ஜெயலலிதா கேட்டும் செய்ய மறுத்த நளினி.. தன்னம்பிக்கை அதிகம் தான்.. நெகிழ வைக்கும் காரணம்
சென்னை: முன்னணி நடிகையாக இருந்த நளினி தற்போது சின்னத்திரையில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவரிடம் முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதா சில வருடங்களுக்கு முன்பு ஒரு செயலை செய்ய சொன்னாராம். ஆனால் அதற்கு நளினி அவரிடமே முடியாது என்று கூறி விட்டாராம்.
நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்திருந்த நளினி சில காரணங்களால் சில வருடங்களில் விவாகரத்து செய்திருந்தார். அந்த நேரத்தில் தான் பல கஷ்டங்களையும் நளினி பட்டிருக்கிறார்.

என்னதான் தான் கஷ்டத்தில் இருந்தாலும் தன்னை நேசித்த ஜெயலலிதா சொன்ன வார்த்தையை தன்னால் செய்ய முடியாது என்று சொன்னதற்கு காரணம் என்ன என்பது பற்றி நளினி பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
80ஸ் 90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்களில் ஒருவர்தான் நடிகை நளினி. அப்போது முன்னணி ஹீரோவாக இருந்த பல நடிகர்களோடு ஜோடியாக நளினி நடித்திருந்தார். அந்த நேரத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நிலையில்தான் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய காதலும் அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
காரணம் நடிகை நளினி தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். வசதி வாய்ப்புகளிலும், புகழிலும் குறையே இல்லாமல் உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆரம்ப கால நடிப்பிலிருந்த நடிகை ராமராஜனை இவர் திருமணம் செய்து கொண்டது பலராலும் வியப்பாக பேசப்பட்டு வந்தது. அதே நேரத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு நடிகை நளினியின் வீட்டில் பெரிய அளவில் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
ராமராஜனை நளினி காதலிக்கிறார் என்ற தகவல் தெரிந்ததுமே நளினியின் சகோதரர்கள் நடிகர் ராமராஜரை மிரட்டி அடித்தும் விரட்டி இருக்கிறார்கள். ஆனாலும் ராமராஜரின் மீது வைத்திருந்த காதல் காரணமாகவே வீட்டை விட்டு எதிர்ப்பையும் மீறி நளினி, ராமராஜனை திருமணம் செய்திருந்தார். அதற்குப் பிறகு பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறார்கள். இந்த தம்பதியினர். இவர்களின் அன்புக்கு அடையாளமாக ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்திருக்கின்றனர்.
ஆனால் திருமணம் ஆகி ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து விட்டனர். ஆனாலும் நாங்கள் இருவரும் இப்போதும் காதலித்துக் கொண்டிருக்கிறேம் என்றும் ஜோதிடத்தில் எங்கள் இருவருக்கும் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லியதால் தான் பிரிந்தோம் என்று நடிகை நளினி பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதுபோல நடிகை நளினி தன்னுடைய மகன் மற்றும் மகள்களை நல்லபடியாக படிக்க வைத்து திருமணம் செய்து வைத்திருந்தார். ராமராஜன் அதிமுகவில் இணைந்து எம்எல்ஏ மற்றும் எம்பியாகவோ மாறி இருந்தார். அதுபோல எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிடமும் ராமராஜன் அன்பாக இருந்திருக்கிறார். அதனாலயே ஜெயலலிதாவுக்கு எப்போதும் ராமராஜன் மீது ஒரு அன்பு உண்டாம். இந்த நிலையில் தான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது பற்றி நடிகை நளினி தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் நாங்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் எல்லாம் எங்களுக்கு உதவியது ஜெயலலிதா அம்மா தான். அவர்தான் செலவு செய்து என் கணவரை ஜெயிக்கவும் வைத்தார். நான் என் கணவரை பிரிந்த போது என் குழந்தைகள் இருவரையும் அவர் செலவில் படிக்க வைக்கிறேன் என்று சொன்னார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன். என் குழந்தைகளுக்கு கஷ்டம் என்னவென்று தெரிய வேண்டும் என்று தான் நான் அதை மறுத்தேன்.
அதற்குப் பிறகு என்னுடைய மகன் திருமணம் நடந்தபோது சம்பந்தி வீட்டினரை வரவழைத்து அவருக்கு ஜெயலலிதா விருந்து வைத்தார். அப்போது தனியாக நின்று யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தைகளை கரை சேர்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறாள் நளினி. அவள் தான் கிரேட், என்று அவர்களிடம் ஜெயலலிதா பெருமையாக பேசி இருந்தார் என்று நளினி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்..
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications