திரும்ப திரும்ப பார்த்து பார்த்து.. மர்மமாய் மறைந்த நடிகை மோனல்.. குறுக்கே குணாலின் காதல்: பிரபலம்
சென்னை: ஆரம்பத்தில் நடிகை மோனல், நடிகர் குணாலை காதலித்து காதல் தோல்வியால் இறந்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. மோனல் ஒரு நடன இயக்குனரை காதலித்து வந்ததாகவும், அந்த காதலை நடன இயக்குனர் வீட்டார் ஏற்றுக் கொள்ளாததால், மனமுடைந்த மோனல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரபரத்தன.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை சிம்ரனின் தங்கை மோனல்.. முதல் படத்தில் குணாலுக்கு ஜோடியாக "பார்வை ஒன்றே போதுமே" படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவின.. பிறகு விஜய்யுடன் பத்ரி படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படமும் ஹிட்டானதால், அவருக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தன.

சமுத்திரம், விவரமான ஆளு, சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் மோனல் நடித்திருந்தார். சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் மோனல் நடித்திருக்கிறார்
தற்கொலை செய்த மோனல்
2002-ல் மோனல் தற்கொலை செய்து கொண்டார்.. கடைசியாக மோனல் நடித்த படம் ஆதிக்கம்.. இது அவரது இறப்புக்கு பிறகுதான் ரிலீஸ் செய்யப்பட்டது. 2002, ஏப்ரல் 14ம் தேதி மோனல் சென்னையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மோனலின் மறைவுக்கு பிரபல நடன இயக்குனர்தான் காரணம் என்று சிம்ரன் குற்றம் சாட்டியிருந்தது திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை தந்துவிடடது.
மோனலின் ஒவ்வொரு நினைவு நாளன்றும், சிம்ரன் உருக்கமாக பதிவிடுவார்.. அவருடன் குழந்தை இருந்தபோது எடுத்த போட்டோ, பிறகு, அவருடன் வளர்ந்த பிறகு எடுத்த போட்டோ என ஒவ்வொன்றையும் ஷேர் செய்து, அவரை நினைவு கூர்வார்.
சிம்ரனின் கண்ணீர் பதிவு
குறிப்பாக, "மோனல் எனக்கு மிக நெருக்கமாக இருந்தாள். அவள் என்னைவிட ஸ்டைலான பெண். அவளிடம் இருந்து தான் நான் ஸ்டைலாக எப்படி இருக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன். அவளை நிறைய காப்பி பண்ணி இருக்கிறேன். அவளை நான் இதுவரை மறக்க முடியாமல்தான் தவிக்கிறேன்.
அப்படி எளிதில் யாராலும் மறக்க முடியாது. அந்த வடு மனதில் எப்போதும் இருக்கும். தினமும் அவளை நினைத்துப் பார்ப்பேன். அவளை மறக்க முடியாமல் தவித்து இருக்கிறேன். அவள் எடுத்தது எவ்வளவு தவறான முடிவு. பெற்றோராக ஒரு மகளை வளர்க்க எவ்வளவு கஷ்டங்களைப்பட்டு இருப்பார்கள். சகோதர, சகோதரிகள் எப்படித் தவித்து இருப்பார்கள்" என்று மோனல் குறித்து அடிக்கடி சிம்ரன் கண்கலங்கி சொல்வார்.
சித்தி டார்ச்சர்
இந்நிலையில், Realone யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப் மோனல் குறித்து பேசும்போது, "சிம்ரன் தங்கை மோனல் என்பவருடன், லேசான காதல் குணாலுக்கு இருந்தது.. மோனலும் மும்பையை சேர்ந்தவர்தான்..
சித்தி வீட்டில்தான் மோனல் தங்கியிருந்தார்.. ஆனால் பட வாய்ப்புகள் சரியாக வராததால், மோனலை அந்த சித்தி டார்ச்சர் செய்து கொண்டேயிருந்தார்.. "படவாய்ப்புகளை எப்படியாவது வாங்கு, ஏன் குணாலுடன் சுத்திட்டே இருக்கே?" என்று உசுப்பிட்டு கொண்டேயிருந்தார். ஒருகட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார் மோனல்.
டான்ஸ் மாஸ்டர் ஒருவரை மோனல் காதலித்ததாகவும், பிறகு அவர்களுக்குள் பிரேக்கப் ஆகிவிட்டதென்றும் சிம்ரன், மோனல் இறந்தபிறகுதான் கூறினார்.. அதுவும் டான்ஸ் மாஸ்டர் பெயரை சொல்லியே சொன்னார்.. இது திரைப்பட உலகில் பெரிதும் பரபரப்பை தந்தது.. அதுகுறித்த விசாரணையும் நடந்தது. ஆனால், போதிய சாட்சியம் இல்லாததால், டான்ஸ் மாஸ்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறியிருக்கிறார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications