நான் சொல்ல விரும்புவது இதுதான்! மகாலட்சுமி பற்றி ரவீந்தர் வெளியிட்ட திடீர் பதிவு.. குவியும் கருத்து
சென்னை: நடிகை மகாலட்சுமியின் கணவரான ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் அவர் தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய திருமணம் என்றால் அது சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தரின் திருமணம்தான். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றாலும் அந்த நேரத்தில் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்தது குறித்து அதிகமாக பேசப்பட்டது.

காரணம் உடல் அளவில் ரவீந்தர் உடல் எடை கூடி இருக்கும் நிலையில் அவரை மகாலட்சுமி எப்படி திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வந்தனர். மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை பணத்திற்காகத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்று கூட சொல்லி வந்தனர். ஆனால் அதுவெல்லாம் உண்மை கிடையாது எங்கள் இருவருக்கும் மனம் ஒத்து போய் இருந்தது நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்திருக்கிறோம். எங்களுடைய திருமண வாழ்க்கையை நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று இருவருமே அந்த நேரத்தில் பல பேட்டிகளும் கொடுத்திருந்தனர்.
அந்த நேரத்தில் பலர் ரவீந்தர் பற்றி புலம்பி வந்தனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போய்க் கொண்டிருந்தனர். வார இறுதி நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் எடுக்கும் புகைப்படங்களையும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் மீது மோசடி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்ட நிலையில் அதன் காரணமாக ரவீந்தர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார் பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாலட்சுமியோடு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.
அதில் "அன்பு என்பது கவனிப்பை பற்றியது மற்றும் ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பையும் அக்கறையும் நான் கண்டேன். இப்போது நான் உறுதி அளிக்கிறேன் மீதமுள்ள 364 நாட்களும் உங்களை கவனித்துக் கொள்வேன்... ஏய் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் இன்று சிரிக்கவில்லை, அதைவிட இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குடும்பத்திற்காக நேசித்து வாழுங்கள்.. ஓய்வு அனைத்தும் இடம்பெறும் என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அந்த பதிவிற்கு யாரும் சிறப்பாக செய்யவில்லை நான் உன்னை காதலிக்கிறேன் என்று மகாலட்சுமி பதில் கொடுத்து இருக்கிறார். இந்த பதிவிற்கு அதிகமானோர் ரவீந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications