணவர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டதால் மிகவும் வேதனையில் இருந்தார் மகாலட்சுமி. இந்த நிலையில் நேற்று முன் தினம் சிறைத் துறை முறைகள் எல்லாம் நடந்து முடிந்து வீடு திரும்பினார். கணவரை பார்த்ததும் மகாலட்சுமிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
இதையடுத்து இருவரும் சேர்ந்தாற்போல் ஒரு புகைப்படத்தை போட்டுள்ள மேகி (மகாலட்சுமி) தனது இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது: என் முகத்தில் சிரிப்பை வரவழைக்க நீங்கள் என்றுமே தவறியதில்லை. ஒருவர் மேல் அன்பு வர காரணமே அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கைதான். ஆனால் இங்கு நம்பிக்கை என்னை விட உங்களை அதிகம் நேசிக்கிறது. எப்போதும் போல் என் மீது அன்பை பொழிங்க, எனக்கு பாதுகாப்பாக இருங்கள். லவ் யூ அம்மு என குறிப்பிட்டுள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications