நான் கர்ப்பமாக இருக்கிறேன்.. ஆனால்..? அடக்கடவுளே இப்படியா? தமிழும் சரஸ்வதியும் நடிகை திடீர் பதிவு
சென்னை: தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்கிற போஸ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார்.
ஆனால் சீரியலில் தான் கர்ப்பமாக இருக்கிறேன் நிஜத்தில் அல்ல என்று அவர் விளக்கம் கொடுத்து இருக்கையில் இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கருத்து கூறி வருகின்றனர்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்ரா நாகேஷ் இன்று திடீரென்று வெளியிட்ட இவருடைய பதிவு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நக்ஷத்ரா நாகேஷ் முதல்முறையாக 2014இல் வானவில் என்னும் நிகழ்ச்சியை தந்தி டிவியில் தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார் .அதன் பிறகு சன் டிவியில் காலடி எடுத்து வைத்தவர் .சன் சிங்கர் என்னும் நிகழ்ச்சி மூலமாக பாடகர்களையும் பாட்டு ரசிகர்களையும் பரவசப்படுத்தி தன்னுடைய சிரிப்பான பேச்சால் தனக்கே உரிய தனி தமிழ் உச்சரிப்பு திறனுடன் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருந்தார்.
சன் டிவியில் தொகுப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவராக இவர் வலம் வந்து கொண்டிருந்தார். தொகுப்பாளர்களில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தவர் என்று சொன்னதும் டக்கென்று ஞாபகத்திற்கு வருபவர் இவர் தான் .அந்த அளவிற்கு தமிழ் உச்சரிப்பாலும் அழகாலும் அனைவரின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருந்தவர்.
அதன்பிறகுதான் வாணி ராணி என்னும் சீரியலில் ருத்ரா கேரக்டரில் முதல் முதலில் சீரியல்களில் நடிக்க காலடி எடுத்து வைத்தார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்த குஷ்பூ இவருக்கு பேச மட்டுமல்ல நடிக்கவும் நன்றாகவே தெரிகிறது என்று தான் தனது லட்சுமி ஸ்டோர் என்னும் சீரியலில் இவருக்கு பாக்கியலட்சுமி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார் .அதிலும் தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் பாக்கியலட்சுமி ஆக இடத்தை பிடித்து விட்டார்.
லட்சுமி ஸ்டோர் சீரியல் மூலமாக காதல் பண்ணும் இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கும் இந்த சீரியலில் நடிகருக்கும் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி காரணமாக பலர் தங்களுடைய ஸ்டேட்டஸ் சாங்களிலும் இவர்களுடைய போட்டோஸ்கள் தான் இடம்பெற்றன. இந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்த இவர் இந்த சீரியல் சீக்கிரத்தில் முடிக்கப்பட்டதும் இவரை காணாது இவருடைய ரசிகர்கள் தவித்து வந்தனர். அதன் பிறகும் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் இவர் சீரியலில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான் மீண்டும் நாயகி சீரியலில் இவருக்கு வாய்ப்பு வந்தது. கொரோனா லாக் டவுன் காலத்திற்கு முன்பாக நாயகி சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இந்த லாக்டோன் காரணமாக இதில் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த நடிகைகள் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதால் புதிய அத்தியாயத்துடன் இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டது.
அதில் இவர் இந்த சீரியலின் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியலில் நடித்த தெய்வமகள் பிரகாஷ்க்கும் மீண்டும் ஒரு திருப்புமுனையாக இந்த சீரியல் வலம் வந்தது. ஆனாலும் இதுவும் சீக்கிரத்தில் முடிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நக்ஷத்ராவிற்கு ராகவ் என்பவரோடு திருமணம் முடிவடைந்தது. திருமணத்திற்கு பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நக்ஷத்ராவிற்கு சரஸ்வதி கேரக்டரில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் இவர் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கிறார்.
இதுவரைக்கும் இவருடைய வயிறு அதிகமாக தெரியாத வகையில் தான் காட்சிகள் போய்க்கொண்டிருந்தது. இன்றைய எபிசோட்டில் சரஸ்வதியின் வயிறு பெரிய அளவில் தெரிவது போன்று காட்சிகள் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் நக்ஷத்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தன்னுடைய வயிற்றை தொட்டு காட்டி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
அதோடு கூடுதலாக இது சீரியலில் மட்டும் தான் நிஜத்தில் அல்ல என்ற தகவலையும் சேர்த்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். மேலே உள்ள தகவலை படித்ததும், கீழே கொடுத்த விளக்கத்தை படிக்காமலேயே ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை குவிக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் கடைசியில் நிஜத்தில் தான் கர்ப்பமாக இல்லை என்று இவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருப்பதாகவும் சீக்கிரமாக குட் நியூஸ் சொல்ல வேண்டும் என்றும் பலர் கமெண்ட்களை குவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications