ராமராஜன் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி! பளீர் என்று பதில் சொன்ன நளினி.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: நடிகர் ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். இந்த நிலையில் 23 வருடங்களுக்கு பிறகு நடிகர் ராமராஜன் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை நளினி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது அவரிடம் ராமராஜன் குறித்து கேள்வி கேட்டபோது அதற்கு நளினி எதிர்பார்க்காத பதிலை கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.

அந்த வகையில் சின்னதிரையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி ஒன்றாக நடித்த பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் திருமண வாழ்க்கையில் அதிக நாள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விவாகரத்து ஆகி பிரிந்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் பிரிந்த பிறகும் ஒருவரைப் பற்றி ஒருவர் எந்த குறையும் சொல்வது கிடையாது.
அதே நேரத்தில் சிலர் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பிரிந்த பிறகு அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்துவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் நடிகர் ராமராஜன் மற்றும் நளினி இருவருமே பிரிவடைந்த பிறகும் ஒருவரை மாற்றி ஒருவர் எந்த இடத்திலும் குறை கூறியது இல்லை. ஏற்கனவே நளினி பல இன்டர்வியூக்களில் நான் ராமராஜனை இப்போதும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நாங்கள் காதலிக்கும் போது அவர் எனக்கு கொடுத்த லவ் லெட்டர் எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். ராமராஜனை வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு நாங்கள் சேர்ந்து வாழ்ந்தால் அவருடைய வாழ்க்கைக்கு சரியில்லை என்று சொன்ன பிறகுதான் நானும் மனப்பூர்வமாக சம்மதித்து அவரிடம் இருந்து விலகி வந்தேன்.
எப்போதுமே அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அவர் இடத்தில் இன்னொருவரை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதனால் தான் நான் வேறு திருமணம் செய்யவில்லை என்று நளினி கூறி இருக்கிறார். அதுபோல சமீபத்தில் கூட ராமராஜன் ஒரு இன்டர்வியூவில் பேசிக் கொண்டிருக்கும்போது என்னுடைய மனைவிதான் என்னை பிரிந்து சென்ற பிறகு குழந்தைகளை பார்த்துக்கொண்டது.
நான் சூட்டிங் போய் விடுவேன் இரவு வெகு நேரம் கழித்து வந்தாலும் என்னுடைய மனைவி குழந்தைகளின் படிப்பு என எல்லா விஷயங்களையும் அவரே பார்த்துக்கொள்வார். என்னிடம் என்னிடம் எந்த பிரஷரும் கொடுத்ததே கிடையாது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் ராமராஜன் 23 வருடங்களுக்குப் பிறகு சாமானியன் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அதே நேரத்தில் நடிகை நளினி நேற்று ஒரு ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு டக்கு டக்கென்று பதில் கொடுத்துக் கொண்டிருந்த நளினி நீங்கள் இன்னும் அதிகமான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஆரம்பத்தில் இருந்த மாதிரி இப்போது பெண்கள் இல்லை.
பெண்கள் இப்போது எல்லா துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த எவ்வளவு முன்னேறினாலும் முன்னிடத்தில் நீங்கள்தான் கிங்காக இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு பின்னாடி நிற்கும் பிரின்சஸ் ஆக இருக்கிறோம். அதனால் முன்னே நிற்கிறவர்கள் இன்னும் அதிகமான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர் ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க அதற்கு நளினி டக்கென்று சிரித்தபடியே அவரைப் பற்றி பேசுவதற்கு இது தகுந்த இடம் இல்லை. நான் இப்போது ஹோட்டல் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன்.
இங்கு அதற்கு தகுந்த கேள்விகளை கேளுங்கள். அவரைப் பற்றி நீங்கள் வேறு இன்டர்வியூவில் கேளுங்கள் நான் அங்கு நிறைய விஷயங்களை சொல்கிறேன். எந்த இடத்திற்கு வந்திருக்கிறோமோ அது தகுந்த மாதிரிதான் நாம் இருக்க வேண்டும் என்று சிரித்தப்படியே பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு பலரும் நளினியை பாராட்டி வருகிறார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications