நடிகை மந்த்ரா கணவர், குழந்தையோடு திருப்பதி கோவிலில் தரிசனம்.. செல்பி கேட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
சென்னை: லவ் டுடே, ரெட்டை ஜடை வயசு போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை மந்த்ரா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
90களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மந்திரா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான். அதிலும் தமிழில் அருண் விஜய் நடித்த பிரியம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு 14 வயது தான். அதற்கு முன்பு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தேன். ஆனால் முதல் திரைப்படம் கதாநாயகியாக நடிப்பது என்றால் பிரியம் திரைப்படம் தான்.

அதற்குப் பிறகுதான் எனக்கு விஜய், அஜித்தோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று மந்த்ரா கூறி இருக்கிறார். அதிலும் நடிகர் விஜய் நடித்த லவ் டுடே திரைப்படத்தில் முதலில் என்னிடம் கதாநாயகியாக நடிக்க தான் சொன்னார்கள். அதனால்தான் நானும் அந்த படத்திற்கு ஓகே சொன்னேன். பிறகு நான் விஜய்க்கு தோழி என்று கதையை மாற்றி விட்டார்கள். அதுபோல அஜித்தோடு ரெட்டை ஜடை வயசு திரைப்படத்திலும் நடித்திருந்தேன்.

நிஜத்தில் நான் கிளாமர் உடை போட மாட்டேன் ஆனால் அந்த காலகட்டத்தில் எனக்கு திரைப்படங்களில் கொடுத்த காஸ்டியூம் எல்லாமே கிளாமராக தான் இருந்தது. நான் தமிழில் மட்டும்தான் இப்படி நடித்திருக்கிறேனே தவிர மற்ற மொழிகளில் புடவை தான் அதிகமாக அணிவேன். மற்ற மொழிகளில் நான் மாடல் உடை அணிந்தால் அங்குள்ள ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மந்த்ரா பேட்டிகளில் பேசியிருந்தார்.

பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவர் பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழில் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் தான் தெலுங்கில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் இருந்து நான் விலக வேண்டும் என்று விலகவில்லை. இப்போதும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று திருப்பதியில் தன்னுடைய குடும்பத்தோடு மந்திரா சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

கோவிலில் சாமி கும்பிட்டதும் வெளியே வரும்போது அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி கேட்டிருக்கின்றனர். அப்போது எந்த பிகுவும் பண்ணாமல் அவர்களிடம் சிரித்தபடியே செல்பிகளுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். அதோடு தன்னுடைய குடும்பத்தினரோடும் சேர்ந்து ரசிகர்களோடு புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications