நடிகை நளினியை அதிகாலையில் யாரோ காலை பிடித்து இழுத்து.. மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி.. ஒரே மகிழ்ச்சி
சென்னை: பிரபல நடிகை நளினி, குட்டி பத்மினியின் கிருஷ்ணதாசி சீரியலில் நடித்திருந்த அனுபவத்தை, நேயர்களுக்காக பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது என்றும், அதிலிருந்து தன்னை மீட்டு கொண்டுவந்தவர்கள் யார் என்பது குறித்தும் விலாவாரியாக கூறியிருக்கிறார்.
மூத்த நடிகை குட்டி பத்மினியின் KPTV யூடியூப் சேனலுக்கு நளினி தந்துள்ள பேட்டியில், "என் மகள் நிறைய படிச்சிருக்காங்க.. ஆனால், அதையெல்லாம் வெளியே சொல்லாதீங்கம்மா.. கண்ணு படும், வெறும் எம்.ஏ., பி.எல்., எம்.சி.ஏ. மட்டும் சொல்லுங்கன்னு சொல்லியிருக்காள்.. என் பையன் சி.ஏ. எல்லா நாடுகளிலும் எழுதியிருக்கான்.. இன்னமும் 2 பிள்ளைகளும் படிச்சிட்டே இருக்காங்க..

அறிவுஜீவிகள்: என் பேர பசங்க அதுக்கு மேல இருக்காங்க.. சின்ன பேரனுக்கு 6 வயதுதான் ஆகிறது.. ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டியில் திமிங்கிலம் பற்றி கவிதை எழுதி, உலக சாதனை படைத்திருக்கிறான். ரொம்ப அறிவுஜீவியாக இருக்காங்க.. என் மருமகளும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் படிச்சவங்க.. எப்போதுமே ஒரு கதவை மூடினால், ஜன்னலாவது திறக்கும் என்பார்கள். ஆனால் எனக்கு 2 கதவுகளுமே பெரிதாக இறைவன் திறந்து வைத்துள்ளான்.. மிகப்பெரிய ஆசீர்வாதமாக இதை பார்க்கிறேன்..
எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலைமையில்தான், கிருஷ்ணதாசி சீரியல் நேரத்தில் நான் இருந்தேன். அப்போது என்னை நீங்கள்தான் (குட்டி பத்மினி) குழந்தை போல பார்த்துக்கிட்டீங்க.. என் மனநிலை சிதறாமல், என்னை கட்டுப்படுத்தியது நீங்கள்தான்.. இன்னொரு வாழ்க்கை இருக்கு, அதையெல்லாம் நீ பார்க்கணும், அதை நீ ரசிக்கணும் என்று சொல்லி, என்னை வழிநடத்தி, எனக்கு பாடம் நடத்தியது நீங்கள்தான்..
அரிசியில் பெயர்: கிருஷ்ணதாசி சீரியலில் என்னை நடிக்க வைக்க நீங்கள் பட்ட பாடுகளை வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது.. இன்னைக்கு நான் சாப்பிடுற ஒவ்வொரு அரிசியிலும் உங்க பேர்தான்..
அதேபோல சீரியல் தயாரிப்பாளர் பிரபு சார், ரஞ்சிதாவையும் இங்கே சொல்லியாகணும். எனக்கு உந்துதல் தந்துட்டே இருந்தாங்க.. முதல்நாள் நடிக்க முடியாமல் போய்ட்டேன்.. 2வதுநாள் டயலாக் பிராம்ட்டிங் கேட்டுட்டு, புதுசா இருக்குதுன்னு சொல்லிட்டு போயிட்டேன்.. 3வதுநாள், நீங்க வந்து எனக்கு அரணாக வந்து நின்றீங்க..
ஜெமினி கணேசன்: என்னை வழிநடத்தியது கிருஷ்ணதாசிதான்.. சுப்புடு சார் , வியட்நாம் வீடு சுந்தரம் இவர்கள் எல்லாம் மிகவும் பாராட்டினார்கள்.. ஜெமினி கணேசன் சாருடன் நடித்ததில் ரொம்ப பெருமை.. பழைய விஷயங்கள் நிறைய சொல்வார்.. அவரது 80வது பிறந்தநாளுக்கு, அவரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கியதை எல்லாம் மறக்கவே முடியாது.
எப்போதுமே நான் 3.16-க்கு விடிகாலையில் எழுந்துவிடுவது பழக்கம்.. அப்போது யாரோ என்னை தட்டி எழுப்புவது போல இருக்கும்.. காலை பிடித்து இழுப்பது போல இருக்கும்.. இந்த பிரபஞ்சம் ஏதோ என்னிடம் சொல்வதுபோல அந்த நொடியில் தோன்றும்.. உடனே நான் கை, கால் முகம் கழுவிக்கொண்டு, விளக்கேற்றி உட்கார்ந்துவிடுவேன். அது என்னுடைய நேரமாக இருக்கும்.
யூனிவர்ஸ்: சில விஷயங்களை நான் சொன்னால், யாரும் நம்ப மாட்டாங்க.. ஆனால், எனக்கு வாழ்வில் நடக்கும் அனுபவமெல்லாம் வேற மாதிரியானவை.. எனக்கான வேண்டாதவர்களைகூட, காலமே பிரித்து விலக்கி வைத்துவிடும்.. நம்புகிறவர்களுக்கு தெய்வம்.. நம்பாதவர்களுக்கு நான் எதுவும் சொல்லவில்லை.. அந்தவகையில் என்னை வழிநடத்துவது இந்த யூனிவர்ஸ்தான்" என்று பூரித்து சொல்கிறார் நளினி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications