Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நடிகையை காதலித்த 3 நடிகர்கள்.. அவரை திருமணம் செய்ய போயி.. மச்சக்கார ஹீரோ.. இப்படியுமா கிசுகிசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவை பொறுத்தவரை, நடிகைகள் பெரும்பாலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகிவிடுவார்கள். யாரை பார்த்தாலும் நம்பிவிடுவது, தங்களிடம் 10 நிமிடம் யாராவது அன்பாக பேசினால், உடனே அவர்களிடம் விழுந்துவிடுவது, என இப்படித்தான் காதல் உருவாகிறது என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Arrowroots Tamil என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, 90களில் தமிழ் சினிமாவில் நடந்த காதல் கிசுகிசுக்கள், காதல் முறிவுகள் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.

Television Actress Rumours

"சினிமா கிசுகிசு என்றால் ஏராளமாக உள்ளது.. உதாரணத்துக்கு சிம்ரன், ராஜுசுந்தரம் இருவரும் தங்கள் காதலை ஆரம்பத்தில் மறுத்தார்கள்.. "ஊர் எல்லையில் கற்பூரம் வைங்க, நான் சத்தியம் பண்ணி சொல்றேன், அப்படியொரு காதல் எங்களுக்குள் இல்லவே இல்லை" என்றார் ராஜு சுந்தரம்.. ஆனால், அரசல் புரசலா தெரிந்து, பிறகு அப்பட்டமாகவும் அந்த காதல் தெரிந்துவிட்டது.

இதற்கு ஒரு உதாரணமும் சொல்லலாம். விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த கண்ணுபட போகுதய்யா படத்திற்கு, பாரதி கணேஷ் என்பவர்தான் டைரக்டர். அது அவருடைய முதல் படம்.. அந்த படத்தில் ஒரு டூயட் கம்போஸ் செய்ய வேண்டும் என்று ராஜு சுந்தரத்திடம் கேட்டுள்ளார்.. கம்போஸ் செய்துமுடித்ததுமே, அந்த பாட்டை பார்த்தபோதுதான், விஜயகாந்த், சிம்ரன் இருவரையுமே டூயட் பாட்டில் தனித்தனியாக ஆட வைத்து எடுத்திருந்தது தெரியவந்தது.

சிம்ரனுடன் காதல்

அதாவது, விஜயகாந்த் உட்பட வேற யாருடனும் சிம்ரனை அவர் டான்ஸ் ஆட விடல.. பிறகு, ராஜூசுந்தரம், சிம்ரன் இருவரும், "ஐ லவ் யு டா" என்ற படத்தை சேர்ந்து எடுத்தனர்.. இருவரும் கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் வந்த நிலையில், திடீரென அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டது.

பிரபுதேவா ஏற்கனவே காதல் திருமணம் செய்திருந்ததால், இந்த கல்யாணம் வேண்டாம் என்று ராஜூசுந்தரத்திடம் அவரது அப்பா சொன்னதாக தெரிகிறது. அதேபோல, நயன்தாரா, பிரபுதேவா காதலும் அப்படித்தான் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்தாரா தன்னுடைய கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்தினார், மதமும் மாறினார்.

ராமனாக மாறிவிட்ட அஜித்

சினிமாவை பொறுத்தவரை, நடிகைகள் பெரும்பாலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகிவிடுவார்கள். யாரை பார்த்தாலும் நம்பிவிடுவது, 10 நிமிடம் யாராவது அன்பாக பேசினால், அவர்களிடம் விழுந்துவிடுவது, என இப்படித்தான் காதல் உருவாகிறது.

விஜய்க்கும் ஆரம்பத்தில் சங்கவியுடன் கிசுகிசு வந்தது.. சங்கவியை விஜய் திருமணம் செய்ய போகிறார் என்று கிசுகிசு வந்ததுமே, எஸ்ஏசி, பத்திரிகை ஆபீஸ்களுக்கே நேரடியாக வந்து சண்டை போட்டிருக்கிறார்.. பிறகு சுவாதியுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது..

ஆனால், அஜித் தான் அப்போது ரியல் காதல் மன்னனாக இருந்தார்.. ஹீராவுடன் குடும்பம் நடத்துகிறார் என்றெல்லாம் கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ஷாலினியை திருமணம் செய்தபிறகு ராமனாக மாறிவிட்டார் அஜித்.

சிம்புவுடன் பிரேக்கப்

சிம்புன்னாலே மச்சக்கார நடிகர் என்பார்கள்.. திரிஷாவுடன், நயன்தாராவுடன் பேசப்பட்டது.. இதில் நயன்தாராவுடன் அதிகமாக கிசுகிசுவந்தது. பிறகு ரஜினி மகளை திருமணமே செய்யப்போவதாக செய்திகள் வந்தன. அடுத்து ஹன்சிகாவுடன் பேசப்பட்டார். ஆனால், எதுக்காக பிரேக்கப் என்று தெரியவில்லை.

சிம்பு துடுக்குத்தனமாக நடந்து கொண்டு, ஏதாவது செய்துவிடுவார். இதனாலேயே ஹன்சிகா பிரிந்து சென்றுவிட்டதாக சொல்வார்கள். ஒருகட்டத்தில், "எனக்கு தான் காதல் தோல்வி, என்னைதான் எல்லாரும் ஏமாத்தினார்கள்" என்று சிம்புவே பேச ஆரம்பித்துவிட்டார்.
தனுஷையும் இப்படித்தான் ப்ளேபாய் போல சொன்னார்கள். ஆனால், சிம்பு, தனுஷ் இருவருமே இப்போது ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்துவிட்டார்கள்.

விஜயகாந்த் - ராதிகா

விஜயகாந்த் ராதிகாவை திருமணம் செய்ய நினைத்தார்.. ஆனால், ராவுத்தர் அதை விரும்பவில்லை.. விஜயகாந்த்தை முதல்வராக்கி பார்க்க வேண்டும் என்பது ராவுத்தரின் ஆசையாக இருந்தது. ராதிகாவை திருமணம் செய்தால், விஜயகாந்த்தின் இயல்பு மாறிவிடும் என்று நினைத்தார்.. பிறகு பிரேமலதா வந்தபிறகு, ராவுத்தரையே கட் பண்ணி விட்டுட்டார். அந்த வேதனையிலேயே நொந்துபோயிட்டாரு விஜயகாந்த்,

தேவயானி சரத்குமார் இருவரை பற்றியுமே கிசுகிசுக்கள் வந்தன.. பிறகு, சரத்குமார் நக்மா, சரத்குமார் ஹீராவுடன் கிசுகிசு என்றெல்லாம் பரபரப்புகள் அன்று வந்தன" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+