Mohini: என்னாது உனக்கும் எனக்கும் கல்யாணமா? சான்ஸே இல்ல! பிரசாந்துடன் சண்டையிட்ட நடிகை மோகினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கும் பிரசாந்துக்கும் கல்யாணம் என வதந்தி பரவிய போது நாங்கள் இருவரும் சிறிய குழந்தைகள் போல் சண்டையிட்டு கொண்டோம் என நடிகை மோகினி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் "அதோ மேக ஊர்வலம்" பாடலில் அணிந்திருக்கும் உடை தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நடிகை மோகினி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நானும் பிரசாந்தும் கல்யாணம் பண்ணிக்க போறோம் என்பதுதான் என்னை பற்றி வந்த முதல் வதந்தியே! அதை கேட்டு நானும் பிரசாந்தும் "கல்யாணமா?, உன்னையா?, சான்ஸே இல்ல"னு சொல்லிகிட்டோம்.

television mohini prasanth

நாங்க அப்போ ரொம்ப சின்ன பசங்க. நான் 10ஆவது முடிச்சிட்டு சினிமாவுக்குள் வந்தேன். பிரசாந்த் 12 ஆவது முடிச்சிட்டு நடிக்க வந்தார். நாங்கள் ரெண்டு பேரும் குழந்தைகள் மாதிரிதான் விளையாடிட்டு இருப்போம் என நடிகை மோகினி தெரிவித்தார்.

பிரசாந்துடன் கண்மணி படம்

இவர் மேலும் அளித்த பேட்டியில் கண்மணி படத்தில் குறிப்பிட்ட காட்சிகளில் எப்படி நடித்தார் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில் பிரசாந்துடன் கண்மணி என்ற படத்தில் நடித்த போது நீச்சல் உடை அணிந்து நடிக்க சொன்னார்கள். எனக்கு அது போன்ற உடை அணிந்து பழக்கமில்லை.

மறுத்தேன்

நான் மறுத்தேன். இதனால் அரை நாள் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பிறகு தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்த சீனில் நான் நடித்தேன். அத்துடன் முடியவில்லை. ஊட்டியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என கேட்டார்கள். என்ன செய்வது விருப்பம் இல்லாமல் நடித்தேன்.

வாரணம் ஆயிரத்தில் வாய்ப்பு

கவுதம் மேனன் இயக்கிய 'வாரணம் ஆயிரம்' படத்தில் சிம்ரன் நடித்த பாத்திரத்தில் நடிக்க முதலில் என்னை கேட்டார்கள். ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். காரணம் திருமணத்திற்கு பிறகு நான் சினிமாவில் நடிப்பதில்லை என்ற உறுதியுடன் இருந்தேன். இதை இயக்குநரும் புரிந்து கொண்டார். பிறகுதான் சிம்ரனுக்கு அந்த வாய்ப்பு போனது. எனது தம்பி மனைவி சூர்யாவின் தீவிர ரசிகை, நான் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் நடிக்காமல் போனதற்கு என் மீது கோபப்பட்டாள் என்றார்.

ரஜினியுடன் நடிக்காதது வருத்தம்

ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் போனது அவருக்கு குறையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 'கோயமுத்தூர் மாப்பிள்ளை' படத்தில் ஷார்ட்ஸ் அணிய கேட்டார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதால் அந்த வாய்ப்பு சங்கவிக்கு போனது என மோகினி தெரிவித்துள்ளார்.

சாமியார்

சத்யராஜுடன் 'உடன்பிறப்பு' படத்தில் நடித்தபோது, அவர் தன்னை கிண்டல் செய்ததையும் மோகினி நினைவு கூர்ந்தார். "சாமியார் வந்துருச்சா சாமியார் வந்துருச்சான்னு கேட்டுட்டே இருப்பாரு," என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.

நடிக்கும் வாய்ப்பு

கடைசியாக, தான் நடிக்கவில்லை என்று சிலர் நினைத்தாலும், உண்மையில் தனக்கு நடிப்பு மீது ஆர்வம் இருப்பதாகவும், சரியான வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் மோகினி தெரிவித்தார். கூடிய சீக்கிரமே மறுபடியும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க காத்திருப்பதாக மோகினி கூறிய நிலையில், ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

ஈரமான ரோஜாவே

தமிழ் சினிமாவில் மிகக் குறைந்த வயதில் ஹீரோயின் ஆனவர் நடிகை மோகினி. கே.ஆர் என்ற இயக்குநரால் 'ஈரமான ரோஜாவே' என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

என்ன படங்கள்

இவர் 'இரும்புப் பூக்கள்', 'நாடோடி பாட்டுக்காரன்', 'நான் பேசுவதே எழுதுவதே', 'நான் பேச நினைப்பதெல்லாம்' போன்ற பல படங்களில் நடித்தவர். ஈரமான ரோஜாவே படத்தில் இடம் பெற்ற "அதோ மேக ஊர்வலம்" பாடலுக்காக மோகினி அணிந்திருந்த நகைகளின் மதிப்புஅந்த காலத்தில் 40 ஆயிரம் ரூபாயாம். இன்று ஒப்பிட்டால் அது பல லட்சங்களை தாண்டும் என்கிறார்கள். மேலும் சூர்யவம்சம் படத்தில் பிரியாராமன் கேரக்டரில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் மோகினியோ, தனக்கு தேவயானி ரோல் கொடுக்காததால் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+