மனிஷாவின் மர்மம்.. சீனு ராமசாமியின் விவாகரத்து.. டி.ராஜேந்தர், சிவாஜி போல யாருமில்லை: பிரபலம் வேதனை
சென்னை: விவாகரத்து செய்தவர்களின் வாழ்க்கையை உதாரணமாக எடுத்து கொள்ளாமல், எத்தனையோ இயக்குனர்கள் சினிமாவில் சுத்தமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். டி.ராஜேந்தர் போல பலர் இன்னமும் இருக்கிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "சீனு ராமசாமி சிறந்த இயக்குனர் என்பதில் சந்தேகம் இல்லை.. சில நாட்களுக்கு முன்பு, 2 யூடியூப் சேனலில், சில கருத்துகள் சீனு ராமசாமிக்கு எதிராக வெளியிடப்பட்டது. நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை தந்ததாக கூறினார்கள். உடனே இதற்கு சீனி ராமசாமி, "எல்லாம் தெரிந்த அறிவாளிகள்" என்றுதான் பதிலளித்தாரே தவிர, இந்த குற்றச்சாட்டை அவர் மறுக்கவில்லை.

நடிகை மனிஷா: ஆனால், தனக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை தந்ததாக, சம்பந்தப்பட்ட நடிகை மனிஷா யாதவ், வெளிப்படையாகவே உறுதி செய்தார். உடனே அந்த நடிகையை பதிலுக்கு சாடினார் சீனு ராமசாமி. கடந்த வருடம் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
தனிமனிதரின் அந்தரங்கத்தை வெளியிடுவதானால், சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார் வரும்வரை அதனை வெளியிடக்கூடாது. சில யூடியூபர்கள் அப்படியிருப்பதில்லை. எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும், மறைக்கப்பட்ட அல்லது மறைக்கப்படும் பகுதிகள் இருக்கலாம். இதற்கு விதிவிலக்குகளும் இருக்கலாம்.
தவறுகள்: சந்தர்ப்ப சூழ்நிலையில் சில தவறுகள் நடப்பதுண்டு.. ஒருசிலர் அதிலிருந்து மீண்டுவிடக்கூடும், சிலர் இதிலேயே மூழ்கி அழிந்து விடுவார்கள்.. இந்த இயக்குநர்கள் பலர் கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.. இயக்குனர் பாலச்சந்தருக்கும் மறுபக்கம் இருந்தது என்று சுசித்ரா சொன்னாங்க.. சீனு ராமசாமியும் இவருடைய சிஷ்யர்தான்.. பாரதிராஜாவுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.
பெண்ணுக்கும், மண்ணுக்குமான பலவீனங்களில் பலர் விழுந்துவிடுகிறார்கள். அல்லது அன்பு காதலில் விழுந்துவிடுவார்கள். மிகப்பெரிய போராளிகள், மிகப்பெரிய ஞானிகள், மாவீரர்கள், சக்ரவர்த்திகள், மன்னாதி மன்னன்கள் இவர்களும்கூட பெண்ணின் காலில் விழாமல் இருக்க முடியாது. ஆனால், யார் குடும்பத்தையும் கெடுக்காமல், யார் கண்ணீருக்கும் காரணமாகாமல் இருக்க வேண்டும்.
குற்றங்கள்: அடுத்தவர்களின் குற்றங்களை மட்டுமே இந்த சமூகம் குறியாக காண்கிறது, அதிலே வியாபாரமும் காண்கிறது. எத்தனையோ நடிகைகள், இதுபோன்ற பாலியல் தொல்லைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கு உடன்பட்டுவிட்டு, பலகாலம் கழித்து, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை வெளிப்படுத்துவார்கள்.. ஆனால், இந்த பெண் மனிஷா, சீனு ராமசாமி பாலியல் தொல்லை தந்தபோதே அதில் சிக்காமல் விலகிவிட்டார். அவருடன் சகித்து கொண்டு மனிஷா நடிக்கவில்லை. அந்த விஷயத்தை பாராட்டலாம்.
பாலுமகேந்திரா, மகேந்திரன் இவர்களும் சிறந்த இயக்குநர்கள்தான்.. பாக்யராஜ், கமல்ஹாசன் யாராக இருந்தாலும், சிவாஜியை போல இவர்களால் இருக்க முடியல.. தன்னுடைய குடும்பத்துக்காகவே முழுக்க முழுக்க வாழ்ந்தவர் சிவாஜி கணேசன்.. 5 மனைவியை திருமணம் செய்த எம்ஆர் ராதா, அவர்கள் 5 பேரையுமே கஷ்டப்படுத்தல. அவர்களை வாழ வைத்து பார்த்தார். ஒருத்தரையும் ரோட்டில் விட்டுவிடவில்லை.
வேலியே பயிரை: ஆனால், வேலியே பயிரை மேய்வதுபோல, நடிகைகள் பலர் வீழ்த்தப்பட்டுள்ளனர்.. மனைவியே ஆனாலும், அவரது உரிமையின்றி தொடமுடியாது என்பதுதான் உண்மை.. சீனுராமசாமி, நீதிமன்றத்தை நாடப்போவதாக சொல்லியிருக்கிறார்.. ஆனால், இனிமேல் விவாகரத்து செய்யப்போகும் தம்பதிக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான், விவாகரத்து செய்தவர்களின் வாழ்க்கையை உதாரணமாக எடுத்து கொள்ளாமல், எத்தனையோ இயக்குனர்கள் சினிமாவில் சுத்தமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். டி.ராஜேந்தர் போல.
எத்தனையோ சாதாரண நபர்கள், அன்பாலும், காதலாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் இவர்களைபோல வாழ வேண்டும்.. இவர்களையே உதாரணமாக கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் சேகுவேரா.












Click it and Unblock the Notifications