எங்க பாட்டி ஆவி எனக்குள் வந்தது! அப்போ நடந்தது இதுதான்! அப்படி பேசினேன், நளினியின் திகில் அனுபவம்
சென்னை: நடிகை நளினி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஆன்மீக அனுபவங்கள் குறிப்பு பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய மறைந்த பாட்டி தன் உடலுக்குள் வந்து விட்டதாகவும், அப்போது தான் மலையாளத்தில் பேசினேன் ஆனால் எனக்கு மலையாளம் தெரியாது அந்த நேரத்தில் பாட்டி பேசுவது போன்று நான் பேசினேன் என்று எல்லோரும் சொன்னார்கள் என திகில் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
80ஸ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நளினி அந்த காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதாநாயகர்களின் சகோதரியாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். புகழின் உச்சத்தில் இருக்கும்போது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்
நளினியின் திருமணத்திற்கு அவருடைய குடும்பத்தினர் சம்மதிக்காத போது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நளினிக்கு இருண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் தான் திருமணமான சில வருடங்களில் ராமராஜன் மற்றும் நளினி இருவரும் பிரிந்து விட்டனர்.
விவாகரத்து
இவர்களுடைய விவாகரத்து செய்தி அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் தங்கள் பிரிவுக்கு காரணம் ஜாதகம் தான் என்று பல இடங்களில் நளினி பேசி இருக்கிறார். ஜாதகப்படி நாங்கள் இருவரும் பிரிந்து இருக்க வேண்டும் என்று இருந்ததால் நாங்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டோம் ஆனால் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல், மரியாதை குறைந்தது கிடையாது என்று ஒரு நளினி பேசியிருக்கிறார்.
நளினியின் பெருந்தன்மை
விவாகரத்திற்கு பிறகும் ராமராஜன் ஆரம்பத்தில் தந்த காதல் கடிதங்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும் அவரை எந்த இடத்திலும் என்னால் குறை சொல்ல முடியாது என்றும் நளினி பேசி இருக்கிறார். இப்போது குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கேரக்டர்களிலும் சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நளினி அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இருக்கிறார்.

ஆன்மீக ஈடுபாடு
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது நான் கடவுளையும், ஆன்மீகத்தையும் நம்புவேன். எங்க வீட்டில் என்னுடைய அம்மா நாகர்கோவில் நாகராஜா கோவில் பற்றியும், மண்டைக்காட்டு பகவதி அம்மன் பற்றியும் அதிகமாக பேசுவார்கள். அதுபோல என்னுடைய அம்மாவும் பாட்டியும் சேர்ந்து என் பாட்டியின் அக்கா பற்றி பேசுவார்கள்.
பாட்டிக்கு சுமை தாங்கி
பாட்டி எப்படி வாழ்ந்தாங்க என்று அவங்களை பற்றி நிறைய சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஒரு முறை அந்த பாட்டி என்னுள் வந்து விட்டாங்க. எனக்கு மலையாளம் தெரியாது ஆனால் நான் அந்த பாட்டி பேசுவது போன்று மலையாளத்தில் பேசியிருக்கிறேன். நாகர்கோவிலில் ஒரு இடத்தை காட்டி இங்கு தான் பாட்டி இறந்ததாகவும், நீண்ட தலைமுடி வெள்ளை சேலை உடுத்திருந்ததாகவும் இடத்தை காண்பித்துக் கொடுத்திருக்கிறேன். இந்த அந்த இடத்தில் ஒரு சுமை தாங்கி கட்டிவைத்தோம். அதற்குப் பிறகு இப்போது எங்களுடைய வாழ்க்கை நல்லபடியாக இருக்கிறது என்று நடிகை நளினி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications